ரஸ்புடின் கொல்லப்பட்ட யுசுபோவ் மாளிகை.

ரஸ்புடின் மெய்க்கீர்த்தி ரஸ்சியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பரவியிருந்தது. நான் படித்த பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவரது ஆண்குறி பற்றிய செய்திகள் கந்தானைக் குன்றுகள் மீது காற்றிலே தவழ்ந்து என்னையும் அடைந்தது.

ரஸ்சியாவினது வரலாறோ அரசவம்சத்தைப்பற்றியோ அறியாத காலம்.

பெண்களை இலகுவாகக் கவரும் சாமியார். ரஸ்சிய அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைவிட பிற்காலத்தில் அவரைப் பற்றி அறிந்தாலும் பீட்டர்ஸ்பேர்க் சென்றபோதே பல விடயங்கள் தெளிவானது. ரஸ்புடினை முதலில் சுட்ட அறை, பின்பு அவர் தப்பியோடிய வழி, இறுதியில் கொலை செய்யப்பட்ட இடம் என்பவற்றைப் பார்க்க முடிந்தது.

போல்ஸ்விக் புரட்சியாளர்களுக்கு ரஸ்புடின் மறைமுகமான விதத்தில் உதவியாக இருந்திக்கிறார். அவரது செல்வாக்கு பலரால் வெறுக்கப்பட்டது. அரசனின் தாயார், மற்றைய பிரபுக்கள், ஏராளமான மக்கள் அரசகுடும்பத்தில் ரஸ்புடினது நெருங்கிய தொடர்பை விரும்பாததால் பலவிதமான வதந்திகள் உலாவின. இந்த வதந்திகள் பிற்காலத்தில் போல்ஸ்விக்குகளுக்கு உதவின

பல்லாயிரக்கணக்கான கடற்படைவீரர்களோடு ஏராளமான ரஸ்சிய கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியரால் 1905ல் அழிக்கப்பட்டது.வலுவிழந்திருந்த ரஸ்சியாவை, மீண்டும் ஒரு யத்தத்திற்கு ஈடுபடுத்தியது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. 1915ல் நடந்த முதலாவது உலகப் போரில் இலச்சக்கணக்கில் ரஸ்சியப்படைகள் உயிரிழந்தனர். ஷார் நிக்கலஸ் அரசனது தவறான முடிவுகளால் ஏற்பட்ட இழப்புகளால் அரச குடும்பத்தில் மக்கள் நம்பிக்கையிழந்தார்கள்.

அக்காலத்தில் போர்முனையில் அரசன் இருந்தபோது பிட்டர்ஸ்பேர்க்கில் பல அரச நியமனங்கள் மற்றும் அதிகார முடிவுகளை அரசி அலக்சாண்டிட்ரா எடுப்பதற்கு ரஸ்புட்டினது அறிவுரையே காரணம் என்பதுடன், போருக்கான ஆலோசனையும் கொடுத்தது ரஸ்புடின் எனப் பரவலான செய்தி உலாவியது. உண்மை எவ்வளவு வதந்தி எவ்வளவு என்பதில் இன்றுவரையும் சந்தேகம் உள்ளது.

ரஸ்சிய வரலாற்றில் இப்படி புகழ் பெற்ற ஒருவர் ரஸ்புடின். இவரைச் சாமியார், வைத்தியர் ஏன் அரசவம்சத்தின் அழிவை முற்கூறியதால் ஞானி எனச் சொல்வார்கள்.

அரசன் நிக்கலசின் ஒரே மகன் அலக்சிக்கு ஹிமோபீலியா என்ற இரத்த உறையாமை நோய் பிரித்தானிய அரச வம்சத்தில் இருந்து, தாய் அலக்சாண்டிட்ரா வழியாக வந்தது. ஏதாவது சிறிய காயம் வந்தால் இரத்த பெருகும். நிறுத்த முடியாது. அலக்சிக்கு இப்படியாக காயமேற்பட்டபோது
ரஸ்புடின் இரத்தப்பெருக்கை நிறுத்தியதால் அரசி அலக்சாண்டிட்ராவுடன் நெருக்கியதுடன் முக்கியமான அரசியல் ஆலோசகராகவும் மாறியது மற்றைய பிரபுக்களுக்கு பிடிக்கவில்லை.

