உங்களில் சிலருக்காவது நினைவிருக்கும் என நம்புகிறேன். ஒருசில நாட்களுக்கு முன்பாக, முந்நாள் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னம் மறுபடியும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரசன்னமானதையொட்டி, நான் எனது சிறுபிராயத்து அனுபவத்தைப் பகிர்ந்தேன். அதில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எனது தந்தை கார்த்திகேசனின் போட்டியாளர், சைக்கிள் சின்னத்தைத் தாங்கியவர், ஸ்கந்தகுமார் அவர்களின் தந்தை துரைராஜா அவர்களே. அந்த எமது கோஷங்களையும் மீறி தேர்தலில் வெற்றி பெற்றவர் துரைராஜா அவர்களே. ஸ்கந்தகுமார் எனது தந்தையாரின் வகுப்பில் மாணவராகவும் இருந்திருக்கிறார். தேர்தல் காலத்திற்கு பின்பாக இருந்திருக்கும். அந்நாளில் யாழ் இந்துக் கல்லூரியில் ஒவ்வொரு வருடாந்த இராப்போசன விருந்திற்கும், எனது தந்தையாரே சீனியர் பிரிபெஃக்ட்க்கு ஆங்கிலத்தில் உரை தயாரித்து பழக்கிக் கொடுப்பார். நிச்சயமாக ஸ்கந்தகுமார் அவர்களும் அந்த ஒழுங்கிற்குள் உள்வாங்கப் பட்டிருப்பார்.
அந்த வண்ணார்பண்ணை சூழலின் வாழ்க்கையும், அதனோடு பின்னிப்பிணைந்த சமுதாயமும், அங்கே ஏற்பட்ட அனுபவங்களும், கண்ட, பழகிய மனிதர்களும் ஒரு தனி. அதில் ஒரு குடும்பத்தினர் ஸ்கந்தகுமார் அவர்களது. அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை இன்றுவரை அறிந்திருக்கவில்லை. வருந்துகிறேன்.
அவரது மனைவி நந்தினி, முந்நாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியாக இருந்த போதிலும், இறுதியாண்டுகளில் நான் கல்வி கற்ற வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியில் கற்றவர். அவரது தாயார் திருமதி. சிவதாசன் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முந்நாள் ஆசிரியை.
அந்நாளில் பாடசாலை நாட்களில் ஏற்பட்ட ஸ்கந்தகுமார் – நந்தினி காதல் யாழ் புகழ் பெற்றது.
ஸ்கந்தகுமார் அவர்கள் ஆற்றிய பலவித சேவையறிந்து மிக்க மகிழ்ச்சி. நந்தினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது இழப்பையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Janaki Karthigesan Balakrishnan
மறுமொழியொன்றை இடுங்கள்