Month: ஜனவரி 2018
-
கத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம்
எனது இரத்தத்தில் இருந்து ,துளி துளியாக அடிமைத் தன்மையை சிறிது சிறிதாக அகற்றவேண்டியிருக்கிறது என்றார் அன்ரன் செகோவ். அவரது பேரன் ஒரு பண்ணையடிமை. வைத்தியராகவும் , புகழ்பெற்ற எழுத்தாளரான அன்ரன் செகோவ் இப்படி சொல்லுவதன் மூலம் அக்கால பண்ணையடிமை முறை எவ்வளவு கொடுமையானது என்பதைப்புரிந்து கொள்ளலாம். ஏராளமான பண்ணை அடிமைகளை ரஸ்சியாவில் வைத்திருந்தார்கள். அடிமைகள் பண்ணையாரால் கொலை செய்யபபடுவது தண்டனைக்குரிய குற்றமல்லவென பலகாலமாக இருந்தது.18 ம் நூற்றாண்டிலே சட்டம் திருத்தப்பட்டு அடிமைகள் கொலை செய்வது, தண்டனைக்குரிய குற்றமாகியது. […]
-
“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்”
“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்” — அஷ்ரப்பின் வாக்குமூலம் ஒரு படைப்பை பற்றிய மதிப்பீட்டில் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கு இடம் இல்லை முருகபூபதி “கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம். இரண்டும் எதிரெதிரானவை. அரசியல்வாதி கவிஞனாக இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது, வினோதமான நிகழ்வு. நாடாளுபவனே ஏடாளுபவனாகவும் இருப்பது, வரலாற்றில் அபூர்வமாகவே நிகழுகிறது. சங்க காலத்தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந்திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று […]
-
எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள்
இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள் முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சியின் ஆத்மாவின் அஸ்தமனத்தால் தோன்றியிருக்கும் வெறுமை!!! முருகபூபதி ” பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய […]
-
தமிழ்நதியின் பார்த்தீனியம்
இரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. […]