
ஜுலியாவின் கதை
“நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் பண்ணையில் பால் மாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்தோம். பெற்றோருக்கு பண்ணையில் வேலை செய்யவே நேரம் போதாது. நாங்களும் பண்ணை மிருகம் போல வளர்ந்தோம்.
இரண்டாம் உலகப்போரில் கலந்துவிட்டு வந்த தந்தையின் கவனம் முழுவதும் பண்ணைமீது இருந்தது. போர்க்காலத்தில் பராமரிப்பு குறைந்து பண்ணை நல்லநிலையில் இருக்கவில்லை. மாடுகள் செம்மறியாடுகள் என வாங்கி பண்ணையை பெருக்கினார். பின்னர் பண்ணையில் மாடுகள் கன்று போடுதல் பால் கறத்தல் என்று வேலைகள் உண்டு. சம்மரில் செம்மறியாடுகளின் உரோமங்கள் வெட்டுதல் நடைபெறும். இதற்கு ஆட்களை விசேடமாக ஒழுங்கு செய்தல் என வருடம் முழுவதும் வேலை இருக்கும்.
அந்த கோடைகாலம் எனக்கு பன்னிரண்டு வயது நடந்து கொண்டிருந்த வருடம். எங்கள் பண்ணையில் செம்மறியாடுகளின் ரோமங்களை வெட்டுவதற்காக இரண்டு கொட்டகைகள் உண்டு. ஒரு கொட்டகையில் ரோமம் வெட்டுதல் நடக்கும். மற்றதில் வேலைஆட்கள் தங்குவார்கள். ரோமம் வெட்டும் தொழிலாளர்கள் ஒரு கிழமை வந்து தங்கி வேலை செய்வார்கள். இவர்களில் பலர் இளம் வயதினர். அவுஸ்திரேலியாவின் பல இடங்களில் இருந்து வந்து வேலை செய்வார்கள் . இப்படி ரோமம் வெட்டுபவர்களை வேடிக்கை பார்ப்பதும் அவர்களுக்கு உதவி செய்வதிலும் எனது நேரம் கழியும். அந்த வருடம் எங்கள் வீட்டில் செம்மறியாடுகளுக்கு உரோமம் வெட்ட ஆறுபேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் விக்டர். நியூசீலண்டை சேர்ந்தவன். இவன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
விக்டர் டெனிம் காற்சட்டையும், கையில்லாமல் உள்பெனியனும் அணிந்தபடி செம்மறியாடுகளை இழுத்து வந்து கால்களுக்கு இடையில் வைத்து வெட்டுவான். இவனது அகட்டிய கால்களுக்கு இடையில் வைத்து செம்மறியின் கழுத்து தோள்பட்டை ரோமத்தை வெட்டும்போது குனிந்தபடி இவனது வயிறு தோல் ஊஞ்சலில் பதிந்திருக்கும். ஒரு கையால் செம்மறியின் மோவாயை பிடித்தபடி கழுத்துப் பகுதியை செதுக்குவது தனி அழகு. செம்மறிகள் ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டு நடப்பது போல இருக்கும். விக்டர் ரோமத்தை வெட்டிய பின்பே செம்மறி அசைந்து கொடுக்கும்.
மின்சார கிளிப்பரால் வெட்டும்போது திமிறினால் செம்மறியாட்டு தோல் கிழிந்து விடும். அதை தைக்க வேண்டும். இரண்டு கைகளினாலும் குனிந்தபடி வேலை செய்வதால் தோல் வளையத்தில் வயிற்று பகுதி பதிந்திருக்கும். மற்றவர்கள் நாளொன்றுக்கு எண்பது செம்மறியாடுகள் என்றால் விக்டர் நூறு செம்மறியாடுகளின் ரோமத்தை வெட்டுவான்.
இப்படி விக்டரை பார்த்துக் கொண்டிருந்தபோது அவனது அகலமான தோளும் அதில் பச்சை குத்தியிருந்த சிவப்பு ரோசாவும் எனக்கு பிடித்திருந்தது. அவனது கால்கள் இரண்டும் தூண்களை போல் உறுதியானவை. இவை அவனைக் கவனிக்க வைத்தது.
என்னைப் பார்க்கும் விக்டர் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு மௌனமாகி விடுவான். எதுவும் பேசுவதில்லை. மற்றவர்கள் என்னோடு பேசமாட்டார்கள். அக்காவைக் கவருவதிலேயே அவர்கள் குறியாக இருப்பார்கள். அவளுக்கு பதினெட்டு வயது. அழகாக இருப்பாள். அதிலும் ரொபேட் என்பவன் அக்காவைப் பார்த்ததும் ரோமம் வெட்டுவதையே நிறுத்தி விடுவான். அக்காவினால் அவனுக்கு பணம் நட்டம். ஆடுகளின் தொகைக்கு ஏற்பவே பணம் கொடுப்போம். அக்காவிற்கு ஏற்கனவே பாய்பிரெண்ட் இருப்பதால் அவர்களை அக்கா பொருட்படுத்துவதில்லை.
செம்மறியாடுகளை வெட்டியதும் காலையில் எல்லாருக்கும் பணம் பட்டுவாடா செய்தார். அந்த இடத்தில் விக்டரை மட்டும் காணவில்லை. நான் போய் ரொபேட்டிடம் “எங்கே விக்டர்? “ என்றேன்.
“விக்டர் உள்ளே படுத்திருக்கிறான்.”
நான் விக்டர் படுத்திருந்த கொட்டகைக்கு சென்றேன். விக்டர் சரிந்தபடி மேற்சட்டையில்லாமல் அரைகாற்சட்டையுடன் படுத்திருந்தான். அவனது முதுகுப்பக்கம் எனக்கு தெரிந்தது. அவனது முறுக்கேறிய முதுகு பக்கத்தையும் பிற்பக்கத்தையும் பார்த்துக் கொண்டு நின்றேன். வாசாலில் நின்று நான் வாசல் வெளிச்சத்தை மறைத்திருக்கக் கூடும். அல்லது அவன் எனது நிழலைக் கண்டிருக்கலாம். சிறிது நேரத்தில் விக்டர் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தான்.
“என்ன உடம்புக்கு விக்டர்.? “
“அதுதான் நான் கடந்த ஒருநாளில் நான் பேசிய முதல் வசனம்.”
எந்த பதிலும் இல்லை.
மீண்டும் கேட்டேன்.”
இவளுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ நானும் விடாமல்; “ஏதாவது மருந்து மாத்திரை வேணுமா” என்றேன்.
இம்முறை சிரிப்பு மட்டும் வந்தது.
“அம்மாவிடம் இருந்து பனடோல் வாங்கித்தருகிறேன் “ எனக்கூறியபடி பதிலுக்கு காத்திராமல் அம்மாவைத் தேடி மருந்துப் பெட்டியில் இருந்து பனடோலை தேடி எடுத்து வந்தேன்.
பனடோல் கொடுத்ததும் “நன்றி “ என கூறினான். நான் அந்த இடத்தை விட்டு வந்தேன்.
அன்றுமாலை மொத்த செம்மறிகளின் உரோமம் பொதிகளாக கட்டப்பட்டு கிடந்தது. ரவுனுக்கு சென்று பொதிகளை எடுத்துச் செல்ல ஒழுங்கு பண்ண வேண்டும்.
மறுநாள் காலை விக்டர் மெதுவாக எழுந்து பணத்தை அப்பாவிடம் பெற்றான். “விக்டர்; உடல் நலமில்லாவிடில் நின்று இளைப்பாறி விட்டு நாளை செல்லலாம் “ என்றார்.
விக்டர் மீண்டும் கொட்டிலுக்கு செல்ல மற்றவர்கள் தங்களது கார்களில் வெளியேறி விட்டனர். நாங்களும் வானம்பூல் நகரத்துக்கு சென்றோம். நகரத்துக்குள் செல்வது தேவையான பொருட்களை வாங்கவும் உரோம பொதிகளை எடுத்துச் செல்வதற்கும் என்றாலும் இந்தப் பயணங்கள் எங்களுக்கு மிகவும் கொண்டாட்டங்களாக அமைந்தன. அப்படியே கடற்கரைக்கும் போய் வருவோம். எங்கள் பள்ளித்தோழிகளுடன் அக்காவின் போய்பிரெண்டும் வந்து விடுவான். பண்ணையில் வாழும் எங்களுக்கு இப்படி நகரத்துக்கு செல்லும் நாள்கள்தான் உலகத்தைப் பார்ப்பது .தொலைக்காட்சி எல்லா வீடுகளிலும் வந்து சேராத காலம் அது. இரண்டாம் உலகப்போர் முடிந்த காலமாகையால் ஞாயிறுக்கிழமைகளில் தேவாலயம் போவதும் கடற்கரைக்கு போவதுமே முக்கிய பொழுதுபோக்குகளாகும்.
