Monthly Archives: செப்ரெம்பர் 2018

தென்னிந்திய நினைவுகள்

1 )நாட்டை விட்டு வெளியேறுதல் 84 ஏப்பிரலில் எனக்கு குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப் பயணம். நாட்டை விட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பணம் முதலான காரணங்களால் பிரியும்போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

எக்சைல் 84 :- மீண்டும் வெளியேறுதல்

ஈழத்திலிருந்து இந்தியா வந்த அகதி மக்களுக்காகவும், ஈழ விடுதலை இயக்கங்களின் தேவைக்காகவும் அமைந்த எமது நிறுவனம், மேலும் போரில் அங்கங்களை இழந்தவர்களுக்கும் உதவ விரும்பினோம். காலிழந்தவர்களுக்கான சேவையை அளிப்பதற்காக ஜெய்ப்பூர் காலை உருவாக்க,அதைத் தயாரித்த மருத்துவர் சேத்தியை சந்தித்து செய்த உடன்படிக்கையில் ஜெய்ப்பூர் வைத்தியசாலையில் பல இளைஞர்களுக்கு செயற்கைக் கால்களை செய்வதற்குப் பயிற்றுவித்தோம். அவர்களில் பலரை … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

எக்சைல் 84 : தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள்

சென்னையின் வெப்பகாலம் . ஒரு மதிய நேரத்தில் டாக்டர் சிவநாதன் வேர்வை முகத்தில் சிந்தியபடி வந்து, “இவன் முகுந்தனோடு பெரிய கரைச்சல் ” என்றபோது அவரது முகம் அட்டகோணத்தில் இருந்தது. ஆரம்பத்தில் புரியவில்லை. தமிழ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் உமா மகேசுவரனைக் குறிப்பிடுகிறார் எனப்புரிந்ததும் “ஏன் என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன் “புளட் – … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

எக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது

ஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் . இப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அவளும் ஒரு பாற்கடல்

எஸ்.எல். எம்.ஹனிபா (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் வாசிப்பனுபவ அரங்கில் வாசிக்கப்பட்டது) சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலே போய் உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது . சிறுகதை, கவிதை மற்றும் நாவலுக்குப் பின்னாக வந்த இலக்கிய வடிவம். முக்கியமாக அமரிக்காவில் மாத வாரச் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்

இமயமலை சிறு குழந்தைபோல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது.இமயமலையின் வயது 50 மில்லியன் வருடங்கள் அவுஸ்திரேலியாவின் மத்தியில் 348 மீட்டர் உயரமான கல் மலையுள்ளது. அதனது வயது 500 மில்லியன் வருடங்கள்.அது வளரவில்லை. மத்திய அவுஸ்திரேலியாவில் உள்ள இந்த மலை ஐயேர் கல்மலை(Ayers Rock) ஒரு காலத்தில் என்று கூறப்பட்டது. இந்துக்களுக்கு இமயமலை எப்படி புனிதமானதோ,அப்படி … Continue reading

Posted in Uncategorized | 4 பின்னூட்டங்கள்