சாதாரணமானவர்களது அரசியல் கூற்றை நான் கடந்து போவேன். ஆனால் பேராசிரியர் துரை மனோகரனைக் கடந்துபோக முடியவில்லை .
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் போட்டியிட்ட நினைப்பது வயிற்றில் பால்வார்ப்பது போன்று பத்தி ஒன்று ஞானத்தில் எழுதியிருக்கிறார்.
அதில் பல இடங்களை ஆசிரியர் எழுத்தைத் தடித்த எழுத்தாக்கியிருக்கிறார் (Bold) பத்திரிகையில் சில விடயங்களைத் தடிப்பாக்கும்போது அது பிரசாரமாகிறது. ஞானம் ஆசிரியர் சிலரது கூற்றை ஆதரிக்கிறார் என்பது கருத்தாகிறது. அரசியலில் ஒரு பகுதியை பிரச்சாரம் செய்வதாகிறது. ஆசியர் தனது ஆசிரியதலையங்கமாக இருந்தால் அதை ஓரளவு ஏற்றுக்கொள்ளமுடியும் (அது மிகவும் முக்கியமான தேசியப் பிரச்சனையெனில்)
பேராசிரியர் துரைமனோகரது அரசியல் கருத்து எங்பொழுதும் காரமற்றது. எழுத்தில் நம்பிக்கையில்லை . இப்பொழுதுகூட சுமந்திரனை பெயர் சொல்ல விரும்பாமல் ஒரு முந்திரிக் கொட்டை என்கிறார் . சுமந்திரனே கட்சியின் பேச்சாளர் அவர் கருத்து சொல்வதில் என்ன பிழை ?
தமிழ்பேராசியர் கொஞ்சம் லொஜிக் படித்திருப்பாரல்லவா?
முக்கியமான தவறு -விக்கினேஸ்வரன் மீண்டும் போட்டியிடுவது வயிற்றில் பால் வார்ப்பதா அல்லது தமிழரது தலையில் பால் வார்ப்பதா என்பது அவரவர் சொந்தக் கருத்து. – ஆனால் பத்தி எழுதும்போது எதற்காக அவர் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்- .அவர் தமிழருக்கு செய்த சாதனைகள் என்ன என்று கூறாது விட்டால் அந்தப் பக்கம் வீணாகியது மட்டுமல்ல உங்கள் போன்ற கல்வியாளர் மக்கள் வரிப்பணத்தில் படித்தது – மக்களுக்கு அறிவைப் புகுத்தி சிந்திக்க வைக்க . அரசியல்வாதிகள் ஏற்கனவே அம்பேல் என்பது போல் கல்வியாளர்களுமென்றால் யாரை நம்புவது ?
அடுத்த ஞானத்தில் வடமாகாணத்தில் விக்கினேஸ்வரனது மாபெரும் சேவைகளை பட்டியல் போட்டிருக்குமென நம்புகிறேன்
மறுமொழியொன்றை இடுங்கள்