நாங்கள் அன்று வீடுவந்து சேர இரவாகி விட்டது. இப்போது விக்டர் மட்டும் கொட்டகையில் தங்கி இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. கொட்டகைப்பக்கம் இருட்டாக இருந்தது. விக்டர் போய் விட்டான் என நினைத்து அவனது அறைக்குச் சென்றேன்.
எங்கும் இருட்டாக இருந்தது. எதுவித சத்தமும் கேட்கவில்லை. விக்டர் இல்லை என நினைத்து வெளியே வர முயன்றபோது வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் உரோமபொதிகளில் தடுமாறி விழுந்து விட்டேன். அப்பொழுது என்னை ஒரு கை தடுத்து நிறுத்தியது.
விக்டர் நின்று கொண்டிருந்தான். இருட்டிலும் கம்பீரமான உருவம் தெரிந்தது. என்னை பிடித்து கைகளால் தூக்கினான். இப்போது எனது முகம் அவனது முகத்துக்கு மிக அருகில் இருந்தது.
“விக்டர் என்னை விடு.”
என்னை விட்டதும் ரோம பொதிக்கு மேல் இருந்தேன்.
“எப்படி உடம்பு சுகமே விக்டர்? “
எனது பனடோலுக்கு நன்றி கூறி என் கழுத்தில் கையை வைத்தான்.
நான் தடுக்கவில்லை. விக்டரின் உடல் வியர்வை மணத்தது. மிகவும் நெருக்கமாக இருந்தான். எந்த இடைவெளியும் இல்லாமல் அவனது தேகம் என்மேல் படர்ந்தது. தனது கைகளால் எனது கவுனை கழட்டினான். நான் தடுக்கவில்லை. விக்டரின் ஆண்குறி என்னை உரசியது.
“விக்டர் வேண்டாம் பிளீஸ்” என்று என் குரல் மெதுவாக வந்தது. விலக முடியவில்லை. பின்னாலே ரோம பொதிகள். விக்டர் எனது உள்ளாடையையும் கழட்டிவிட்டு வேட்டைநாயின் வேகத்துடன் என்னை பல இடங்களில் முத்தமிட்டான். கதற விரும்பினேன். இப்போது சத்தம் வரவில்லை.
சில நிமிடத்தில் அடிவயிற்றில் கூர்மையான கத்தி யொன்று சொருகப்பட்டது போன்று உணர்ந்தேன். வேதனையில் அப்படியே உறைந்து போய் விட்டேன். அதன்பின் அடிவயிற்றில் அரத்தால் அராவுவது போல் இருந்தது. எதுவும் செய்ய முடியவில்லை. கனவில் நடப்பது போன்று உணர்வில் இருந்தேன். விக்டர் என்னை விட்டு எழுந்தபோது பாரம் குறைந்தது. போன்ற உணர்வு ஏற்பட்டாலும் அடிவயிறு தணலாக கனன்று கொண்டிருந்தது.
விக்டர் லைட்டை போட்டிருக்க வேண்டும். இப்பொழுது ஒரளவு வெளிச்சம். சில நிமிடங்களின் பின் நிமிர்ந்தபோது நிர்வாணமாக பொதிகளில் கிடந்தது தெரிய வந்தது. இரண்டு கால்களிலும் அடிவயிற்றில் இருந்து இரத்தம் பாதங்கள் வரையும் கோடு போட்டிருந்தது. எனக்கு பக்கத்தில் கூனிக் குறுகியபடி விக்டர் நின்றான். அவனது கைகளில் எனது உடைகள் இருந்தன.
ஆத்திரத்துடனும் வேதனையுடனும் எழும்ப முயற்சி செய்தேன். முடியவில்லை. அடிவயிற்றில் இருந்து கால்களை அசைக்க முடியவில்லை. என் நிலையை பார்த்து விட்டு தூக்கி நிறுத்தினான் விக்டர். எனது முகத்தைப் பார்க்காமல் அந்தப் பக்கம் திரும்பினான். பக்கத்தில் கிடந்த துணியொன்றால் அடிவயிறில் இருந்து கால்களில் வழிந்த இரத்தத்தை துடைத்துவிட்டு எனது நிக்கரையும் சட்டையையும் அணிவித்தான். ஏதோ பொம்மைக்கு உடையலங்காரம் செய்வது போல் இருந்தது. அவனது செயல் மெதுவாக கால்களை எடுத்து வைத்து நடந்த போது அந்தரத்தில் கம்பியில் நடந்தது போன்று இருந்தது. மெதுவாக எனது வீடு சென்று எனது அறைக்குள் படுத்து விட்டேன்.
மறுநாள் திங்கள்கிழமை. நித்திரையில் இருந்து எழுந்தபோது நண்பகல் ஆகிவிட்டது. முன்வாசலுக்கு வந்து கொட்டகையை பார்த்தபோது விக்டரின் காரை காணவில்லை. அடிவயிற்றில் நோ எடுத்தது. குளிர் நீரை தொட்டியில் நிறைத்து விட்டு படுத்திருந்தேன்.
அம்மா வந்து கதவை தட்டினாள். “ஏன்டி இவ்வளவு நேரம் பாத்ரூமில் இருக்கிறாய். “இரவு சாப்பிடவில்லை என்ன நடந்தது? .
“அடிவயிறு நோகிறது. கொஞ்சம் என்னை விடு நான் இன்று பாடசாலைக்கு போகவில்லை.”
செம்மறியாடுகளுக்கு வயிற்றுபூச்சி மருந்து கொடுக்கும் அவசரத்தில் அம்மா என்னை மறந்துவிட்டாள்.
இந்த சம்பவம் என்னை மாற்றியது. விக்டர் என்னை கெடுத்துவிட்டான் என அம்மாவிடம் சொல்லவில்லை. அக்காவிடம் சொன்னால் எப்படியும் அம்மாவிடம் விடயம் போய்சேரும். சிறிய கிராமம் ஆனதால் எல்லோருக்கும் தெரியவரும் என்ற வெட்கம் என் மனதைத் தடுத்துவிட்டது. இதைத்தவிர வேறு காரணமும் உண்டு. விக்டரை நெருங்கியது தவறா? இதில் விக்டரின் பங்கு எவ்வளவு? எனது தவறு எவ்வளவு என்பது என் அறிவுக்கு பிடிபடவில்லை.
பாடசாலைக்கு போய்வந்தாலும் பாடங்களை கிரகிக்க முடியவில்லை. என்மனதில் நான் தீவொன்றில் படகுடைந்து தத்தளிப்பது போன்ற உணர்வு ஏற்படும். மொத்தமான எனது வகுப்பு மாணவ மாணவிகளில் நான் மட்டும் தனிமையாக இருப்பது போல் நினைத்துக் கொண்டு என்னை நானே தனிமைப் படுத்தினேன். எனக்கு சிநேகிதர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஓவியங்கள் வரைவது மட்டும் எனக்குப் பிடித்த ஒருவிடயமாக இருந்தது. மற்றைய பாடங்கள் எதுவும் என் தலைக்குள் ஏறவில்லை. வீட்டிலும் படிக்காமல் ஓவியம் வரைவது அப்பா அம்மாவுக்கு பிடிக்கவில்லை. அம்மாவிடம் வாக்கு வாதப்பட்டு அப்பாவையும் தவிர்த்துக் கொண்டு ஒளிந்து விடுவேன். மிருகங்கள் பறவைகளுடன் பழகுவதும் அவைகளை படமாக வரைவதும் அந்த காலத்தில் ஏற்பட்ட பழக்கமாகும்.
ஒருநாள் மாடுகளுக்கு தண்ணியில் குடல்புழுவுக்கு மருந்து கலந்து வைக்கச் சொல்லியிருந்தார் அப்பா நான் மறந்துவிட்டேன். எனக்கு சரியான திட்டு கிடைக்கும் என நினைதது எனது கையில் வெட்டிக் கொண்டேன். எதிர்பார்த்தது போல் என்னை திட்டவந்த அப்பா இரத்தத்தைக் கண்டதும் பயந்துவிட்டார்.
இப்படி நாலு வருடங்கள் சென்றிருக்கும். எனக்கே புரியாத விடுகதையாக நான் இருந்தேன். அக்காவும் திருமணம் முடித்து வீட்டை விட்டு போய்விட்டாள். எனக்கும் பசுமாடுகளும் செம்மறியாடுகளும் அலுத்து விட்டது. நான் மெல்பேணுக்கு வந்து ரெஸ்ரொரண்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் மார்க்கை சந்தித்து திருமணம் செய்யாமல் தாம்பத்தியம் செய்தேன். ஐந்து வருடம் தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருந்தது. இந்தக் காலத்தில் சிபிலும் மைக்கலும் பிறந்தார்கள். கார்பென்ரராக வேலை செய்து வந்த மார்க்குக் வேலை போய் விட்டது. குடிக்க துவங்கி விட்டான். போதை ஏறியதும் என்னை அடிப்பது வழக்கமாகி விட்டது. மார்க்கினது வன்முறைகள் தாங்காது விவாகரத்துப் பெற்றுக்கொண்டேன்.
மீண்டும் பிள்ளைகளோடு பண்ணைக்கு போய் தங்கியிருந்தோம். அப்பா இறந்து போக அம்மா பண்ணையை விற்று விட்டு அக்காவோடு மெல்பேணில் தங்கினாள். நான் மாறுதலுக்காக பிள்ளைகளோடு சிட்னிக்கு வந்தேன். யோசப் எனும் இத்தாலியரை மணந்து கொண்டேன். அதுவும் இரண்டு வருடங்கள் நீடித்தது. இவன் வன்முறையாளன் அல்ல. ஆனால் பெண்களை மதிக்க தெரியாது. என்னை தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அடிமையாக கருதினான். என் குணத்துக்கு இது ஒத்து வரவில்லை. பிரிந்து விட்டோம்.
பத்து வருடங்கள் எவனும் வேணாம் என்ற திடசங்கற்பமாக இருந்து விட்டேன். பிள்ளைகளைப் பார்ப்பதே பெரிய விடயமாக இருந்தது. அதனால் கலவி, ஏன் ஆண் வர்க்கத்தையே மற்ந்து வாழ்ந்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நைட்கிளப்பொன்றின் சாலிய கானாகாரனை சந்தித்தான். இதன் பின் அவனை சில இடங்களில் சந்தித்தேன். இப்படியான பழக்கத்தை வைத்து சாலிய என்னை திருமணம் செய்ய வற்புறுத்தினான். பிள்ளைகள் பெரியவர்களாகி விட்ட காலத்தில் தனிமையும் இருந்தது. காதல் இல்லாவிட்டாலும் கவர்ச்சியும் தனிமையும் சேர்ந்து என்னைச் சம்மதிக்க வைத்தது.
சாலியாவின் திருமணம் ஒரு வருடத்தில் கசந்து விட்டது. சாலியா தனக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெறுவதற்காகத் தான் திருமணம் செய்தான் என்பது புரிந்ததும் மனம் கசந்துவிட்டது. உடனே பிரிந்தால் சாலியாவின் வதிவிட விசா இரத்தாகும் என்பதால் இரண்டு வருடங்கள் பொறுத்திருந்து சமரீதியாக பிரிந்தோம்.”
ஜுலியாவின் கதை சந்திரனின் மனதைக் கரைத்தது.
இவள் வாழ்க்கையில் எவ்வளவு சோகங்கள் உள்ளது. சிரித்த முகத்தையும் கைகளுக்குள் அடங்காத மார்பகங்களையும் மனதை கிள்ளி இழுக்கும் பின்புறங்களை மட்டும் தான் இரசித்திருக்கிறேன். இவளது மனதில் எவ்வளவு இரகசியங்கள் புதைந்து கிடக்கிறன. எவ்வளவு ஆழமான மனவடுக்கள் உள்ளதே. சிறுவயது பாலியல் வன்முறைக்கு உட்பட்டு மனஅழுத்தம், தற்கொலை முயற்சி, மூன்று திருமண முறிவுகள் என எவ்வளவு சோகங்கள் வெவ்வேறு காலத்தில் வித்தியாசமான ஆழத்தில் இவள் மனத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சோக உணர்வொன்று சந்திரனின் மனதைப்ப பிசைந்தது. அழவேண்டும் போல் தோன்றியது. கண்ணீர் முட்டியது.
