விழித்திருக்கும் கட்டகேனா நகரம்.

img_6993
கொலம்பியாவின் கரிபியன் கடற்கரை நகரமான கட்டகேனா அழகான நகர்மட்டுமல்ல நகரமே 16- 17 நூற்றாண்டுகளின்வரலாற்றின் காட்சிப்பொருள். அந்த இருநூறு வருடங்கள் மத்திய தரைக்கடல் நாடுகளான ஸ்பெயின் போர்த்துக்கல் இரண்டும் புவியின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களது கடற்படைகள் செல்வங்களைத் தேடி சமுத்திரங்களைக் கடந்தன. சாம்ராட்சிய விஸ்தரிப்புக்காக மில்லியன்கணக்கான சுதேசிகள் அவர்களாலும் அவர்கள் காவி வந்த அம்மை மற்றும் பால்வினை நோய்களால் மடிந்தார்கள். அதேபோல் ஸ்பெயின் போர்த்துகல்நாட்டு போர்வீரர்களும் தூரதேசங்களில் இறந்தார்கள்.

ஸ்பெயின் சாம்பிராட்சியத்தின் அத்திலாந்துகரையின் சாம்ராட்சிய விஸ்தரிப்பின் தாக்கங்களைப் பார்ப்பதற்குக்கட்டகேனா ஒரு கண்ணாடி .வரலாற்றின் ஒரு பகுதி பாலைவனத்தின் கீழே பாதுகாக்கப்படுவதுபோல் வருங்காலச்சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. முழு நகரத்தையுமே யுனெஸ்கோ பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்றுப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு தனியார்வீடுகள் , பாதைகள், தேவாலயம், பண்டகசாலை போன்ற அரசகட்டிடங்கள் என மக்கள் கூடியபொது இடங்களெல்லாம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக இருக்கிறது. முழு நகரமும் ஒருவித திறந்த வெளிகாட்சிசாலை. மற்ற இடங்களுக்குச் சென்றால் பலஇடங்களைப் பார்க்கப் பல கிலோ மீட்டார்கள் பிரயாணம்செய்யவேண்டும். இங்கு நடந்தே பெரும் பகுதிகளைப் பார்க்க முடியும் என்ற நினைவில் நகரத்தை சுற்றிப்பார்க்கச் சென்றபோது பாதைகள் தடுக்கப்பட்டிருந்தால் போவதற்கு அனுமதிக்கப்பட்ட நகரின் முக்கியப் பகுதியில் உள்ளஅழகானகோட்டையை அடைந்தோம். இந்தக்கோட்டை 16 ம் நூற்றாண்டில் இருந்து பல வருடங்களாக நகரத்தைப் பாதுகாக்கப் கட்டப்பட்டது..பிரித்தானியா பிரான்சிய கடற்படைகளின் தாக்குதலில் இருந்து நகரத்தைப் பாதுகாக்க 11 கிலோ மீட்டர்சுவர் கட்டியிருந்தார்கள். சுற்றுமதிலை மீறி வந்தால் பாதுகாக்க கோட்டையைக் கட்டியிருந்தார்கள். தொடர்ச்சியானமுற்றுகையின்போது ஆயுதங்களையும்உணவுகளையும் சேகரித்தது பாதுகாப்பதன் நோக்கமாக நிலச்சுரங்கங்களையும் நிலத்தின் கீழ் அறைகளையும் கொண்டது அந்தக் கோட்டை.

கோட்டையைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைக் கவர்ந்தது, அந்தக் கோட்டை முன்றலில் வைக்கப்பட்டிருந்த வீரனது சிலை
img_6954img_6958
அதில் என்ன முக்கியமென நீங்கள் கேட்கலாம்.

அங்கவீனமான ஒருவருக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இடதுகாலும் இடது கையும் ஒரு கண்ணும் இல்லாத ஸ்பானிய கடற்படையின் தளபதி. பெயர் பிளாஸ் டி லிசோ (Blas de Lezo) என எழுதப்பட்டிருந்தது. அந்த வீரனைப் பற்றிய செய்திகள் எனக்கு வியப்பைக் கொடுத்தது. பிரித்தானியத் கப்பல் படைத்தளபதி வேணன் ஏராளமான கப்பல்களைக் கொண்ட படையோடு கட்டகேனாவைத் தாக்கியபோது எதிர்த்துப் போரை நடத்திய அக்காலக் கவர்னர் கப்பல் தளபதி பிளாஸ் டி லிசோ. 67 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போரில்ஆரம்பத்தில் வென்றதாக எண்ணி பிரித்தானியத் தளபதியிடம் மண்டியிட்டுச் சரணடைவதாக நாணயம் கூட பிரித்தானியா வெளியிடப்பட்டிருந்தது. கட்டகேனா நகரத்தின் உள்ளே நுழைந்த பிரித்தானியப் படை தோற்கடிக்கப்பட்டது.
அக்காலங்களில் தோல்விகளுக்கு நோய்களும் காரணமாக இருந்தது. முக்கியமாக யெலோ பிவர்(Yellow fever) என்ப்படும் நுளம்பால் பரவும் விசக் காச்சல் பலரைப் பலிகொண்டது. பிரித்தானியப் பேரரசு பல கப்பல்களையும் பல்லாயிரம் போர்வீரர்களையும் இழந்தது அவமானமடைந்து திரும்பியது. வெறும் கையுடன் திரும்ப விரும்பாமல் நலிந்திருந்தபடைகளுடன் கியூபாவைக் கைப்பற்ற முயற்சித்த பிரித்தானியத் தளபதி அதிலும் தோற்றார். இந்தத் தோல்வியால் பிரித்தனியாவில் அப்போது அரசில் இருந்த அரசாங்கம் பதவியிழந்தது.

ஏற்கனவே அமரிக்கா கனடாவையும் கரிபியன் நாடுகளில் பலவற்றையும் வைத்திருந்த பிரித்தானியா சகலஅத்த்திலாந்துக் கரையோர நாடுகளையும் ஸ்பானியர்களிடமமிருந்து கைப்பற்றித் தனது தனது காலனியாக வைத்திருக்கவேண்டுமென்ற கனவு பொய்த்தது. இதற்குக் காரணமான கட்டகேன கவர்னர் தளபதி பிளாஸ் டி லிசே சில நாட்களில் பளேக் நோயினால் இறந்தார்.
இப்படியாக வரலாற்று முக்கியமானபோரில் அங்கக்குறைவுடன் வெற்றி பெற்ற பிளாஸ் டிலிசோ சிலை என்பது முக்கியமானது.
நெப்போலியனைத் தோற்கடித்த வெலிங்டன்பிரபு எப்படிப் பிரித்தானியருக்கே அதேபோல் பிளாஸ் டி லிசோ ஸ்பானியருக்கு முக்கியத்துவமானவர்.

கோடடை முன்பிருந்த சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியால் மஞ்சள், நீலம், சிவப்பு வர்ணங்கள் கலந்த கொலம்பியநாட்டுக் கொடிகளையும் பதாகைகளையும் தாங்கியபடி கோசமிட்டபடி ஊர்வலம் வந்தது. பதாகைகளில் எழுதப்பட்ட இல்லை(No) என்ற வார்த்தை மட்டும் புரிந்து

‘இவர்கள் யார்? ஏன் கோமிட்டுக்கொண்டு ஊர்வலம் போகிறார்கள்?’

எமது வழிகாட்டி விக்டோரியா குரல் கரகரக்க உணர்ச்சியுடன் ‘இவர்கள் சமாதான ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள்.இடதுசாரி அணியுடன்செய்த சமாதான ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்காக நடக்கும் சர்வஜன வாக்கெடுப்பில்சமாதானத்திற்கு எதிராக மக்களை வாக்களிக்கும்படிசெல்கிறார். பாக் கொரில்லா இயக்கத்திற்கு அரசாங்கம் அதிகச்சலுகைகளைக் கொடுத்தது எனக்கும் பிடிக்கவில்லை. அவர்களுக்குத் தண்டனைகள் இல்லை பொதுமன்னிப்புக் கொடுக்கப்படுவதுடன் பணமும் கொடுக்கப்படுகிறது. கொலை கொள்ளை ஆட்கடத்தல் மற்றும்கொக்கையின் போதைமருந்து கடத்தியவர்களுக்கு இவை அதிகம்தான். ஆனாலும் நாட்டில் சமாதானம் வேண்டும். 50 வருடஙகள்மேலாக மக்களுக்கு ஏராளமான இழப்புக்கள்.
எத்தனை உயிர்கள் போய்விட்டது? உடைமைகள் வீடுகளை இழந்து எத்தனை பேர் அனாதைகளாக இருக்கிறார்கள்’ எனக்கண்ணீர் மல்க பேசனாள்

நான் இவ்வளவு உணர்வுகள் அவளிடமிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கவில்லை இலங்கைத் தமிழ் அரசியலில் இப்படிஆவேசமாகப்பேசும் ஆண்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் பெண்களைச் சந்தித்தது இல்லை.
கொலம்பியாவின் நகர்கரங்களில் இடதுசாரி பார்க் இயக்கத்தால் கொலை ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டகளின்ஏராளமான குடும்பங்கள்இடம்பெயர்ந்து பல மிலியன்கணக்கில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் அதிகச் சலுகைகளைக் கொரிலாக்களுக்கு அளித்திருப்பதாக நினைகிறார்கள்.; இடதுசாரி கொரில்லாக்களின் நடவடிக்கைகள்கிராமப் பகுதிகளிலே நடைபெற்றதால் தொடர்சியானஆயுதப்போராட்டம் அரைநூற்றாண்டுகளின் மேலாக நடந்தாலும்ஆச்சரியப்படத் தக்கவாறு கொலம்பிய பொருளாதார வளர்சியடைந்துளளது.