ரஸ்புடினால் மட்டுமே மகனை உயிர் தக்கவைக்க முடியும் என நினைத்து தாயான அலக்சாண்டிட்ரா , பலரது வெறுப்புக்கு மத்தியில் ரஸ்புடினைப் பாதுகாத்தார் இதன் விளைளவாக அரசனின் உறவினர் , மற்றைய வேண்டப்பட்டவர்களுமாக இருந்தவர்களில் சிலர் ரஸ்புடினை கொலைசெய்யும நோக்கோடு விருந்துக் அழைத்து அங்கு கொலை செய்தார்கள்.

கொலை நடந்த மாளிகை , அரசமாளிகை போன்றது

ஜெங்கிஸ்கான் படை எடுத்த வந்த பின்பு அவனது மங்கோலிய வம்சத்தில் வந்தவர்கள் பிற்காலத்தில் கரும்கடல் அருகே இஸ்லாமிய சிற்றரசர்களாகினார்கள். அவர்களில் ஒருவர் கிறிஸ்துவ ஓதோடக்ஸ் மதம் மாறி அரச குடும்பத்தில் திருமணம் செய்து அரசனுக்கு நெருங்கியவர்களாகிறார்கள். அவர்களில் ஒருவர் யுசுபோவ் என்ற மாளிகையில் உரிமையாளர்.

இந்த மாளிகை மிகவும் அழகானதுடன் விலையுயர்ந்த கலை செல்வங்கள்,ஐரோப்பிய ஓவியங்கள், மற்றும் அழகிய தியேட்டருடன் இருந்தது. இங்குள்ள தியேட்டரின் பலகனியில் பல தடவை அரசவம்சத்தினர் வந்து நாடகங்களை இசைநிகழ்சிகளை பிரத்தியேகமாக பார்த்ததாக கூறப்பட்டது. தற்போது இது கலாச்சார மியுசியமாக மாற்றப்பட்டடுள்ளது

29 மார்கழி 1916 இந்த மாளிகை அறையொன்றில் ரஸ்புடின் விருந்துக்கு அழைக்கப்பட்டு சயனைட் கலந்த கேக்கும் வைனும் கொடுத்தார்கள். சயனைட் வேலை செய்யாததால் சிறிது போதையில் இருந்த ரஸ்புடினை சுட்டார்கள். முதலாவது சூட்டுடன் ரஸ்புடின் அங்கிருந்த பின் கதவின் வழியாக வெளியே தப்பியோட மீண்டும் இரு முறை சுட்டு மார்கழிப் பனியில் உறைந்திருந்த நேவா நதியில் எறிந்தார்கள்

இதைச் செய்தவர்கள் அரச குடும்பத்திற்கு நெருங்கியவர்கள். கொலை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது கொலையில் ஈடுபட்டவர்கள் கிரைமியாவிற்கு கடத்தப்பட்டார்கள்.அதனால் அவர்கள் போல்சுவிக்கினர் அரச குடும்பத்தைக் கொலை செய்தபோது உயிர் தப்பினார்கள்.

அந்த மாளிகையின் உரிமையாளரும் சதியின் முக்கிய பங்காளருமாகிய பீலிக் யுசுபோவின் நாட்குறிப்பு பல தகவல்களைத் தந்தது.
http://time.com/4606775/5-myths-rasputin/

“ரஸ்புடின் கொல்லப்பட்ட யுசுபோவ் மாளிகை.” அதற்கு 2 மறுமொழிகள்

  1. முருககபூபதி அவுஸ்திரேலியா Avatar
    முருககபூபதி அவுஸ்திரேலியா

    எம்மவருக்கு கம்யூனிஸத்தை காண்பித்த முன்னோடிகள்தான் ரஷ்யர்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். ரஷ்யர்கள்தான் எம்மவர்க்கு சயனைட்டையும் காண்பித்த முன்னோடிகளா…?
    முருகபூபதி

    1. அரசியல்கொலைகள் சகோதரக்கொலைகள் சித்திரவதைகள் எழுத்தளர் அறிஞர்களைளைக கொல்லுதல் எல்லாவற்றிற்கும அவர்கள் முன்னோடிதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: