Monthly Archives: மே 2018

உன்னையே மயல் கொண்டு-பாகம் பதினொன்று

சோபா காலையில் படுக்கையில் இருந்தபடி தனது கடந்த காலத்தை இரை மீட்டுக் கொணடிருந்தாள். எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளபோது நினைக்க கூடியது கடந்தகாலம் மட்டும்தானே. எதிர்காலம் இல்லாத முதியவர்கள் மட்டும் தான் கடந்த காலத்தை நினைப்பார்கள். பதினெட்டு வயதில் திருமணமாகி பத்தொன்பது வயதில் குழந்தையைப் பெற்று இருபதாவது வயதில் கடந்த காலத்தில் மிதப்பவளின் மனோநிலையை என்னவென்று சொல்வது? … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

மச்சுபிச்சு

என் வாழ்க்கையில் இவ்வளவு அழகானது மட்டுமல்ல, வரவேற்று உபசரிப்பும் கொண்ட இரயிலைக் கண்டதில்லை. வர்ணிக்க விரும்பினால் வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும். காலை நேரத்தில் இன்கா தலைநகரானன குஸ்காவில்இருந்து மச்சுப்பிச்சு செல்வதற்காக நாங்கள் ஏறிய சொகுசு இரயில் மச்சுபிசுவைக் கண்டறிந்த ஹரன் பிங்கம் என்ற ஜேல் பல்கலைக்கழகப் சரித்திரப் பேராசிரியரின் பெயரில் பெரு அரசால் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

” எழுத்துச்சித்தர் “பாலகுமாரன் நினைவுகள்

அஞ்சலிக்குறிப்பு: முருகபூபதி ” என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். ” என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Memories of late K.G Amaradasa -an Ardent Tamil Literary Lover &Advocate for National Unity

Written By: L. Murugapoopathy, Australia “Some might say that if a Sinhala man marries a Tamil woman or a Tamil man marries a Sinhala woman, then national unity will be born. I don’t think so. If people of different ethnic … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உன்னையே மயல் கொண்டால்- பாகம் பத்து

ஜுலியாவின் கதை “நான் விவசாய குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் பண்ணையில் பால் மாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்தோம். பெற்றோருக்கு பண்ணையில் வேலை செய்யவே நேரம் போதாது. நாங்களும் பண்ணை மிருகம் போல வளர்ந்தோம். இரண்டாம் உலகப்போரில் கலந்துவிட்டு வந்த தந்தையின் கவனம் முழுவதும் பண்ணைமீது இருந்தது. போர்க்காலத்தில் பராமரிப்பு குறைந்து பண்ணை நல்லநிலையில் இருக்கவில்லை. மாடுகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பேராசிரியர் துரை மனோகரனது பத்தி -ஞானம்

சாதாரணமானவர்களது அரசியல் கூற்றை நான் கடந்து போவேன். ஆனால் பேராசிரியர் துரை மனோகரனைக் கடந்துபோக முடியவில்லை . முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் போட்டியிட்ட நினைப்பது வயிற்றில் பால்வார்ப்பது போன்று பத்தி ஒன்று ஞானத்தில் எழுதியிருக்கிறார். அதில் பல இடங்களை ஆசிரியர் எழுத்தைத் தடித்த எழுத்தாக்கியிருக்கிறார் (Bold) பத்திரிகையில் சில விடயங்களைத் தடிப்பாக்கும்போது அது பிரசாரமாகிறது. ஞானம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சொல்லத்தவறிய கதைகள்- அங்கம் 16

மூன்று தலைமுறையாக இலங்கை அரசியலில் ஒலிக்கும் இரண்டு எழுத்துக்கள் நூற்றுக்கணக்கான மலர் மாலைகள் மண்ணில் சருகாகின! 65 பவுண் தங்கமாலைக்கு என்ன நேர்ந்தது….? முருகபூபதி 1965 ஆம் ஆண்டு. எனக்கு 14 வயதிருக்கும். அந்த ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது. அந்த அரசில் டட்லி சேனாநாயக்கா பிரதமரானார். தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்