நேவா நதி, பீட்டர்ஸ்பேக் நகரத்தைச் சுற்றி ஓடுவதால் பார்ப்பதற்கு படகில் சென்றோம். வடக்கின் வெனிஸ் எனக்கருதப்படும் பீட்டர்ஸ்பேக் மிகவும் பெரிய மாளிகைகளை நதிக்கரையில் கொண்டது. அதில் மகோன்னதமாகத்தெரிவது ரஸ்சியமன்னரின் வின்ரர் பலஸ். 1786 கதவுகள் 1945 ஜன்னல்கள் 1500 அறைகள் 117 மாடிப்படிகள் கொண்ட மாளிகை.
போல்சுவிக்குகள், வின்ரர் பலஸ்சில் இருந்த இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றியது கம்மியூனிச நூல்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கும்.
1917 ஒக்ரோபர் நிகழ்வின் வித்து பன்னிரண்டு வருடங்கள் முன்பாக இதே வின்ரர் மாளிகையின் முன்பாக விதைக்கப்பட்டது. அந்த விதையில் தொடரான நடந்த சம்பவங்களின் இறுதி நிகழ்வே போல்சுவிக்குகளின் அதிகாரத்திற்கு வழி சமைத்தது
1905 இந்த வின்ரர் பலஸ் முன்பாகாக கிறிஸத்தவ மதகுருவால் ஒருங்கிணைக்கப்பட்ட ஊர்வலம் , அரசின் வன்முறையால் தடுக்கப்பட்டு , அதைத் தொடர்ந்து நடந்த படுகொலையில் பீட்டர்ஸ்பேக்கைச் சுற்றிய பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இறந்தனர். அரசு இருநூறு பேர் எனவும் மற்றயவர்கள் மூவாயிரம் என்றார்கள். ஊர்வலம் சென்றவர்களது கோரிக்கைகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கமற்றவை. எட்டுமணி நேர வேலை, ரஸ்சிய-யப்பான் யுத்த நிறுத்தம் மற்றும் சர்வஜனவாக்குரிமை என்ற கோரிக்கைகளை மன்னிடம் கொடுக்கச் சென்றபோது அங்கு ஷார் மன்னன் இருக்கவில்லை. ஆனால் ஏற்கனவே பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் ஏவியதால் இராணுவத்தால் சுடப்பட்டு பலர் இறந்தனர்.
அதைத் தொடர்ந்து ரஸ்சியாவின் பல பகுதிகளில் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கைதுகள், மரணதண்டனைகள் 1905 – 1917க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்தன. இக்காலத்தில் நடந்த அடக்குமுறை விடயங்களே போல்சுவிக்களுக்கு அதிகாரத்தை கைப்பற்ற வசதியாக இருந்தது.
இரஸ்சியா பண்ணை அடிமைகளைப் பல காலமாக கொண்டிருந்த நாடு. அடிமைகள் மேல் சகல அதிகாரத்தையும் அந்தப் பண்ணையார்கள் கொண்டிருந்தார்கள். ஒரு பண்ணையாரிடம் 3 மில்லியன்கள் பண்ணையடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப முடியாது. ஆனால் உண்மை.
1861 ல் இரஸ்சியாவில பண்ணையடிமை முந்திய ஷாரால் ஒழிக்கப்பட்ட பின்பே ரஸ்சியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. உண்மையில் கைத்தொழில்ப் புரட்சி, தொழிலார் உருவாக்கம் ஐரோப்பாவில் இறுதியாக நடந்த இடம் ரஸ்சியா எனலாம். அதுவும் முக்கிய நகரங்களில் மட்டுமே தொழிற்சாலைகள் இருந்தன.
தொழிலாளர் புரட்சி என்ற பதம் எங்வளவு அபத்தமானது இப்பொழுது தெரிகிறதா?
போல்சுவிக்கள் ஷார் அரசனின் மேல் உள்ள அதிருப்தியைப் பாவித்துக்கொண்டார். அங்கு மாறாக ஒரு ஜனநாயக அரசை உருவாக்க அனுமதிக்கவில்லை அத்துடன் ஒரு விதமான அடக்குமுறை ஆட்சியை கமியுனிசம் என்ற பெயரில் மன்னர் அற்ற, ஆனால் புதிய பெயரில் ஆட்சியை அமைத்தார்கள் என்பதே நான் தெரிந்து கொண்ட பாடம்.
1917 பெப்புருவரியில் ஷார் மன்னன் தனது முடியைத் துறந்து கையளித்தது இடைக்கால அரசிடமே. அந்த அரசாங்கம் அலக்சான்டர் கரன்கி தலைமையிலான தற்காலிக அரசேயிருந்தது. தேர்தல் மற்றும் அதிகாரங்களை மக்களிடம் கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. இந்தத் தற்காலிக அரசாங்கம் பலரது கூட்டில் அமைந்ததால் ஸ்திரமற்றது. இதனால் போல்சுவிக் குழுவினரால் இலகுவில் கைப்பற்ற முடிந்தது. அலக்சான்டர் கரன்சி உயிர் தப்பி, பிரான்சிற்குச் சென்று பின் அமெரிக்கா சென்றார். ஏற்கனவே பெப்ரவரியில் முடி துறந்த ஜார் மன்னன் குடும்பத்துடன் அலக்சாண்டர் மாளிகையில் அக்காலத்தில் இருந்தார்.
வின்ரர்பலஸ் பல காலமாக ஷார் மன்னன் இருக்கவில்லை ஆனாலும் போல்சுவிக் கைப்பற்றியபோது பல அரச சின்னங்கள் அழிக்கப்பட்து பின்பு இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு வீச்சில் அழிந்து தற்போது திருத்தப்பட்டு ஹெமிட்டேஜ் மியூயமாக மாறியுள்ளது
ஹெமிட்டேஜ் மியூயம் நடந்து பார்ப்பதற்கு கடினமான இடம். பாரிஸ் லுவர் மியூசியதத்தைவிட பெரிதாக இருந்தது.
நெப்போலியன் இரஸ்சியாவில் இருந்து எடுத்துச் சென்ற கலைப்பொருட்கள் ஜோசப்பீனால் மீண்டும் கொடுக்கப்பட்டது அங்குள்ள பொருள்களை எழுத்தில் விவரிக்க முடியாது. ஐரோப்பிய கலைப்பொருட்கள் மட்டுமல்ல எகிப்திய மம்மிகளைக் காணமுடிந்தது. வருடத்திற்கு 3.5 மில்லியன் பேர் வந்துசெல்லும் இடம். பல இடங்களில் தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பல வாசல்கள் உள்ளதால் நாங்கள் தொலைந்து மீண்டோம்
நேவா நதிக்கரையின் சதுப்பு நிலங்கள் நிரவப்பட்டு ஆற்றின் கரைகள் கருங்கற்களால் உறுதியாக கட்டப்பட்டன. கப்பல் கட்டுவதற்கு ஹாலந்து சென்று படித்து அதன்பின் ரஸ்சிய கடற்படையை உருவாக்கிய பீட்டர் இந்த நதியை கப்பல்கள் கட்டுவதற்கு ஏற்ப அமைத்தார். நாங்கள் நேவா நதியில் ஒரு படகில் சென்றபோது நதிமேல் ஏராளமான பாலங்கள் இருந்தன. கப்பல்கள் போய் வருவதற்கு ஏற்ற பாலங்கள் உயரும். பெரிய பயணக்கப்பல்கள் போய்வரும். நீர்மூழ்கிகப்பல்களைக் காணமுடிந்தது. பால்டிக் கடலின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் ரஸ்சிய கடற்படையின் முக்கிய தளமாகும்
புனிக்காலத்தில் உறையும் நேவா நதிமேல் சாதாரணமாக எவரும் நடந்து போகமுடியும். சில காலம் ட்ராம் நதி மேல் ஓடியதாக அறிந்தேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்