“ஏன் சந்திரன் கண் கலங்கி விட்டது.”
“எப்படி உன்னால் இப்படி பிரச்சனைகளுடன் வாழ முடிந்தது?.”
“ உனக்கு இந்த விடயங்களை ஏன் சொன்னேன் தெரியுமா?”“
“நீயே சொல்லு.”
“என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல. பெண்களை புரிந்து கொள்வது ஆண்களுக்கு அவசியம். எல்லா ஆண்களும் இளம் வயதில் ஆண்குறிகளாலே சிந்திப்பார்கள். இப்படியான பலரை நான் சந்தித்தேன். விக்டரின் உடலால் நான் கவரப்பட்டேன். அவனது அமைதியான சுபாவம் எனக்குப் பிடித்தது. ஏன் அவனது உடலின் வேர்வை மணமும் எனக்கு அந்தரங்கத்தில் இதமாக இருந்தது என்றுதான் சொல்வேன். இதேவேளையில் அவனோடு உடலுறவு கொள்வதற்கு நான் நினைக்கவேயில்லை. அதை நினைக்க முடியாத காலம் அது. உடல்ரீதியாக காம உணர்வு ஏற்படாத சிறுமிப் பருவம். விக்டரின் பலாத்கார உடல் உறவு இன்றும் நினைவுக்கு வரும்போது அடிவயிற்றில் இருந்து குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போல் இருக்கும்.
மார்க் குடிபோதையில் உடல் உறவுக்கு வரும்போது அந்த மணத்தை என்னால் சகிக்க முடியவில்லை.. என் வெறுப்புகளை அவன் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதில்லை. ஏதாவது சொன்னால் சண்டையில் முடியும். யோசப் இந்த விடயத்தில் மோசம் இல்லை. ஆனால் அவன் ஆணாதிக்க பன்றி. நான் மிகவும் கஸ்டப் பட்டது சாலியாவிடம்தான். இவனுக்கு உடல்உறவு இரவும் பகலும் தேவையாக இருந்தது. இவனை திருமணம் செய்த காலத்தில் இரண்டு பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். எனக்கும் சமாளிக்க முடியாமல் இருந்தது.
ஜுலியா இறந்தகாலச் சோகங்களில் மிதப்பவளாகத் தோன்றினாள்.
“உன் கசப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றான் சந்திரன்.
“என்கதை கேட்டு இரவு இரண்டு மணியாகி விட்டது. இன்று என்னோடு படுக்கிறாயா? “.
“நான் வீட்டை போனாலும் தனியத்தான் படுக்க வேண்டும் உனக்கு சம்மதம் என்றால் படுக்கிறேன்.”
“சரி படுக்கைக்கு வா”.
சந்திரனுக்கு பக்கத்தில் யன்னல் இருந்தது. விலகிய திரைச்சீலையூடாக தெருவிளக்கின் ஒளிக்கதிர் கசிந்து கொண்டிருந்தது. தெருவின் ஓடும் வாகனங்கள் தங்களது பிரகாசமான ஒளியை அந்த திரைசீலையின் இடைவெளியூடாக எப்போதாவது அடித்துவிட்டு சென்றன. ஜுலியாவின் சுவாசம் மெதுவான குறட்டை ஒலியாக வந்து கொண்டிருந்தது. அந்த ஒலிக்கு எற்ப ஏறி இறங்கிய மார்புகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் இங்கே இவளுக்கு பக்கத்தில் படுத்து கிடக்கிறேன். அங்கே சோபா என்ன செய்வாள். இப்படியான தொடர்பு எப்படி நியாயம்? “. மனச்சாட்சியின் குறுகுறுப்புகளுக்கு ஆளாகி சந்திரன் நெடுநேரமாக தூங்கவில்லை. கடைசியில் அதிகாலையில் தூங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் எழும்புவதற்கு காலை எட்டுமணியாகி விட்டது. அவசரமாக புறப்படத் தயாராகியவனிடம் சந்திரன் ‘எப்பொழுது வருவாய்? என போர்வைக்குள் இருந்தபடி ஜுலியா கேட்டாள்.
“நான் போனில் கூறுகிறேன்” என கூறியபடி அவசரமாக வெளியே வந்தான்.
———
மறுமொழியொன்றை இடுங்கள்