Monthly Archives: ஏப்ரல் 2018

சிங்களத்திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

சிங்கள படைப்பிலக்கியங்களை திரைக்கு வழங்கிய முன்னோடிக்கலைஞர் ஜெயகாந்தனுடன் அமர்ந்து “உன்னைப்போல் ஒருவன்” பார்த்த ரசிகர் முருகபூபதி ” உலகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது, (75 ஆண்டுச்சரித்திரமுள்ள) இந்தியச் சினிமாத்துறைதான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப்படங்களில் 20 வீதம் மட்டும் வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்ததோர் கலைமரபைக்கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலேயே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம், உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அரசியல் தற்கொலை செய்யும் ஒரு சமூகம் (22/11/2011 by noelnadesan)

கம்போடியாவில் ரொன்லி சப் (tonle Sap); என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தில் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது ஐந்து மடங்காக பெருகும் போது அந்தப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு

வெளியே வந்த சந்திரனுக்கு தெரு விளக்கின் வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது. திருடிக் கொண்டு வெளியேறும் திருடன் போல்,  தன்னை யாராவது பார்க்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். தெரிந்தவர்கள் யாராவது நடந்தோ,  காரிலோ போகிறவர்கள் தன்னை அவதானிக்கலாம் என்ற எண்ணம் அவனை தாக்கியது. அவசரமாக காரை நோக்கி எட்டிக்கடந்து காரில் ஏறினான். காரை ஓட்டும் போது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜீவ முரளியின் -லெனின் சின்னத்தம்பி.

லெனின் சின்னத்தம்பி நாவலைப் படித்தபோது அவுஸ்திரேலியாவில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் நான் வேலைசெய்த காலத்தை நினைவூட்டியது. இரண்டு மாதங்களாக பாத்திரம் கழுவிய என்னால் இறுதி வரையும் சப்பாத்தியை வட்டமாக போடத் தெரியவில்லை. இதனால் சமையல்காரரின் உதவியாளராக வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வரியற்று கையில் பணம் வரும் வேலை என்பது கவர்ச்சியாக இருந்தபோதிலும் நமக்கு இது சரி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

செக்சிவூமன் (Saksaywaman)

காலை முழுவதும் இரயில் பிரயாணம் செய்து மாலையில் மச்சுப்பிச்சியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரவாகிவிட்டது அதன் பின்பு காலையில் எழுந்து சன்கேட் எனப்படும் மலைக்குச் சென்று மதியத்தின் திரும்பி மீண்டும் ஹரன் பிங்கம் இரயில் ஏறினோம். இடையில் இரயில் நிலயம் செல்வதற்கு பஸ் அதுவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும் அதுவே இராணுவத் தன்மையை … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

மாமனார் நட்ட மாதுளை

பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள் மெல்பன் வீட்டின் பின்புறத்தில் ஒரு … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

அண்டியன் எக்ஸ்பிரஸ்

இரயில்ப்பயணம் எனக்குப் பிடித்தது யாழ்ப்பாணம்- கொழும்பு அதன்பின் கண்டி மலையகம் என மாணவப் பருவத்திலும் சென்னை-டெல்கி பம்பாய்- திருவனந்தபுரம் என தொடந்து பின்பு ஐரோப்பாவின் இரயில்களில் நாடுகள் ஊடாகப் பியாணம் செய்திருக்கிறேன். இப்பொழுது நான் எழுதும் இந்தப் பிரயாணம் மிகவும் வித்தியாசமானது இன்கா அரச பரம்பரையின் தலைநகரான குஸ்கோ அவர்களது தொப்பிள் எனச் சொல்வார்கள். ஆனால் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

பான்பராக்

நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார். பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உன்னையே மயல் கொண்டு- பாகம் ஏழு

ஆய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில் இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன், போராசிரியர் சிண்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும், சந்திரனை “கம் இன்” என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக் கொண்டுவா. அதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சில காலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு முன்பானது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக