இன்காவின் புனிதப்பள்ளத்தாக்கு

peru-sacred-valley-ollantaytambo
ஒலயன்தம்போ நகரம்

சோவியத் சாம்ராச்சியம் தானாக உள்ளக உடைவால் அழிந்தது போன்றது. அது போன்றது
ஒரு இலட்சம் படையினரை வைத்திருந்த இன்கா சாம்ராட்சியம் 180 ஸ்பானிய படையினருக்கும் அவர்களது 62 குதிரைகளுக்கும் பணிந்தது இராச்சியத்தைப் பறிகொடுத்தது. பல திருப்பங்கள் கொண்ட மெகா சீரியல் போன்று சுவாரசியமான கதை.இதில் ஸ்பானியர்கள் பங்கு மிகவும் சிறிதே.

எப்படி நடந்தது?

புனித பள்ளத்தாக்கு எனப்படும் பகுதி கொஸ்கோ நகருக்கு ஆடுத்துள்ள பள்ளத்தாக்கு இந்தப் பகுதியாலே மச்சுப்பிச்வுக்கு வாகனத்தில் செல்லவேண்டும். இப்பகுதியில் இன்காவின் முக்கிய நகரங்கள் இருந்தன. இவைகள் தற்பொழுது அழிந்துவிட்டாலும் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் படிமுறை விவசாயம் (Terrace Agriculture) செய்ததை பார்க்க முடிந்தது. இந்த விவசாயப் பகுதிகளுக்கு தண்ணீர் கால்வாய்கள் மலையில் இருந்து வெட்டப்படிருந்தது.அக்காலத்தில் இங்கிருந்தே சோளம் உருளைக்கிழங்கு பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு கொஸ்கோ நகரத்திற்கு வினியோகிக்கப்பட்டது

இந்த பள்ளத்தாக்கின் முடிவில் இன்காவின் பிரபலமான அழிவடைந்த நகரம் உள்ளது. கற்பாறைகள் உள்ள இடங்களை அடுத்தே இன்கா மக்கள் குடியிருப்பு நகரங்களைக் கட்டும்போது பழய மலைப்பகுதியையும் உள்வாங்கி கற்க்களால் கட்டியிருப்பதை பல இடத்தில் அவதானிக்கமுடிந்தது. ஒவ்வொரு நகரங்களும் பாதுகாப்பதற்கான இராணுவ கேந்திர நகரங்களாக இருந்தன.

img_7043
நாங்கள் சென்ற ஒலயன்தம்போ நகரம் இன்னமும் மக்கள் வாழ்கிறார்கள் அந்த நகரத்தை ஒட்டி இடிபாடான மாளிகைகள் இருந்திருக்கிறது. அதற்கு பல படிமுறையாக கட்டப்பட்டிருந்த கட்டிடம் இரு பகுதியாக பிரிக்க முடியும். ஒரு பகுதி இன்காகளின் வழிபாட்டுக்கான ஆலயப்பகுதி மற்றயது இறந்தவர்களை மம்மிகளாக வைக்குமிடமாக இருந்தது. இன்காக்கள் தங்களது மூதாதயரை மம்மிகளாக பாதுகாக்கும் வழக்கம் கொணடவர்கள். இறப்பவர்கள் தங்களுடன் தொடர்ந்து இருப்பதாக எண்ணுபவர்கள். செதுக்கப்பட்ட மிகப் பெரிய ஆறு கற்களால் ஒரு சுவர் உள்ளது. அந்த கற்கள்; மிகவும் இறுக்கமாக ஒன்றுடன் ஒன்று பொருந்தியுளளன கட்டிடங்களின் எதிர்ததிசையில் உள்ள குன்றில் உணவு தானியங்களை சேகரிக்கும் கழஞ்சியப் பகுதியிருந்தது. மலையின் உயரத்தில் உணவுகள் வைத்தால் அவற்றை ஈரலிப்பில் இருந்து பாதுகாத்து அதிக காலம் வைத்திருக்க முடியும்

பெருவின் வரலாற்றில் ஒலயன்தம்போ நகரம் முக்கியமானது.

தொடர்சியாக அந்தப் படிக்கடடுகளில் ஏறி உச்சியில் நின்றபோது அந்த பகுதி பல கிலோமீட்டர்கள் கண்ணிற்குத் தெரிந்தது. எதிரிகளைக் தொலைவில் வரும்போதே கண்காணிப்பதற்கும் அவர்களைத் தாக்குவதற்கும் இராணுவரீதியில் சிறந்த இடம். இதை அருகே ஆறு பாய்வதால் விவசாயத்திற்கு பொருத்தமானதால் தன்னிறைவான நகரமாகும். . ஸ்பானியர்களுக்கு எதிராக இன்கா அரசன் கிளர்சி நடத்திய காலத்தில் தலைநகரமாக இருந்தது. 15 நூற்றாண்டில் இருந்து இந்தப்பகுதியில் தொடர்ந்து மக்கள் வாழ்கிறார்கள்

பச்சக்குட்டி மன்னன் இந்தப் பகுதியில் தனது சொந்தமான மாளிகையாக கட்டினான். பிற்காலத்தில் ஸ்பானியர்களை எதிர்த்த மான்கோ இங்கா அரசரின் தலைநகரமாக இருந்தது.

1532ல் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்பாக இரண்டு பக்கத்தால் அம்மை என்ற நோய் தாக்கியதால் இன்கா மக்களில் சாதாரணமானவர்கள் மட்டுமல்ல அரசகுலத்தினர், பிரபுக்கள், மற்றும் படைவீரர்கள் நோயால் அழிந்தார்கள். இந்த அழிவு இன்கா மக்களின் மனஉறுதியைக் குலைத்தது.. இதுவரை காலமும் நோய்கள் கெட்ட ஆவிகளால் உருவாகுவதாகவும் தங்கள் மூதாதையரும் கடவுளும் அவற்றிலிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை கொண்ட இன்கா மக்களுக்கு, நோயால் அழிவு வந்தபோது தாங்கள் தங்கள் கடவுளால் கைவிடப்பட்டதாக நினைத்தார்கள்.

வடதிசையில் இருந்து இருந்து அம்மை, நோய் 1519 ல் ஸ்தாபிக்கப்பட்ட பனாமாநகரத்தின் ஊடாக வந்தது. தங்கள் கடவுள் கைவிட்டதால் கிறிஸ்தவமதத்தில் சேர்ந்து நோயில் இருந்து தப்புவதற்கான முயற்சியை எடுத்த இன்கா மக்களுக்கு. அக்காலத்தில் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் தங்களது புனித நீரை தெளித்து இன்கா மக்களை கத்தோலிக்கர்களாக்கினார்கள். அந்த தண்ணீரே நோயின் வைரசைக் கடத்தியதாhல் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியற்ற இன்கா மக்கள் விரைவில் பரலோகம் சென்றார்கள். நோயைப் பற்றிய அறிவு ஸ்பானியருக்கும் இருக்கவில்லை .ஆனால் அவர்களிடம் நோயெதிர்ப்புச் சக்தி இருந்தது.

1925கிழக்குப் பகுதியால் போர்த்துக்கேயர் (Aleixo Garcia) ஒருவர் இன்காக்களின் சேமிப்புக்களஞ்சியத்தில் இருந்த வெள்ளிகளை கவர அமேசன் காட்டில் வாழும் ஆதிவாசிகளைச் சேர்த்துக்கொண்டு தற்போதய பொலிவியா பிரதேசத்தின் ஊடக வந்து அங்கிருந்த வெள்ளிகளைக் கவர்ந்தார். ஆனால் அவர் மூலம் அந்தப் பிரதேசத்தில் அம்மை நோய் பரவத்தொடங்கியது.

1528 இதனால் இன்கா மன்னர் (Huayana Capac) மட்டுமல்ல அவருக்கு வாரிசாக இருந்தவர்கள் மற்றும் இராணுவத்தினர் அம்மைநோயால் இறந்துவிட்டார்கள்.

பல தாரங்களைக்கொண்ட இன்கா மன்னர்களுக்கு ஏராளமான பிள்ளைகள் இருந்தார்கள். மன்னனிதும் அவரது அடுத்த வாரிசுவின் இறப்பு அரச குடும்பத்தில் கலகத்தை உருவாக்கியது. அரசனின் இரண்டு பிள்ளைகளான ஹொஸ்கர் Huasacar) அத்தாகுல்ப ((Atahualpa )என்ற இருவரினதும் 4 வருடமாக நடந்த சண்டையில் ஏராளமான வீரர்கள் இறந்தார்கள். இறுதியில் ஹொஸ்கர் மட்டுமல்ல அவரது பெண்கள் உட்பட முழுக் குடும்பமும் கொலைசெய்யப்பட்டது. அவர்களது குலத்துக்குரிய மம்மிகள் எரிக்கப்பட்டது இறுதியில் அத்தாகுல்ப அரசுக் கட்டிலேறினான். அவன் ஒரு வருடம் மட்டும் ஆளும் காலத்திலே ஸ்பானியர் வந்தார்கள்.

வரலாற்று ஆசிரிகளால் இன்கா சாம்பிராசசியத்தின் அழிவுக்கு ஸ்பானியர்களைவிட அவர்களால் வந்த அம்மைநோயே முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது அடுத்தது அவர்களிடையே நடந்த தாயாதிப் போர். இவைகள் இரண்டும் ஸ்பானியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

1531ல் பனமாவில் இருந்த ஸ்பானியர்களின் பிரான்சிஸ்கோ பிஷாரோ பசிபிக்கடலோரமாக கப்;பலில் ஒரு பீரங்கியுடன் வந்து வடக்கு பகுதியான- தற்போதய ஈகுவடோர்க் கரையில் இறங்கி கூடாரமிட்டிருந்தான். அவர்களுக்கு ஆரம்பத்தில் உள்ளுர் மக்களை கொல்லாமல் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றும்படி ஸ்பானிய அரசரிடமிருந்து உத்தரவு இருந்தது.

அக்காலத்தில் இருந்த இங்கா அரசன் அத்தாகுல்பா அந்தப் பிரதேசத்தில் இருந்ததால் அவனை ஸ்பானியர்கள் குழு சந்திபதற்கு விரும்பி கேட்டபோது அத்தாகுல்ப மறுத்தான். மிகவும் குறைந்தவர்களே ஐரோப்பியர் என்பதால் பின்பு இணங்கி தனது குறைந்த படைகளோடு சிவிகையில் வந்தான். அவனது வருகையை எதிர்பார்த்து ஆயுதபாணியான ஸ்பானியவீரர்கள் ஒழித்து நின்றார்கள். கத்தோலிக்க பாதிரி ஒருவர் சிவிகையில் வந்த இன்கா மன்னன் எதிரில் சென்று பைபிளைக் கொடுத்து இதில் ‘இறைவனின் வாக்கியம் கேட்கும்’ என்றார். இன்கா மன்னன் எடுத்து காதோரம் வைத்துவிட்டு பைபிளை நிலத்தில் எறிந்தபோது ‘கிறிதவர்களே ஏன் தாக்காமல் இருக்கறீர்கள்? நான் உங்களை பாவ விமோசனம் செய்கிறேன்’; என இன்காக்களைக் தாக்குபடி ஸ்பானியர்களுக்கு உத்தரவிட்டார்.

பீரங்கி, குதிரை என்பன கொண்ட ஸ்பானியர்களோடு நடநத சண்டையில் நிலைகுலைந்தனர். இன்காப் படையினர். அத்தாகுல்பவின் கழுத்தில் பெஸரோ குத்துவாளை வைத்து சிறைப்பிடித்தான். உயிரைப் பணயம் வைத்தபோது இன்கா மன்னன் அத்தாகுல்ப சண்டையை நிறுத்தும்படி உத்தரவிட்டான்.

இன்கா மன்னைனை சிறைவைத்து வைத்து அவனை விடுவிக்க கப்பமாக அறை நிரம்ப வெள்ளியும் பொன்னும் ஸ்பானியர் கேட்டார்கள். அதற்கான பெரும்பாலான பொன் ((Sun temple – coricancha) ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

எட்டு மாதத்திற்கு மேல் பயணக் கைதியாக வைக்கப்பட்டிருந்தபோது அரசன் அற்ற நாட்டில், தயாதி அரசியல் மற்றும் அம்மை நோயால் நிலை குலைந்தது. ஏற்கனவே குஸ்கோ மக்கள் அத்தாகுல்பவின் சண்டையால் எதிர்பானவர்கள். அத்துடன் இன்கா அரசரால் வெற்றி கொள்ளப்பட்ட மற்றய இனமக்கள் பெருமளவில் ஸ்பானியர்களை ஆதரித்தார்கள்.

ஸ்பானியர்கள் அத்தாகுல்பவின் கழுத்தை நெரித்து கொன்று கைப்பொம்மை அரசனை உருவாக்கி இன்காக்களின் செல்வத்தை கொள்ளையடித்தார்கள்.

கைப்பொம்மை அரசன் இறந்துவிட மீண்டு அரசவம்சத்தில் வந்த மான்கா இன்கா என்பவனுக்கு அரச பதவி கொடுத்தார்கள். மன்கோ இன்காவுக்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. இறுதியில் காவலில் வைத்தார்கள் மான்கோ இன்காவின் மனைவியை ஸ்பானியர்கள் பால்வன்முறை செய்தார்கள். அவமானமடைந்த மான்கோ இன்கா, தப்பியோடி கிளர்ச்சி செய்யும்போது ஒலயன்தம்போ நகரம் முக்கியமாகிறது.

மன்கோ இன்கா தனது கிளர்ச்சிக்காக 30000 சாதாரண விவசாயிகளை கொண்டு , ஸ்பானியர்கள் மேல் போர் தொடுத்தபோது அவர்களது முக்கிய இடமாக ஒலயன்தம்போ இருந்தது. இங்கிருந்து கொஸ்கோ மீது படையெடுத்த இன்கா வீரர்கள் மரத்திலான ஈட்டிகள், வில்லுகள் , கல்லால் ஆன சுத்தியல், மற்றும் வெண்கல கத்திகளுமே வைத்திருந்தார்கள் அவர்களது மார்புக் கவசமாக துணிகளில் செய்தவை. ஆனால் ஸ்பானியர் இரும்புவாள், இரும்பு முனை ஈட்டி, இரும்பு சங்கிலிகளான உடல்க்கவசங்களையும் பாவித்தார்கள். வேகத்தை கொடுக்க குதிரைகள் இருந்தன .இன்கா தவிர்ந்த மற்றய இனத்து வீரர்கள் பலமடஙகில் ஸ்பானியருக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.

பல மடங்கு பலமிருந்தபோதும் ஸ்பானியர்கள் தோற்றார்கள். பின்பு ஆத்திரமடைந்த ஸ்பானியர்கள ஒலயன்தம்போ நகரத்தின்போது குதிகைளுடன் பல்லாயிரக்கணக்கான கனிக்க வீரர்களுடன் (மற்றய இனம்) படை எடுத்தான்

இங்கு நடந்த சண்டை வரலாற்றுப் புகழ் பெற்றது. இந்த சண்டையில் குதிரைகளை தடம்போட்டு விழுத்தியபின் அதில் சவாரி செய்யும் வீரர்களைப் பாய்ந்து கல்லான சுத்தியலால் அடிப்பது இன்காக்களின் முக்கிய போர் முறையாக இருந்தது ஏராளமான ஸ்பானிய வீரர்கள் இறந்து 150 ஸ்பானியர்களும் 100 குதிரைகளும் மிஞ்சினார்கள். மிஞ்சியவர்கள் (coricancha) ஆலயத்தில் ஒளிந்தார்கள் அப்போழுது கானாரி வீரர்கள் இன்காவீரர்களுடன் சண்டையிட்டார்கள்.. இதனால் சண்டை தொடர்ந்து இரு பக்கத்திலும் ஏராளமானவர்கள் மரணமடைந்தனர் மன்கோ இங்கா இந்த கிளர்சியை முழு இடத்திற்கு விஸ்தரித்தான்.

இந்த வெற்றி தொடர்ந்து நிலைக்கவில்லை. ஸ்பானியருக்கு மேலும் படைவீரரகள் மற்றய தென்னமரிக்க காலனிகளில் இருந்து வந்தார்கள் . விவசாயிகளான இன்காகள் சண்டையைத் தொடராது விவசாயதிற்கு போகவேண்ய நிர்பந்தமிருந்தது. ஏராளமான தெனனமரிக்க ஆதிவாசிகள் ஸ்பனியர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வருட முடிவில் மான்கோ இன்கா கொஸ்கோவிற்கு தொலைவான இடத்தில் 1537ல் (Vikabamba ) புதிய தலைநகரை அமைத்துக்கொண்டார்கள் அங்கு இந்த இன்கா அரசு1571 வரையும் நிலைத்திருந்தது

ஒலயன்தம்போவல் இருந்து நாங்கள் போனஇடம் ஒரு சிறிய பண்ணை. அங்கு லாமா அல்பக்கா என்ற என்ற மிருகங்கள் வளர்கப்படும் இடமாகும் இவையுடன்
img_7021
(Llama, Alpaca , Vicuna, Guanaco) வகுனா மற்றும் குனகோ என்ற நான்கும் ஒட்டகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் லாமா பாரத்தைக் கொண்டு செல்லும் மிருகமாக பாவிக்கப்படும் அத்துடன் இறைச்சிக்காக வளர்ப்பார்கள் அல்பக்காவின் உரோமம் மிகவும் நுண்ணியது கம்பளி உடைகள் தயாரிப்பார்கள். வகுனாவின் உரோமமே மிகவும் நுண்ணியது இதிலிருந்தே இன்கா இராசாக்கள் தங்கள் உடைகளைத் தயாரிப்பார்கள். இவைகளைப் பிடித்து உரோமத்தை எடுத்துவிட்டு மீண்டும் காட்டில் விட்டுவிடுவாகள். குனகோ காட்டில் வளரும்.
இந்த பண்ணையில் இவை இருக்கின்றன. தென்னமரிக்காவிற்கு பிரத்தியேகமானவை பெரும்பாலானவை பெருவிலே மட்டும் அதிகமாக உளளன.

நாங்கள்போன புனித பள்ளத்தாக பிரதேசம் மலைகளை கொண்டது அதன் சாய்வுகளில் யூகலக்பகபடஸ் மரம் நிறைய காணமுடிந்தது. அவுஸ்திரேலியாவில் வளரும் இவை அந்திய மலையடிவாரதத்தில் மிகச்செழிப்பாக வளர்ந்தன. இதைபற்றி நான் கேட்டபோது ‘விரைவாக வளர்வதால் மக்கள் இங்கு பயிரிடுகிறாகள்.’

தொடர்ந்து புவியதிர்வு நிகழும் இடமான பெருவின் அந்தீஸ் மலைப்பகுதியில் சாதாரணமக்கள் வாழும் கட்டிடங்கள் செங்கல்லுகளைக் கொண்டு மிகவும் சாதரணமாக கட்டடப்பட்டிருந்தது . அதைப் பற்றிக் கேட்டபோது ‘இங்கு இன்னமும் கட்டங்களுக்கான விதிமுறைகள் இல்லை. நினைத்தபடி கட்டமுடியும்’ ‘

ஐந்து நூற்றாண்டுகள் முன்பு இன்கா அரசுகள் சிந்தித்த விடயங்களை தற்கால அரசுகள் சிந்திகவில்லையே என் மனத்தில் எண்ணிக்கொண்டேன்.

“இன்காவின் புனிதப்பள்ளத்தாக்கு” மீது ஒரு மறுமொழி

  1. Oh! Great story! Sad story of Inga Indians !
    They are relatives of Dravidians!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: