கவிதை நூல் முன்னுரை -பனிவிழும் தேசத்தில் எரிமலையின் சீற்றம்.

ஆதிமனிதன் தனது காதல், பாசம், மற்றும் நட்பு என்ற அகவுணர்வுகளை தன்னுடன் இருப்பவர்களுடன் பரிமாற மொழி உருவாகியது. வோகல்கோட்(Vocal cord) எனப்படும் குரல்நாண் மற்றைய மிருகங்களுக்கு வாய்க்கு சமீபத்திலும் மனிதர்களில் வாய்க்கு தூரத்திலும் உள்ளது. இப்படி குரல்நாண் கீழ் இறங்கியது நாங்கள் பேசுவதற்கு ஏற்றதாகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு மற்றைய மிருகங்கள் போல் ஆரம்பத்தில் மேலே இருந்து கீழ் இறங்குவதுடன் பதினாலு வயதில் குரல் நாண் தடிப்பாகிறது என்பதை எந்தத் தாய் தந்தையராலும் தெரிந்து கொள்ளமுடியும். மேலும் மனிதனது குரல்நாணினால் 50 விதமான ஒலிகளை எழுப்பமுடியும்

எமது சிறுவயதில் பேசிய மொழியே எமது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்படியாக உருவாகிய மொழியில் சந்தத்தை நாம் உருவாக்கியபோது அவை எமது மூளையில் பதிகிறது. வாய்மொழியாக வந்த சமஸ்கிருத சுலோகங்கள் புரியாதபோதிலும் எமதுமூளையில் அதிர்வை உருவாக்கி ஆழமாக பதிகின்றன.

அப்படி சந்தங்களால் உருவாகிய மரபுக் கவிதைகள் மொழி உருவாகியபோது வசன கவிதையாகிறது. மேற்கத்தைய நாடுகளில் இரண்டாயிரம் வருடங்கள் முன்பாக வசன கவிதைகள் உருவாகியதை பைபிளில் மட்டுமல்ல குறியீட்டு வடிவங்களைக் கொண்டு எழுதிய புராதன எகிப்திலும் பார்க்கமுடியும். அரசாங்கங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எழுத்துமூலம் கட்டளைகளையும்மற்றும்; வரி அறவிடல் விடயங்களை பரிமாறுவதற்கும் படித்திருப்பார்கள். அதற்கப்பால் சிறிதளவு உயர்குலத்தினர் மட்டுமே கல்வி பெறறவர்கள். நமது மொழியில் ஆங்கிலேயர் வரும்வரை மிகவும் குறைந்தவர்களே கல்வியறிவு பெற்றிருந்தார்கள்.

கல்வியற்ற மற்றவர்களுக்கு புரிவதற்காக சந்தங்களுடன் கவிதை புனைந்தார்கள். நமது தேவாரங்கள் திருக்குறள்களை எவரும் செவிவழியே கேட்டும் புரிந்துகொள்ள முடியும். இதனால் கவிஞர்கள் இசைக்கலைஞர்களாகவும் இருந்தார்கள்.

ஐரோப்பியர்களின் சகலருக்கும் கல்வி போதிக்கும் திட்டத்தால் அங்கு வசனகவிதை உருவாகியது. அது மெதுவாக நமது மொழியில் புதுக்கவிதை என்ற புதிய பெயரைப் பெற்றது. அப்படியிருந்த போதும் இன்னமும் சந்தங்களின் ஆட்சி போகாதபடியாலே பாட்டெழுதுபவர்களை எல்லாம் கவிஞர்கள் என நாம் கொண்டாடுகிறோம். இன்னமும் எதுகை மோனையையை எதிர்பார்க்கிறோம். கவிதைகள், கருத்துக்காகவும் கதைக்காகவும் போற்றப்படவேண்டும்.

எப்பொழுதும் உள்ளத்து உணர்வுகளை வெளியேற்றுவதற்கு கவிதை சிறந்தது. அதிலும் அரசியல் விடயங்களை கவிதையால் சொல்லும்போது தேக்கிவைத்த நீர் அணையை உடைத்து வருவதுபோல் இருக்கும்.

ஈழத்து போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்தில் கவிஞர்கள், கவிதையில் இலங்கை இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் சுதந்திரமான வாழ்வை எண்ணி ஏக்கங்களை வெளியிட்டார்கள். விடுதலைப்புலிகள் அரசோட்சியகாலத்தில் அவர்களுக்கு எதிராக கவிதைகள் வெளிவந்தன. ரஸ்சியாவில் ஜார் காலத்தில் புஸ்கினின் கவிதை மன்னரால் வாசிக்கப்பட்ட பின்னரே வெளிவருவதற்கு அனுமதிக்கப்பட்டது என அறிந்தேன். புரட்சிக்கு ஆதரவாக கவிஞர்கள் மாக்சிம்கோர்கி, மயவ்கோஸ்கி போன்றவர்கள் இருந்தாலும் ஸ்ராலின் காலத்தில், பிற்காலத்தில் மன அழுத்ததினால் கோர்க்கி இறந்தார் அதேபோல் மாயவ்கோஸ்கி தற்கொலை செய்தார்.

வீணாகிப்போன விடியலின் பயணம்
……………………………………………………………
ஒரு
பூரண நிலவின்
வெளிச்சத்தில்
காரணங்களோடு
படகேறக் காத்திருந்தேன்..
விடுதலை முகவர்
காலநிலை சரியில்லை
அமாவாசைக் கும்மிருட்டில்
பயணமாவோம்
எனத் தாமதித்தான்…
காத்திருந்த
சில நாட்களில்
இன்னொரு முகவர்
நாங்கள்
படகேறவுள்ளோம்
வாறியா?
எனக் கேட்டான்
எல்லாம்
ஒரே இலட்சியம்தானே
பயணமாக சம்மதித்தேன்…
நடு ஆழ்கடலில்
யாரோ வெளிச்சத்தை
எம்மீது பாய்ச்சி
இலங்கைத் தமிழரா?
எனக் கேட்டவாறு
பயணத்தை தொடர
பணித்தனர்….
கடினமாகினும்
கரையேறினோம்…
பயிற்சிமுகாமில்
எல்லாமே புதிய உறவு
வயிற்றுப் பசிக்கு
போதாத உணவு
துயில்வின் இசைவுக்கு
ஆகாத குறுகிய தூக்கம்
தாங்கிக்கொண்டேன்
விடுதலை உணர்வில்….
கடினமானதுதான்
விடுதலை…..
விரைவாக
பயிற்றுவிக்கப்பட்டோம்.
மீண்டும்
தாய்நிலம் செல்ல
பயணித்தோம்…..
குறுகிய இரவானது
எமது பயணம்….
காரணம்
ஓர் மகிழ்வுதான்…
ஆயுதங்கள் தரப்பட்டது
இடுப்பு பட்டியில் ஒன்று
தோளில் ஒன்று
கையில் இன்னொன்று…
ஆயத்தமானோம்
ஏதும் அறியாமல்
களத்தில் ஒருவன்
கூறிச் சென்றான்
நாம் இருபாலை
இயக்க முகாமொன்றை
தாக்கியழிக்கப் போகிறோம்..
இடிந்து போனேன்
மடிந்துபோவது
எம் உறவா?
வெற்றியோடு
முகாம் திரும்பினோம்
வழிநெடுக வரவேற்பு
தாகம்தீர்க்க போதைப் பானம்..
சிலர் முகங்கள் வெறுப்போடும்
பயப் பீதியோடும்……என்னை
நோக்கினர்….

அடக்கு முறையான அரசாங்கத்தை எதிர்க்கும்போது மொத்த சமூகமும் எதிர்ப்பது இலகுவானது. அப்படி கிளம்பியவர்களை அதேகூட்டத்தில் சகோதரக் கொலை செய்வதும், அதனால் பயந்து நாட்டைவிட்டு வெளியேறுவதும் வித்தியாசமானது. முன்பு அடக்குமுறையை பாவித்த எதிரியை விட்டுவிட்டு அல்லது அந்த எதிரியிடம் உயிர் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு எமது சமூகத்தில் உள்ளவர்களை எதிர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்களால் புரிந்து கொள்ளமுடியும். இப்படியான துர்ப்பாக்கியம் ஈழத்தில் நடந்தது.

இலங்கை இராணுவத்தை எதிர்த்தவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளால் வேட்டையாடும்போது ஓரளவு வசதியானவர்கள் தப்பியோடினார்கள். வறுமையான குடும்பத்தில் வந்தவர்கள் இலங்கை இரணுவத்திடம் புகலிடம் பெற்றனர். அல்லது விடுதலைப்புலிகளின் கைகளில் மரணமடைந்தார்கள்.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மற்றைய இயக்கத்தவரை கடந்த 30 வருடங்களாக பார்த்து, பேசி நண்பர்களாக பழகி இருக்கிறேன். ஓர் இருவரைத் தவிர மற்றவர்கள் எதையோ தொலைத்தவர்களாக வாழ்க்கையில் தாமரை இலைத்தண்ணீராக மிதந்தபடியேதான் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள்.
இவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டு முகாம்களில் வாழ்பவர்கள். அவர்களே இறந்தவர்களை அதிர்ஸ்டசாலி என நினைக்கவைப்பவர்கள். விடுதலைப்புலிகள் தற்போது இல்லாதபோதும் கால் நூற்றாண்டு வாழ்க்கையை தமிழ்நாட்டுமுகாம்களிலும் தொலைத்தபின் இவர்களால் மீண்டும் இலங்கை வாழ்க்கையோடு ஒட்டுவதோ புதிதாக சொந்தங்களைஉருவாக்குவதோ இலகுவானதல்ல.

விருது வாங்க
எனது பேனா
விலை போகாது…
என்
எழுதுகோல் எப்போதும்
சமூகச் சகதிகளை
உழுது பண்படுத்தும்..
முட்கள் மிகுந்த செடிக்குள்
முக்காடு போடாமல்
உள் நுளைவேன்
ஏன்? என்னில்
முட்கள் தீண்டாது..
கற்றவைகள் உம்மோடு
கவி இலக்கியமாய்
பகிர்ந்து கொள்கிறேன்.
என்
சொற்களின் கீறல்கள்
உம்மை
அம்புகளாய் தைக்கலாம்.
தைத்த கீறல்கள்
ரணங்களாய் ஆகாது
அன்பின் வார்த்தைகளாய்
குணப்படுத்தும் மருந்தாகும்..
பொய்கள்கூட சிலவேளை
அரியணை ஏறும்
வரலாறும் கூறும்- ஆனால்
என்றும் தர்மம்தான்
மறுபடியும் வெல்லும்
பெற்ற பொற்காசுகளுக்கு
நற்சான்றிதழ் கொடுத்து
மன்னர் அவையில்
கண்மூடிப் புகழேன்…
போதனை செய்ய
வந்துவிடும்
சாதனையாளர்களை
நொந்து வாயுதிரேன்.
அடுத்தவன் தவறுகளை
முதுகிற்குப் பின்னால்
முன்மொழியேன்….
விமர்சனம் என்றால்
புறஞ் சொல்லேன்.
முகத்துக்கு நேரே
முடிவாய்ச் சொல்வேன்.
பெண்ணை பேதலியேன்- அவள்
கண்ணை வருணனை செய்யேன்
மண்ணை நேசிப்பேன்.-நல்ல
மனிதர்களைப் பூஜிப்பேன்..
கற்றவை கடுகளவாயினும்
மற்றவர்சேர வழிசொல்வேன்.
விருது வாங்க
எனது பேனா
விலை போகாது…..

கவிஞர்கள் நமது நாட்டில் பொருளாதார அந்தஸ்தோ புகழோ பெறுவதில்லை ஆனால் சாதாரண மனிதனது அந்தரங்கத்து ஆசைகளான புகழ், பணம், பதவி இவைகளிற்காக எக்காலத்திலும் மயங்குவது வழக்கம். அதை எதிர்த்து நிற்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

போராளி
—————-
நடந்து முடிந்த போரில்
இடிந்து நொருங்கிய
கோயில்களும்
தேவாலயங்களும்
பள்ளிக்கூடங்களும்
நூல்நிலையங்களும்
துரிதகதி நெடுஞ்சாலைகளும்
குளத்து நீரேரிகளும்
வீதி விளக்குகளும்
வயல் நிலங்களும்
வரம்புகளும்
புனர் நிர்மாணம்பெற்றன.
ஆனால் உடைந்துபோன
உன் இதயமும் வாழ்வும்
புனர்வாழ்வு பெறவில்லை.

போராளிகள் என எமது சமூகத்தில் இருந்து உருவாகியவர்கள். அவர்களை தூக்கி பிடித்தபடி ஆயுதத்திற்கு பணம் கொடுத்தவர்கள் 2009 பின்பு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் சேர்த்த பணத்த சொந்த செலவுகளுக்கும் மற்றைய விடயங்களுக்கு விரயமாக்குகிறார்கள்.
ஈழத்தின் வடமராட்சி அல்வாய் பகுதியை பிறப்பிடமாகக்கொண்ட இப்போது புலம்பெயர் தேசமான சுவிசில் 28 ஆண்டுகாலமாகவாழும்
எனது முகநூல் நண்பர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் கவிகலி என்றபெயரில் எழுதும் கவிதைதொகுப்பிற்குமுன்னுரைகேட்டபோது நான் கவிஞன் இல்லை என மறுத்தாலும் அவர் பிடிவாதமாக எழுதும்படி கேட்டார்.
அவரது கவிதைகள் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனது நெஞ்சிற்கு நெருக்கமானவை மட்டுமல்ல நியாயமானவை. அவர்தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.

2018-04-13 17:15 GMT+10:00 Noel Nadesan :
ஆதிமனிதன் தனது காதல், பாசம், மற்றும் நட்பு என்ற அகவுணர்வுகளை தன்னுடன் இருப்பவர்களுடன் பரிமாற மொழி உருவாகியது வோகல்கோட்(Vocal cord) எனப்படும் குரல்நாண் மற்றைய மிருகங்களுக்கு வாய்க்கு சமீபத்திலும் மனிதர்களில் வாய்க்கு தூரத்திலும் உள்ளது. இப்படிகுரல்நாண் கீழ் இறங்கியது நாங்கள் பேசுவதற்கு ஏற்றதாகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு மற்றய மிருகங்கள் போல் ஆரம்பத்தில் மேலே இருந்துகீழ் இறங்குவதுடன் இந்த பதினாலு வயதில் குரல் நாண் தடிப்பாகிறது என்பதை எந்தத் தாய் தந்தையராலும் தெரிந்து கொள்ளமுடியும். மேலும்மனிதனது குரல்நாணினால் 50 விதமான ஒலிகளை எழுப்பமுடியும்
எமது சிறுவயதில் பேசிய மொழியே எமது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்படியாக உருவாகிய மொழியில் சந்தத்தை நாம்;உருவாக்கியபோது அவை எமது மூளையில் பதிகிறது. வாய்மொழியாக வந்த சமஸ்கிருத சுலோகங்கள் புரியாதபோதிலும் எமது மூளையில்அதிர்வை உருவாக்கி ஆழமாக பதிகின்றன.
அப்படி சந்தங்களால் உருவாகிய மரபு கவிதைகள் மொழி உருவாகியபோது வசன கவிதையாகிறது. மேற்கத்தைய நாடுகளில் இரண்டாயிரம்வருடங்கள் முன்பாக வசன கவிதைகள் உருவாகியதை பைபிளில் மட்;டுமல்ல குறியீட்டு வடிவங்களைக்; கொண்டு எழுதிய புராதன எகிப்தில்பார்க்கமுடியும். அரசாங்கங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எழுத்துமூலம் கட்டளைகளையும் மற்றும்; வரி அறவிடல் விடயங்களைபரிமாறுவதற்கும் படித்திருப்பார்கள். அதற்க்கப்பால் சிறிதளவு உயர்குலத்தினர் மட்டுமே கல்விபெறறவர்கள். நமது மொழியில் ஆங்கிலேயர்வரும்வரை மிகவும் குறைந்தவர்களே கல்வியறிவு பெற்றிருந்தார்கள். கல்வியற்ற மற்றவர்களுக்கு புரிவதற்காக சந்தங்களுடன கவிதைபுனைந்தார்கள். நமது தேவாரங்கள் திருக்குறள்களை எவரும் செவிவழியே கேட்டு புரிந்துகொள்ள முடியும்.; இதனால் கவிஞர்கள்இசைக்கலைஞர்களாகவும் இருந்தார்கள்.
ஐரோப்பியர்களின் சகலருக்கும் கல்வி போதிக்கும் திட்டத்தால் அங்கு வசனகவிதையை உருவாக்கியது. அது மெதுவாக நமது மொழியில்புதுக்கவிதை என்ற புதிய பெயரைப் பெற்றது. அப்படியிருந்த போதும் இன்னமும் சந்தங்களின் ஆட்சி போகாதபடியாலே பாட்டெழுதுபவர்களைஎல்லாம் கவிஞர்கள் என நாம் கொண்டாடுகிறோம். இன்னமும் எதுகை மோனையையை எதிர்பார்க்கிறோம். கவிதைகள், கருத்துக்காகவும் கதைக்காகவும் போற்றப்படவேண்டும
எப்பொழுதும் உள்ளத்து உணர்வுகளை வெளியேற்றுவதற்கு கவிதை சிறந்தது. அதிலும் அரசியல் விடயங்களை கவிதையால் சொல்லும்போதுதேக்கிவைத்த நீர் அணையை உடைத்து வருவதுபோல் இருக்கும்;
ஈழத்து போராட்டவரலாற்றில் ஆரம்பகாலத்தில் கவிஞர்கள் கவிதையில் இலங்கை இராணுவத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் சுதந்திரமானவாழ்வை எண்ணி ஏக்கங்களை வெளியிட்டார்கள். விடுதலைப்புலிகள் அரசோட்சியகாலத்தில் அவர்களுக்கு எதிராக கவிதைகள் வெளிவந்தன.ரஸ்சியாவில் ஜாரிகாலத்தில் புஸ்கினின் கவிதை மன்னரால் வாசிக்கப்பட்ட பின்னே வெளிவருவதற்கு அனுமதிக்கப்ட்டது என அறிந்தேன்.புரட்சிக்கு ஆதரவாக கவிஞர்கள் மாக்சிம்கோர்கி, மயவ்கோர்கி போன்றவர்கள் இருந்தாலும் ஸ்ராலின் காலத்தல பிற்காலத்தில் மன அழுத்ததில் கோர்கி இறந்தார் அதேபோல் மாய்கோஸ்கி தற்கொலை செய்தார்

வீணாகிப்போன விடியலின் பயணம்
……………………………………………………………
ஒரு
பூரண நிலவின்
வெளிச்சத்தில்
காரணங்களோடு
படகேறக் காத்திருந்தேன்..
விடுதலை முகவர்
காலநிலை சரியில்லை
அமாவாசைக் கும்மிருட்டில்
பயணமாவோம்
எனத் தாமதித்தான்…
காத்திருந்த
சில நாட்களில்
இன்னொரு முகவர்
நாங்கள்
படகேறவுள்ளோம்
வாறியா?
எனக் கேட்டான்
எல்லாம்
ஒரே இலட்சியம்தானே
பயணமாக சம்மதித்தேன்…
நடு ஆழ்கடலில்
யாரோ வெளிச்சத்தை
எம்மீது பாய்ச்சி
இலங்கைத் தமிழரா?
எனக் கேட்டவாறு
பயணத்தை தொடர
பணித்தனர்….
கடினமாகினும்
கரையேறினோம்…
பயிற்சிமுகாமில்
எல்லாமே புதிய உறவு
வயிற்றுப் பசிக்கு
போதாத உணவு
துயில்வின் இசைவுக்கு
ஆகாத குறுகிய தூக்கம்
தாங்கிக்கொண்டேன்
விடுதலை உணர்வில்….
கடினமானதுதான்
விடுதலை…..
விரைவாக
பயிற்றுவிக்கப்பட்டோம்.
மீண்டும்
தாய்நிலம் செல்ல
பயணித்தோம்…..
குறுகிய இரவானது
எமது பயணம்….
காரணம்
ஓர் மகிழ்வுதான்…
ஆயுதங்கள் தரப்பட்டது
இடுப்பு பட்டியில் ஒன்று
தோளில் ஒன்று
கையில் இன்னொன்று…
ஆயத்தமானோம்
ஏதும் அறியாமல்
களத்தில் ஒருவன்
கூறிச் சென்றான்
நாம் இருபாலை
இயக்க முகாமொன்றை
தாக்கியளிக்கப் போகிறோம்..
இடிந்து போனேன்
மடிந்துபோவது
எம் உறவா?
வெற்றியோடு
முகாம் திரும்பினோம்
வழிநெடுக வரவேற்பு
தாகம்தீர்க்க போதைப் பானம்..
சிலர் முகங்கள் வெறுப்போடும்
பயப் பீதியோடும்……என்னை
நோக்கினர்….

அடக்கு முறையான அரசங்கத்தை எதிர்க்கும்போது மொத்த சமுகமும் எதிர்பது இலகுவானது. அப்படி கிளம்பியவர்களை அதே கூட்டத்தில் சகோதரக் கொலை செய்வதும், அதனால் பயந்து நாட்டைவிட்டு வெளியேறுவதும் வித்தியாசமானது. முன்பு அடக்குமுறையை பாவித்த எதிரியை விட்டுவிட்டு அல்லது அந்த எதிரியிடம் உயிர் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு எமது சமூகத்தில்; உள்ளவர்களை எதிர்ப்பது என்பது எவ்வளவுகடினமானது என்பதை அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.
இப்படியான துர்ப்பாக்கியம் ஈழத்தில் நடந்தது. இலங்கை இராணுவத்தை எதிர்த்தவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளால் வேட்டையாடும்போதுஓரளவு வசதியானவர்கள் தப்பியோடினார்கள். வறுமையான குடும்பத்தில் வந்தவர்கள் இலங்கை இரணுவத்திடம் புகலிடம் பெறவோ அல்லதுவிடுதலைப்புலிகளின் கைகளில் மரணமடைந்தார்கள்.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மற்றய இயக்கத்தவரை கடந்த 30 வருடங்களாக பார்த்து, பேசி நண்பர்களாக பழகி இருக்கிறேன் ஓர் இருவரைத் தவிர மற்றவர்கள் எதையோ தொலைத்தவர்களாக வாழ்க்கையில் தாமரை இலைத்தண்ணீராக மிதந்தபடியேதான் எல்லா நாடுகளிலும்வாழ்கிறார்கள்
இவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டு முகாங்களில் வாழ்பவர்கள். அவர்களே இறந்தவர்களை அதிஸ்டசாலி என நினைக்கவைப்பவர்கள். விடுதலைபுலிகள் தற்போது இல்லாதபோதும் கால் நூற்றாண்டு வாழ்க்கையை தமிழ்நாட்டு முகாங்களிலும் தொலைத்தபின் இவர்களால் மீண்டும் இலங்கை வாழ்க்கையோடு ஒட்டுவதோ புதிதாக சொந்தங்களை உருவாக்குவதோ இலகுவானதல்ல.
விருது வாங்க
எனது பேனா
விலை போகாது…
என்
எழுதுகோல் எப்போதும்
சமூகச் சகதிகளை
உழுது பண்படுத்தும்..
முட்கள் மிகுந்த செடிக்குள்
முக்காடு போடாமல்
உள் நுளைவேன்
ஏன்? என்னில்
முட்கள் தீண்டாது..
கற்றவைகள உம்மோடு
கவி இலக்கியமாய்
பகிர்ந்து கொள்கிறேன்.
என்
சொற்களின் கீறல்கள்
உம்மை
அம்புகளாய் தைக்கலாம்.
தைத்த கீறல்கள்
ரணங்களாய் ஆகாது
அன்பின் வார்த்தைகளாய்
குணப்படுத்தும் மருந்தாகும்..
பொய்கள்கூட சிலவேளை
அரியணை ஏறும்
வரலாறும் கூறும்-ஆனால்
என்றும் தர்மம்தான்
மறுபடியும் வெல்லும்
பெற்ற பொற்காசுகளுக்கு
நற்சான்றிதழ் கொடுத்து
மன்னர் அவையில்
கண்மூடிப் புகழேன்…
போதனை செய்ய
வந்துவிடும்
சாதனையாளர்களை
நொந்து வாயுதிரேன்.
அடுத்தவன் தவறுகளை
முதுகிற்குப் பின்னால்
முன்மொழியேன்….
விமர்சனம் என்றால்
புறஞ் சொல்லேன்.
முகத்துக்கு நேரே
முடிவாய்ச் சொல்வேன்.
பெண்ணை பேதலியேன்-அவள்
கண்ணை வருணனை செய்யென்
மண்ணை நேசிப்பேன்.-நல்ல
மனிதர்களைப் பூஜிப்பேன்..
கற்றவை கடுகளவாயினும்
மற்றவர்சேர வழிசொல்வேன்.
விருது வாங்க
எனது பேனா
விலை போகாது…..

கவிஞர்கள் நமது நாட்டில் பொருளாதார அந்தஸ்தோ புகழோ பெறுவதில்லை ஆனால் சாதாரண மனிதனது அந்தரங்கத்து ஆசைகளான புகழ், பணம், பதவி இவைகளிற்காக எக்காலத்திலும் மயங்குவது வழக்கம். அதை எதிர்த்து நிற்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

போராளி
—————-
நடந்து முடிந்த போரில்
இடிந்து நொருங்கிய
கோயில்களும்
தேவாலயங்களும்
பள்ளிக்கூடங்களும்
நூல்நிலையங்களும்
துரிதகதி நெடுஞ்சாலைகளும்
குளத்து நீரேரிகளும்
வீதி விளக்குகளும்
வயல் நிலங்களும்
வரம்புகளும்
புனர் நிர்மாணம்பெற்றன.
ஆனால் உடைந்துபோன
உன் இதயமும் வாழ்வும்
புனர்வாழ்வு பெறவில்லை.
போராளிகள் என எமது சமூகத்தில் இருந்து உருவாகியவர்கள். அவர்களை தூக்கி பிடித்தபடி ஆயுதத்திற்கு பணம் கொடுத்தவர்கள் 2009 பின்பு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் சேர்த்த பணத்த சொந்த செலவுகளுக்கும் மற்றய விடயங்களுக்கு விரயமாக்குகிறார்கள்.

ஈழத்தின் வடமராட்சி அல்வாய் பகுதியை பிறப்பிடமாகக்கொண்ட இப்போது புலம்பெயர் தேசமான சுவிசில் 28 ஆண்டுகாலமாக வாழும் எனது முகநூல் நண்பர் கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் எழுதும் கவிதை தொகுப்பிற்கு முன்னுரை கேட்போது நான கவிஞன் இல்லை என மறுத்தாலும் அவர் பிடிவாதமாக எழுதுபடி கேட்டார்.

அவரது கவிதைகள் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனது நெஞ்சிற்கு நெருக்கமானவை மட்டுமல்ல நியாயமானவை. அவர் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்.

“கவிதை நூல் முன்னுரை -பனிவிழும் தேசத்தில் எரிமலையின் சீற்றம்.” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: