மாதம்: ஜூன் 2018
-
கவிதை நூல் முன்னுரை -பனிவிழும் தேசத்தில் எரிமலையின் சீற்றம்.
ஆதிமனிதன் தனது காதல், பாசம், மற்றும் நட்பு என்ற அகவுணர்வுகளை தன்னுடன் இருப்பவர்களுடன் பரிமாற மொழி உருவாகியது. வோகல்கோட்(Vocal cord) எனப்படும் குரல்நாண் மற்றைய மிருகங்களுக்கு வாய்க்கு சமீபத்திலும் மனிதர்களில் வாய்க்கு தூரத்திலும் உள்ளது. இப்படி குரல்நாண் கீழ் இறங்கியது நாங்கள் பேசுவதற்கு ஏற்றதாகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு மற்றைய மிருகங்கள் போல் ஆரம்பத்தில் மேலே இருந்து கீழ் இறங்குவதுடன் பதினாலு வயதில் குரல் நாண் தடிப்பாகிறது என்பதை எந்தத் தாய் தந்தையராலும் தெரிந்து கொள்ளமுடியும். மேலும் மனிதனது…
-
இனநல்லிணக்கத்தில் இலக்கியவாதிகள் வகிபாகம்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) இன நல்லிணக்கம் தொடர்பான இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மேற்கு அவுஸ்திரேலியா மேடொக் பல்கலைக்கழகத்தின்…
-
மட்டுநகர் மைந்தன்- செல்லையா இராசதுரை
கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் — (03) பத்திரிகை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து ஆன்மீகவாதியான மட்டுநகர் மைந்தன் முருகபூபதி “அத்திக்காய், காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ, நீ என்னைப்போல் பெண்ணல்லவோ” என்ற பாடலை எமது மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள். 1962 ஆம் ஆண்டில் பி.ஆர். பந்துலு இயக்கிய பலே பாண்டியா படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த பாடல். “இந்தப்பாடலில் நிறைய காய்கள் வருவதனால், சென்னை கொத்தவால்…
-
நௌஸாத்தின் கொல்வதெழுதல் 90
கொல்வதெழுதல் 90, ஆங்கிலத்தில் பைனரி(Binary) எனப்படுவது வகையை சேர்ந்தது. எளிமையான புளட்(simple Plot). நாவல் முத்துமுகம்மது என்ற இளைஞனது பாத்திரத்தை சுற்றியே கதை செல்கிறது. அதிகம் கல்வியோ, வசதியோ அற்று ஊரில் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும் சாதாரணமான கிழக்கு மாகாணத்தில் உள்ள பள்ளிமுனைவாசி, அரசியலில் ஈடுபட்டு பாராளாமன்ற அங்கத்தவராகுவது கதையின் சுருக்கம். முத்துமுகம்மது என்ற கதாநாயகனுக்கு மிகவும் சவாலான, கொடுமையான, வில்லானாகச் சப்புச்சுல்தான். மாமி மகள், மைமுனா முத்துமுகமதின் காதலி. இந்த மூவரையும் பிரதானமான பாத்திரங்களாக கதை பின்னப்படுகிறது.…
-
உன்னையே மயல் கொண்டு -கடைசி அத்தியாயம்
நத்தார் விடுமுறை ஆரம்பித்து விட்டது. சந்திரனுக்கு ஓய்வாக இருந்தது. வேலை எதுவும் செய்யவில்லை. பெப்ரவரி மாதம் மெல்பேனில் வேலைக்கு போக வேண்டும். மார்கழி இறுதி வரையும் கொலசிப் காசு கிடைக்கும். மெல்பேணில் முதல் சம்பளம் எடுக்கும்வரை சேமிப்பில் குடும்பம் நடத்த வேண்டும். சோபா பெற்றோருடன் வெளியே போயிருந்தாள். சந்திரன் மட்டும் தனியே இருந்தான். கார் சாவியோட சேர்ந்திருந்த ஜுலியாவின் வீட்டு சாவி இவனை நெருடிக் கொண்டிருந்தது. “இந்த திறப்பை கடிதத்தோடு அனுப்புவது தான் நல்லது. மெல்பேனுக்கு இடம்…
-
தென்னமரிகாவின் தித்திக்கா வாவி
அந்தீஸ் மலைமேல் இரயிலில் பிரயாணம் செய்த புனா நகரத்திற்குவர இரவாகி விட்டது. வாகனத்தில் வந்து ஹோட்டேலுக்குள் சென்றுவிட்டோம் குறைந்த பிராணவாயுவை சுவாசித்தபடி செய்த பிரயாணத்தால் ஏற்பட்ட களைப்பில் படுத்துவிட்டோம். காலையில் எழுந்து ஹோட்டலின் உணவுக் கூடத்திற்கு வந்தபோது திவ்வியமான கனவுக்காட்சியாக விரிந்தது. எங்களது ஹோட்டேலில் இருந்து நூறு மீட்டரில் இருந்தது தித்திக்கா வாவி. வாவி நீரின் மையப்பகுதி காலை சூரிய ஒளிபட்டுப் பொற்கடலாக மினுங்கியது.. வாவியின் புருவங்கள் புற்கள் வளர்ந்து நீர் மேலாக பச்சை நிறத்தில் இருந்தது.…
-
என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்
வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி முருகபூபதி யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள். தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும்…
-
உன்னையே மயல் கொண்டால் – பாகம் பதின்மூன்று
ஆய்வுக்கூட மேசையில் சந்திரனுக்கு வந்த கடிதங்கள் இருந்தன. அதில் ஒரு கடிதத்தை உடைத்ததும் உள்ளே அழைப்பிதழ் ஒன்று இருந்தது. சிட்னியின் ஹிளிப் பகுதியில் ஜுலியாவின் ஓவியக் கண்காட்சி நடப்பதாக இருந்தது. தொலைபேசியை எடுத்து ஜுலியாவின் இலக்கத்தை அழுத்தினான். மனத்தில் பதிந்து விட்ட சில தொலைபேசிகளின் இலக்கங்களில் இதுவும் ஒன்று. “எனக்குத் தெரியாதே…! எப்போது ஒழுங்கு செய்தாய்? “ என பரபரப்பாக பேசினான். “சந்திரன் ஆறுதலாகக் கேள். நான் சொல்லுகிறேன். ஹிளிப்பில் உள்ள பாடசாலையில் வாரவிடுமுறை நாட்களில்…
-
‘அசோகனின் வைத்தியசாலை’ ஜெயமோகன் எழுதிய முன்னுரை.
ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியாவில் பலர் அது ஈழத்தவர்களை மகிழ்விக்குமென்பதனாலேயே திரும்பச் சொன்னார்கள். இன்னும் சிலர் இலக்கியமென்பது அனுபவப்பதிவு என்ற எளிய சமவாக்கியத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அதைச் சொன்னார்கள். அதற்கேற்ப அன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய இதழ்கள் வந்து குவிந்தன. 1990ல் சுந்தர ராமசாமியின் இல்லத்தில்…
-
எகிப்தில் சிலநாட்கள்19: எகிப்திய வைத்தியரின் சமாதி
கடல் சூழ்ந்த எங்கள் எழுவைதீவுக்கு கிழமைக்கு ஒருமுறை அருகில் உள்ள அனலைதீவிலிருந்து வைத்தியர் வருவார். அவரை சந்திப்பதற்கு எப்பொழுதும் கூட்டம் நிற்கும். சடுதியாக நோய் வந்தால் வள்ளத்தின் மூலம் பக்கத்தூருக்குச் செல்வோம். சிலநாட்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய நோய் வந்தால் தினம் இருமுறை நடைபெறும் மோட்டார் படகு சேவையை உபயோகிப்போம். எம்மோடு சேர்ந்து வாழும் நோய்களான தொய்வு, சர்க்கரை வியாதி, (நீரழிவு) போன்றவற்றிற்கு பக்கத்து ஊர் வைத்தியரின் வருகையை எதிர்பார்த்து நிற்போம். ஒவ்வொரு கிழமையும் அம்மா…