Month: பிப்ரவரி 2018
-
உன்னையே மயல் கொண்டு – மூன்றாவது பாகம்
பரிசோதனை டிஸ்ஸில் வளர்ந்த பக்டீரியா கொலனிகளை மேசையில் வைத்து கீழே குனிந்தபடி எண்ணிக் கொண்டிருந்த சந்திரனின் முதுகில் பலத்த அடி விழுந்தது. எரிச்சலுடன் திரும்பியபோது குண்டலராவ் நின்றான். முகத்தில் சந்தோசம் வந்தது. “எப்படி உன் ஆராய்ச்சி போகிறது” என்றான் சந்திரன். “பரவாயில்லை ஏதோ போகிறது” என்றான் சலித்தபடி. இந்த ஆய்வுகூடத்தில் கலாநிதிப் பட்டத்திற்கு படிக்கும் மூன்றாவது மாணவன் அவன். இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்து ஸ்கொலசிப்பில் படிக்கிறான். “என்ன இலங்கை-இந்திய மகாநாடு நடக்கிறதா”? எனக் கேட்டபடி சிண்டியும் […]
-
Demons in Paradise-ஆவணப்படம்
Director:Jude Ratnam Writer: Isabelle Marina ஜுட் இரத்தினத்தால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உண்மையில் என் எல் எவ் ரி யில் அங்கத்தவராக இருந்து பின்பு விடுதலைப்புலிகளின் துப்பாக்கிக்குண்டுகளால், ‘காதில் பூக்காமலோ, நெற்றியில் பொட்டு வைக்கப்படாமல் ‘ தப்பிய ரஞ்சன் என்ற செல்லையா மனோரஞ்சன் – மாமாவாகத் தனது இயக்க காலத்து சம்பவங்களை இரை மீட்பதாகும் : அதாவது நனைவிடை தோய்தலாகும் ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் வரும் இரயில் பாதை, அதை மூடிவளர்ந்த மரம் என்பது படிமமாக தொடங்கி […]
-
அன்னா கரினாவின் இரயில்ப்பாதை
அன்னா கரினா வடக்கின் வெனிஸ்’எனப்படும் பீட்டர்ஸ்பேக்கில் இருந்து எங்களது குழு மாஸ்கோ செல்லவேண்டும். அதிகாலையில் எழுந்து புறப்பட்டோம் பெருந்தொகையான மக்கள்கூட்டமும் ஏராளமான பிளட்பாரமும் உள்ள ரயில்வே நிலையத்தில் ஒருவர் பின்ஒருவராக சென்று ரயிலில் ஏறினோம். குழுவாகப் போகும்போது பாடசாலை மாணவர்கள் போன்ற உணர்வு ஏற்படும். மொழி புரியாத இடமென்பதால் அதிக கவனம். அத்துடன் தற்போது ரஸ்சியாவில், உல்லாசபிரயாணிகளிடம் பிக்பொக்கட் அடிப்பவர்கள் பெருகிவிட்டாரகளாம். இதுவரையும் மாஸ்கோ எனும்போது கிரம்லின்(Kremlin) என்ற சொற்றொடர் மனத்தில் வரும். ரஸ்சியா சென்ற பின்பே […]
-
உன்னையே மயல் கொண்டு 2
சிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள்; இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன. நுழைவாசலின் வலப் […]
-
கோசாக்கியர் நடனம்(Cossack’s Folk dance )
sholokhov இரண்டு மணி நேரமாகத் தியேட்டரில் அறுநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கோசக்கியரது நடன நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் நடனமாடிய கோசாக்கிய அழகி மேடையில் இருந்து இறங்கி வந்து எனது கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்றாள்.அது நான் எதிர்பார்க்காத விடயம். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவளது கைகளால் மேடைக்கு இழுக்கப்பட்டு சென்றேன். அப்படியே நடனம் தொடர்ந்தது. வான்வெளியில் உலவுவதுபோல் இருந்தது.முடிந்தவரையில் கால்களை அசைத்தேன்.அது ஒரு கிராமிய நடனமானதாலும் 20 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் ஆடுவதால் அவர்களுக்குள் […]
-
உன்னையே மயல் கொண்டு -நாவல்
அத்தியாயம் 1 சந்திரன் படுக்கையை விட்டு எழுந்து, திறந்திருந்த யன்னலை நோக்கிச் சென்றான். ஒவ்வொரு காலடிகளுக்கும் கோல்கோஸ்ட் எனப்படும் அந்த கடற்கரை நகரத்தின் இரவுப்போர்வை அவனது கண்களில் விரிவடைந்தது. யன்னலை அடைந்ததும் கம்பியில் கைவைத்தபடி வெறித்த பார்வையை வீசினான். கண்கள் வெளியே பார்த்தாலும், கருநீலமான பசுபிக் சமுத்திரம் அவனுக்குப் புலனாகவில்லை. தனிமை அவனுக்கு கொடுமையாக இருந்தது. அவ்வளவு பெரிய ஹொட்டலில் தான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தான். வெறுமையான ஏக்கம் நெஞ்செங்கும் நிரம்பி இருந்தது. தனிமை […]