மிருகவைத்தியர்கள் மகாநாட்டிற்கு முதல்நாள் ஊர்சுற்றிப் பார்பதற்கு போட்டிருந்த திட்டம் பிசுபிசுத்துவிட்டது. கொலம்பியாவில், அரசாங்கத்திற்கும் இடதுசாரி கொரில்லாக்களுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் காரணமாக கற்றகேனாவுக்கு வருகை தந்த முக்கிய வெளிநாட்டுப் பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக போட்டிருந்த பாதைத்தடைகள் எங்களையும் தடைசெய்துவிட்டது. இதுவரையில் பார்க்காத முக்கிய இடங்களுக்கு மகாநாடு முடிந்த பின்பாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் கரிபியன் கடலில் பெரிய சூறாவெளியே உருவாகியது .
மத்தியு என்ற பெயரில் சூறாவளி ஒன்று மையம் கொள்வதாக அறிவித்தல் எமது ஹொட்டேல் மனேஜர் மூலமாகத் தெரிய வந்தது. மகாநாட்டின் கடைசி நாளை இரத்து செய்துவிட்டு வழிகாட்டியை அரைநாளுக்கு ஒழுங்கு படுத்தினோம். 35 வயதான சில்வியா என்ற ஸ்பானிய வம்சாவளிப்பெண்; எமக்கு ஒழுங்கு செய்யப்பட்டாள். ஆரம்பத்தில் கட்டகேனா விமான நிலயத்தில் முக்கிய பிரயாணிகளை ஒருங்கிணைபபாளராக வேலை செய்ததாக கூறினாள். கொலம்பியாவில் ஆங்கிலம் தெரிந்தவர்களை கண்டுபிடிப்பது இலகுவானதல்ல.
அவளோடு நடந்தபோது நாங்கள் சென்ற இடம் பிளாசா (Plaza de San Pedro Claver) கறுப்பு அடிமைகளை வேலைத்தலங்களிலும் சுரங்கங்களிலும் கட்டாயமான வேலைகளில் ஸ்பானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் அமர்ததியபோது அவர்களில் பலர் தப்பி ஓடும்போது, மீண்டும் சிறைப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அப்படியாக தப்பிய சிலருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்த கத்தோலிக்க மதத்தின் உப பிரிவில் ஒன்றான ஆகஸ்ரின் பிரிவைச் சேர்ந்த மதகுருவின் சேவையை கவுரவிக்கும் முகமாக அவரது பெயரில் பிளாசா அழைக்கப்படுகிறது. பிளசாவின் பக்கத்தில் அழகாக திருத்தப்பட்ட தேவாலயமும் உள்ளது. அந்த பிளாசாவில் நவீன ஓவியவடிவமாக அக்காலத்தில் உள்ளவர்கள் தொழில்களை செய்வதை இரும்பில் சிற்பமாக செய்து வைத்திருக்கிறார்கள் . கையால் உருட்டி துணி தைக்கும் தையல் இயந்திரத்தருகே நின்று எனது மனைவி புகைப்படம் எடுத்தார்.அதற்கு அருகில் ஒரு கட்டிடத்தை அடைந்தபோது பலர் கூடி நிலத்தில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள் அங்கு எட்டிப்பார்த்தபோது கொலம்பிய அழகு இராணிகளையும் மற்றும் கொலம்பியவிலிருந்து உலக அழகிகளாக தேர்தெடுக்கப்படட்வர்களையும் பளிங்குத்தரையில் வர்ணப் படங்களாக பதித்திருந்தார்கள்.
உலக அழகிகளை உற்பத்தி செய்யும் இரு நாடுகள் வெனிசுவேலா அடுத்தது கொலம்பியா. கொலம்பிய பெண்களைப் பார்த்த பின்பு எனக்கும் கொலம்பியா தேவதைகள் வாழும் இடமாகத் தெரிந்தது. உலகத்திலே அதிகமான அழகுமாற்று(cosmetic surgery) சத்திரசிகீச்சை நடக்கும் நாடுகளில் கொலம்பியா முனனணியில் உள்ளது.
கோட்டையின் மதிலை நோக்கி நடந்தபோது ஒரு இடத்தில் கடற்பகுதியை ஒட்டிய மதிலின் உள்பகுதியில் கொலம்பியாவில் உள்ளுர் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்களை விற்கும் கடை வீதியிருந்தது. கடலை நோக்கி பீரங்கிகளையும் அதற்கான வெடி மருந்துகளை சேகரிக்கும் இராணுவ தளபாடங்களின் சேகரிப்பு கிடங்கு பிற்காலத்தில் 18 ம்நூற்றாணடில் கைதிகளையடைத்து வைக்கும் சிறையாக இருந்தது.தற்பொழுது கைவினைக் கலைப் பொருட்களின் சந்தையாகி விட்டது.
கற்றீனா
எங்களது வழியில் அழகான திரையரங்கு இருந்தது. அந்தத் திரையரங்கத்தின் முன்பாக ஒரு அழகான பொன்னில் வடிக்கப்பட்ட நிர்வாணமான பெண்ணின் சிலை இருந்தது. அதைப்பற்றி சில்வியாவிடம் கேட்டபோது ‘கற்றீனா என்ற ஆதிவாசிப் பெண். அந்த பெண் சிறுமியாக இங்கு வந்த ஸ்பானியப் படையினரால சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்படடபோது கற்றகேனாவை ஸ்தாபித்த ஸ்பானித்தளபதி (Pedro Heredia) அவளை விடுவித்து அவளுக்கு ஸ்பானிய மொழியை பயிற்றி அவளை மொழிபெயற்ப்பாளராக உபயோகித்தார். தற்போது அவளைக் கவுரவிக்கும் முகமாக ஸ்பானிய மொழியில் வரும் திரைப்படங்களுக்கு அவளது உருவம்கொண்ட விருது (ஓஸ்கார்போல்) கொடுக்கப்படுகிறது. இந்த திரையரங்கில் அடிக்கடி ஸ்பானிய சர்வதேசப் திரைப்பட விழாக்கள் நடக்கும்’ என்றாள்
அங்கிருந்து இன்னுமொரு பிளாசாவிற்கு சென்றபோது ஒரு படுத்தபடியே இருக்கும் பெண்ணின் சிலையை சுற்றி பலர் நின்றார்கள. குண்டுப் பெண்ணின்சிலை எனப் மிகப்பிரபலமானது. பேர்ணாண்டோ பொரேரோ (Fernando Botero). உறுப்புகளை பெரிதாக்கி சிற்பம் செய்வதை இந்த வெண்கலச்சிலை காட்டுகிறது. இந்த சிலையின் ஒரு மார்பு உல்லாசப்பிரயாணிகளால் தடவப்பட்டு மினுங்கியது. இந்த சிலை இருக்கும் சதுக்கம் அக்காலத்தில் அடிமைகளை விற்கும் சந்தையாகும்.
நோபல் பரிசுபெற்ற கபிரியல் மார்குவஸ் மண்டலீனில் பிறந்து கற்றகேனவில் உள்ள பத்திரிகை அலுவலகததில் இளைஞராலாக வேலை செய்ததாக சில்வியா கூறியபடி அந்த அலுவலகத்தை காட்டினாள். தற்போது அங்கு பத்திரிகையில்லை. அந்த இடத்தின் கதவுகள் பூட்டப்படடிருந்தன. ஆனால் ‘இதோ இந்த வீடுதான் கபிரியல் மார்குவஸ் பிற்காலத்தில் வாழ்ந்தவீடு’
கடற்கரையோரத்தில் சிவப்பு நிறத்தில் அழகான மாடி வீடு. அதற்கு உயரமான மதில் கட்டபட்டிருந்து
சில்வியா கபிரியல் மார்குவஸ் சந்தித்த சொந்த அனுபவத்கைக் கூறினாள்
‘சில வருடங்கள் முன்பாக விமான நிலயத்தில ஒருங்கிணைப்பாளராக வேலை செய்தபோது விமானத்தில் இறங்கிய கபிரியல் மார்குவஸசை அழைத்துக் கொண்டு சுங்க அலுவலகத்திற்கு சென்றேன். அவரின் கடவுச்சீட்டை வாங்கிய அதிகாரி அவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு பாஸ்போட்டை மீண்டும் அவரிடம் கொடுத்தார் நான் கபிரியல் மார்குவஸ் காரில் ஏற்றி அனுப்பிய சில மணிநேரத்தில் அந்த அதிகாரி தொலைபேசியில் பாஸ்போட்டில் அவரது உள்வரவை பாஸ்போட்டில் பதிய மறந்துவிட்டேன் அந்த பாஸ்போட்டை அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வரும்படி சொன்னார் நான் கபிரியல் மார்குவஸ் வீடுக்கு சென்றபோது அவரசிரித்தபடி என்னை மதிய உணவு அருந்தும்படி வற்புறுத்தினார். நானும் உணவை உண்டுவிட்டே திரும்பினேன். கபிரியல் மார்குவஸ் மிகவும் எளிய மனிதர்’
அங்கிருந்து ஒரு பல்கலைக்கழகம் கபிரியல் மார்குவஸ் பெயரில் இருப்பதாக சொல்லி கூட்டி சென்றாள். அவரது சிலை அந்த கட்டித்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது.அவரது படம் சுவரை அலங்கரித்தது.
எமது கட்டகேனா நகரவலம் முடிந்த பின்பாக மதியத்தின் பின்பு டாக்சியில் புதிய நகரத்தில் உள்ள நவீன பிளாசாவற்கு சென்றபோது எனது மனைவி சிகையலங்காரம் செய்ய போனார். பெண்களின் சிகையலங்கரம மணிக்கணக்கில் செல்லுமே என்ன செய்வது என யோசித்தபடி நின்றபோது முன்பாக இருந்த புத்தகக்கடையிருந்தது. சிலியில் பார்த்த பத்தக கடைகளில் எல்லாம் ஸ்பானிய மொழிப்புத்தகங்களே இருந்தது. நம்பிக்கை இல்லாமல் புத்தக கடையில் இருந்த பெண்ணிடம் சிரித்தேன். நாற்பது வயது பெண் ஒருவர் இருந்தாள். இவளிடம் எப்படி பேசுவது ? ஆங்கிலம் தெரியுமா? அவளது முகத்தில் இருந்த ஒரு முகப்பரு என்னை கவர்ந்து. . இந்த வயதில் எப்படி முகப்பரு வருகிறது என யோசித்தபடி ‘ஆங்கிலப்புத்தகங்கள் இருக்கா? என ஆங்கிலத்தில் கேட்டேன்
‘ஆம’ என ஒரு பகுதியை காட்டியபோது அதில் கபிரியல் மார்குவஸ் ஆங்கில மொழி பெயற்பான புத்தகங்கள் இருந்தன நான் சிறிய புத்தகமாக இருந்தால் இங்கிருந்து வாசிக்கமுடியும் என மெமறிஸ் ஒவ் மை மெலன்கொலி ஹோர்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் அந்தப் பெண்ணிடம் வந்து கடன் அட்டையையக் கொடுத்தேன்
‘பொருத்தமான புத்தகம்’ என்று விட்டு கண் சிமிட்டியபடி சிரித்தாள்.
எதிர்கடையில் எனது மனைவி இருந்ததால் மேல் கொண்டு பேசாது அவளது வார்த்கைளின் உள்ளர்த்தத்தை புரியாத மாதிரி நானும் சிரித்தேன்.
90 வது பிறந்ததினத்தில் தனது பிறந்தநாள் பரிசாக கன்னிகழியாத பெண்ணுடன் உறவு கொள்ள விரும்பும் முதிர்ந்த பிரமச்சாரியின் கதை. அந்த ஆசை விபரீதமானது. கண்ணியமற்றது எனபுரிந்த பத்திரிகையாளர், இதற்காக விபசாரவிடுதியை தொடர்பு கொள்ளுவதும் இறுதியில் அப்படியான இளம் பெண்ணைக் ஒழுங்கு படுத்தியபின்பு என்ன நடக்கிறது எனக் கதையோடுகிறது. இந்த கதையை விபரிக்க விரும்பாமல் வயதாகும்போது கடந்தகால நினைவுகள் வரும் இதில் என்ன செய்தோம், என்ன செய்ய மறந்தோம் என நினைப்பது எல்லோருக்கும் பொதுவானது.
இந்தப் புத்தகத்தில் ஆரம்பத்திலே சொல்லப்படுவதை மீண்டும் நினைக்கவைக்கும்.
‘நான் 50 வயதை அடைந்தபோது 514 பெண்களுடன் உறவுகொண்டிருந்தேன் ஆனாலும் எந்த ஒரு பெண்ணிடம் பணம் கொடுக்காது உறவு கொள்வதில்லை. அவர்கள் வேண்டாம் என்றாலும் கட்டாயமாகப் பணம் கொடுப்பேன் அவர்கள் அந்த பணத்தை எறிவது அவர்களது சுதந்திரம். ஒரே நாள் மட்டுமே துணி துவைத்துக்கொண்டிருந்த அமரிக்கன் இந்தியப் பெண்ணின் பின்பக்கத்தால் சென்று பெண்ணை உறவுகொண்டேன். ‘அவள் என்ன சேர் (Oh Senor”’)’ என முனங்கினாள. அதன் பின்பு அவளிடம் தொடரந்து உறவு வைத்தபோது நான் அவளை அவமானப்படுத்தியதற்காக நினைத்து நான் பணம் கொடுத்தபோது அவள் பணம் வாங்க மறுத்துவிட்டாள். அதற்காக அவளது வேதனத்தை உயர்த்திக் கொடுத்தேன்’
நான் இந்தப் புத்தகத்தை மனைவி சிகையலங்காரம் செய்த சலூனுக்கும் நான் வாங்கிய புத்தகக் கடைக்கும் இடையில் உள்ள பென்ஞ்சில் அமர்ந்தபடி இரண்டு மணி நேரத்தில் படித்தேன். இடைக்கிடை கண்ணை எடுக்கும்போது அந்த புத்தகக்கடைப் பெண் பார்பதையும் பார்த்தேன்.
கற்றகேனாவில் கடைசிநாள் நாம் கடலில் சில தீவுகளுக்கு போக இருந்த பயணம் சூறாவழியின் காரணமாகத் தடைப்பட்டது. ஆனால் ஹோட்டலில் இருக்க விரும்பாமல் கடற்கரை அருகே இருத்த பல அடுக்கு மாடி பிளாசாவிற்கு டாக்சியில் சென்றோம். மூன்றாவது மாடியின பல்கனியில் இருந்து கடலைப்பார்த்தபோது மழை பொழியும் கார்மேகங்களின் இருளில் அதிகம் தூரம் கடல் தெரியவில்லை. மிகப்பெரிய அலைகள் கடற்கரையோடு அமைந்த பாதைமேல் மீறி மோதின. நானுறு வருடங்களுக்கு முன்பு இப்படி எத்தனை சூறாவளிகள் கடல்க் கொந்தழிப்புகளை மீறித்தான் இந்த துறைமுகத்தில் பாய்மரக் கப்பல்களில் வந்திறங்கினார்கள் . அக்காலத்தில் அத்திலாந்து சமுத்திரத்தைக் கடப்பது ஒருவிதத்தில் வாழ்வா சாவாஎன்ற நிலை. முக்கியமாக ஸ்பானிய விவசாயிகள் பொதுவான நிலங்களை பெரிய நிலச்சுவான்தார்களிடம் இழந்தபோது அவர்கள் குடும்பங்கள் பட்டினியால் தவித்தன. நகரங்களுக்கு உணவுக்காக குடிபெயர்ந்தவர்கள் பசியில் இருந்து தப்ப இப்படியான கப்பல்களில் ஏறுவதே ஒரே வழியாகும். நடுக்கடலில் தொற்று நோயால் இறப்பவர்களை அரசுகள் எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்வதில்லை. கப்பலில் ஏறும்போது அவர்கள் குடுமபத்திற்கு பணம் கொடுக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வழிப்பதையே. இப்படியான நிலையே அவர்களுக்கு புதிய நிலத்தில் நோய்கள் எதிர்பபுகள் மத்தியில் தங்கம் வெள்ளியென அமரிக்க ஆதிவாசிகளிடம் இருந்து கொள்ளையடிக்கும் மனநிலைக்குத் துண்டியது
மத்தியு என்ற சூறாவளி கற்றகேனாவுக்கு மழையை மட்டும் தந்துவிட்டு வடக்கே திரும்பி ஹெட்டி மற்றும் கியுபாவின் பகுதிகளைத் தாக்குவதாக முடிவு செய்திருந்தது.
மழை தொடர்ந்து பல மணிநேரமாக பெய்து கொணடிருந்தது . திருப்ப ஹோட்டல் போவதற்கு டாக்சி கிடைக்கவில்லை. கற்றகேனாவில் உளளவர்களில் அரைவாசிப்பேர் டாக்சியைத் தேடினார்கள். கூகிளில் பார்த்தபோது ஐந்து கிலோமீட்டர் மட்டுமே என்பதால் பாதையில் இறங்கி நடந்தபோது எவ்வளவு கனமாக மழை பெய்வதென உணரமுடிந்தது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடு கொலம்பியா . இதுவரை நாங்கள் நின்ற ஆறு நாட்களும் நல்ல வெயில் எம்மைக் காய்ததற்கு மாறாக தொப்பலாக நனந்தபடியே போதக்குறைக்கு தெருவில் வாகனத்தால் சேறு அடிக்கப்பட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
அடுத்தநாள் காலையில் விமான நிலயத்திறகு சென்றபோது பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டது கற்றகேன விமான நிலயத்தில் இருந்து லீமா எனும் பெருநாட்டு தலைநகருக்கு போக இருந்த பிரயாணம் தடைபபட்டு பின்பு இரவு கொலம்பியாவின் தலைநகரான போகட்டாவுக்கு நடு இரவில் சென்றோம். நல்லவேளையாக விமான நிறுவனம் ஹொட்டேலில் எங்களை தங்கவைத்தார்கள் அடுத்தநாள் அதிகாலையில் லீமாவுக்கு போகாமல் கொஸ்கா எனும் இங்கா மக்களின் தலைநகருக்கு விமானம் சென்றது.
மறுமொழியொன்றை இடுங்கள்