பத்தொன்பதாம் நுற்றாண்டில் பிறந்த உன்னத சங்கீத மேதை சக்கோகியை(Tchaikovsky)1875 மாஸ்கோவில் போல்சி நாடக குழுவினர் அழைத்து சுவான்லேக் என்ற பலே நாடகத்திற்கு இசையமைக்க சொன்னார்கள். அன்றிலிருந்து ரஸ்சியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இந்த நாடகம் அதே இசையுடன் தொடந்து அரங்கேறுகிறது. இம்முறை அதை பார்பதற்கு பீட்டஸ்பேர்கில் நின்றபோது அதற்காக டிக்கட் எங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. விடுமுறையில் இப்படியான நிகழ்சிகளுக்கு செல்லும்போது தனியே எங்களுக்காக மட்டும் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். வசதியான நேரத்தில் வாகனங்களில் அழைத்துச் சென்று பிரத்தியேகமான இருக்கைகள் தியேட்டரில் தருவார்கள்.
பீட்டஸ்பேர்க்கில் உள்ள கொமிசாசிகாயா (KOMISSARZHEVSKAYA ACADEMIC THEATRE) இப்படியான நாட்டிய நாடகங்களுக்கு பிரபலமானது. அங்கே சுவான் லேக் நடந்தது. எங்கள் குழுவில் பலர் ஏற்கனவே பார்த்திருந்தார்கள். பலர் மீண்டும் பார்ப்பதற்காக வந்தார்கள்.
சுவான்லேக் ஒருவிதத்தில் சிறுவர்களின் ராஜா ராணிக்கதை போன்றது கதையின் தோற்றம் ஜெர்மனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் தற்பொழுது ரஸ்சியாவின் கதையாகிவிட்டது. பலே நடனத்தில் கதை சொல்லப்படுவதால் ரஸ்சியா புகழ்பெற்ற பலே நடனக்காரர்களை உருவாக்கும் தேசமாகிவிட்டது.
இங்கு கதையை விட பலே நடனமும் இசையும் என்னைப்போன்ற இரண்டையும் தெரியாதவர்களையே இரண்டு மணி நேரம் பார்க்கவைத்தது
மந்திரவாதி ஒருவனது மந்திரத்தால் வெண்ணிற அன்னப்பறவையாக பகலில் மாற்றப்பட்டு வாவியொன்றில் வாழும் இளவரசியின் கதை. அந்த வாவி அவளது கண்ணீரால் உருவாகியது உருவாகியது. அவளை இளவரசன் திருமணம் முடித்தால் அவளது சாபவிமோசனம் கிடைக்கும்.
தாயின் விருப்பத்திற்காக பெண்தேடும் இளவரசனை சந்தித்த இளவரசி தனது கதையை சொன்னதும் அவளைத் திருமணம் முடிப்பதாக இளவரசன் வாக்குக் கொடுக்கிறான் .ஆனால் அந்த மந்திரவாதி தனது மகளை இந்த இளவரசியின் சாயலில் அனுப்பியபோது தடுமாறி அவளுடன் நடனமாடி அவளை மணமுடிக்க முயல்கிறான். அதனால் மனமுடைந்து இளவரசி வாவியில் மரணமடைகிறாள். இளவரனும் அவளோடு சேர்ந்து மரணத்தில் ஒன்று சேர்கிறார்கள்.
இந்தக்கதையின் முடிவுகள் நாட்டுக்கேற்ப பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளது. நாஙகள் பார்த்த நாடகத்தில் மந்திரவாதியை கொலை செய்துவிட்டு இளவரசனும் இளவரசியும் ஒன்றாவதாக காண்பிக்கிறார்கள்.
சுவான்லேக் கண்ணிற்கும் காதிற்கும் ஒரே நேரத்தில் நடக்கும் பெரிய விருந்தாகும் – Russian Banquet
மறுமொழியொன்றை இடுங்கள்