தற்போதைய நோபல் பரிசுபெற்ற ஜனாபதி ஜுவான் மனுவல் சன்ரோஸ் ( Juan Manuel Santos) கடந்தஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு மத்திரியாக இருந்து இடதுசாரிகள்மேல் போரைத் தொடுத்து அவர்களை மிகவும் பாதிபபடைய வைத்தவர். அமரிக்க உதவியோடு நடத்திய போரால் நலிவடைந்தாலே பார்க் சமாதனத்திற்கு உடன்பட்டது சகலராலும் ஏற்றுக்கொண்ட உண்மை அமரிகாவிற்குக் கடத்தப்படும் கொக்கையினுக்கும் பாக்கொலில்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி அரசாங்கத்தை அமரிக்கா ஆதரிக்கிறது. அதேவேளையின் கொரில்லா இயக்கத்தின் ஆதரவு சக்கிகளான வெனிசூலாகியுபாவில் நடந்த மாற்றங்களும் இந்தச் சமாதானத்திற்கு வழிவகுத்தது.. முன்னைய ஆட்சியில் ஜனாதிபதியாக இருந்தவர் (Álvaro Uribe) தற்போது முன்னின்று சமாதானத்தை எதிர்க்கிறார்

தென்னமரிக்க நாடுகள் சுதந்திரத்தை காலனிய ஆட்சியில் இருந்து பெற்றபோதிலும் விவசாய நிலங்கள் தொடர்ந்தும் காலனிய ஆட்சியில் ஸ்பானிய வம்சத்தில் வந்த முக்கியமான நிலப்பிரபுக்களிடத்தில்தான் இருக்கிறது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்தம் எதையும் செய்யவில்லை. பெரும்பாலான இடதுசாரி இயக்கங்களின் முக்கியக் கோரிக்கை இதுவே. மக்களது நியாயமான தேவைக்கு உருவான பெரும்பாலான இயங்கங்கள் பயங்கரவாதம் ,போதைவஸ்து கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டதும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நில உரிமையாளர்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள்.

எதிர்பவர்களது கோரிக்கைகளிலும் நியாயமுள்து என்று நான் சொல்லியிருந்தால் விக்டோரிய எங்களை நடுவழியில் விட்டு சென்றிருப்பாள் என நினைத்து மவுனமாக இருந்தேன் .

சிறிது தூரம் நடந்த பின்பாகக் காரில் ஏறி கத்தோலிக்க மதகுருமாரின் மடாலயம் (La Popa Monastery ) என்ற இடத்திற்குக் காரில் போனோம்; 1150 மீட்டர்உயரத்தில் உள்ள குன்றொன்றில் துறவிகளின் அழகிய மடம் உள்ளது. 17நூற்றாண்டில் ஆதிவாசிகளால் கருப்பு ஆட்டிற்குத் தேவாலமாக நிறுவப்பட்ட ஒரு வணக்கத்தலம் இங்கு இருந்தது அதை அழித்தபின்பு மரத்தால் அகஸ்ரின் மதகுரு (Fray Alonso Paredes) மாதாவிற்கு ஒரு தேவாலயம் கட்டினார். இங்குதான் கற்றகேனா நகரில் இருந்து தப்பி வந்த கருப்பு அடிமைகள்அகஸ்ரின் மதகுருவால் இங்கு ஆதரவளித்துப் பராமரிக்பபட்டார்கள். இந்த மதகுருவை கறுப்பர்களின் தேவதூதர் என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது தற்பொழுது இது மடாலயமாக இல்லாது உல்லாசப்பிரயாணிகளுக்குக் காட்சிசாலையாக உள்ளது. உயரமான குன்றிலிருப்பதால் இங்கிருந்து புதிகாக அமைக்கப்பட்ட கட்டகேன நகரத்தைப் பார்க்க முடியும்.
emeral
அங்கிருந்து விக்டோரியா எம்மை அழைத்துச் சென்ற இடம் எமரால்டில் நகைகள் செய்யும் தொழிற்சாலை.இரத்தினங்களில் ஒன்றான எமரால்ட் பலநாடுகளில் கிடைத்தாலும் உலகத்திலே மிகச் சிறந்த எமரலட் கிடைக்கும் இடம் கொலம்பியா. உலகத்தில் 75 % எமரால்ட்இங்குதான் உள்ளது. எமரல்டின் இரசாயன அமைப்புப் பெரிலியம் அலுமினியம்சிலிக்கேட் (silicate of beryllium and aluminum ) அதில் பச்சை நிறத்தைத் தருவது குரோமியம்.அதைவிட வனிடியம் நிறத்தைக் கொடுக்கும். மற்றைய நாடுகளில் கிடைத்த எமரால்டையும் அங்குக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அப்பொழுது தெரிந்தது ஏன் கொலம்பியாவின் எமராலட் விலைமதிப்பற்றது என்ற உண்மை. கொலம்பியாவின் எமரால்டால் பல கொலைகள் ஆட்கடத்தல்கள் நடந்துள்ளன. சுரங்கங்கள், காடுகள் நிறைந்த இடங்களிலிருப்பதால் ஆயுதக்குழுக்களினன் கட்டுப்பாட்டில் இருந்தன . தற்போது நிலமை சீரடைந்து வருகிறது
dscn0143
மாலையில் அந்தக் கடற்கரையை நோக்கிய கோட்டைச்சுவரில் நடந்தபோது அந்தச் சுவரருகே ஒரு இசைக் குழுகச்சேரியை நடததஆயுத்தப்படுத்தியது. பாதையில் பாதைத்தடைகள் நீக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூடத்தொடங்கினர். இசையும் நடனமும் எந்த இடத்திலும் தெனனமரிக்காவில் நடக்கும். இங்குச் சமாதானத்தை வரவேற்று இசைக்கச்சேரிநடக்கவிருந்தது. எந்த கட்டணமும் வசூல் பண்ணாது இலவசமாக நடக்க இருந்தது என அறிந்தேன் . கரிபியன் கடலில் சூரியன் மறையத் தொடங்கும்போது இசைக்கச்சேரி தொடங்கியது. நாங்கள் மீண்டும் மதில் மீது நடந்தபோது கோட்டைமதில் இப்பொழுது காதலர்கள் கூடுமிடமாக மாறிவிட்டது மாறியுள்ளது இடைக்கிடைவியாபரிகள் நின்றாலும் உல்லாசப்பிரயாணிகளை அதிகம் அளவு நச்சரிக்கவில்லை.
இரவு உணவிற்காக ஒரு சிறிய உணவகத்திற்குச் சென்றபோது அங்குச் சம்பா நடனம் நடந்தது. கறுப்பு இளைஞனும் பெண்ணும் சேர்ந்து ஆடினார்கள். அடிமைகளுடன் ஆபிரிக்காவில் இருந்து வந்த ஆப்பிரிக்க நடனம் தற்பொழுது தென் அமரிக்காவின் வைரத்தை வெட்டி பாலிஸ் பண்ணுவதுபோல் தென்னமரிக்கக் கலாச்சாரத்தின் நடனமாகியுள்ளது.
நடனத்தையா இல்லை உணவையா இரசிப்பது என்ன கேள்வி எழுந்தது

கரிபியன் கடலில் இருந்து பிடித்த சிங்க இறால் மிகவும் உருசியானது மட்டுமல்ல இலங்கையிலும் பார்க்க மலிவாகவும் இருந்தது. நமது விளைமீனை அப்படியே பொரித்துக் கொண்டு அத்துடன் சிறிய கிண்ணத்தில் மட்டும் சோற்றுடன் வருவார்கள. எமது நாட்டு பழங்களான மாம்பழம் வர்த்தகப் பழங்கள் கோவா என்பன மிகவும் குறைந்த விலையில்கிடைக்கும்.

கற்றகேனா மிகவும் பாதுகாப்பான இடமாகத் தெரிந்தது. எப்பொழுதும் பாதையில் வியாபாரிகளும் மக்களும்இருந்தார்கள். நாங்கள்சென்றகாலம் உல்லாசப் பிரயாணிகள் வருகை தொடங்கும் காலமாதலால் அதிக மக்கள் எங்கும் இருக்கவில்லை. உணவை முடித்துக்கொண்டு நடந்தபோது மீண்டும் வெளியே நடந்தபோது சிமோன் பொலிவரின்பூங்காவில் நடனமும் இசையும் நடந்துகொண்டிருந்தது. அதில் ஆதிவாசிகளின் நடனங்கள் நடந்தது. சிறிது நேரம் அங்குநின்றுவிட்டு மகாநாடு கருதி நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றாலும் குதிரை வண்டிகளில் உல்லாசப்பிரயாணிகள் செல்வதும் வியாபாரிகள் சந்தைகள் என இரவு முழுவதும் நகரம் சில நூறு ஆண்டுகள் காலத்தை முன்னகர்த்தி விழித்திருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: