இம்முறை யாழ்பாணத்தில் நின்றபோது ஒரு புத்தக அறிமுகம் கொக்குவிலில் நடந்தது. அங்கு சென்றபோது இடதுசாரிகளின் கூட்டமாக இருந்தது. மற்றவர்கள் அங்கு தெரியவில்லை. பொறியியல் மாணவராக சிறையில் இருந்தவரால் எழுதப்பட்டு அவரது தந்தையாரால் வெளியிடப்பட்டது. அங்கு தெரிந்தவர்களை சந்தித்தது சந்தோசமாக இருந்தது . பின்பு ஒரு புத்தகத்தை வாங்கி வாசித்தேன்.
சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் சீரான தமிழ்வசனமும், அழகிய மொழி நடைகொண்டது. நாவல் சிறுவயதில் படித்த பேராசிரியர் மு வரதராஜனின் கரித்துண்டை நினைவுக்கு கொண்டுவந்தது.
நாவலின் உள்ளடக்கம் யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே நடப்பதால் சமூகவிடயங்களான யாழ்பாண அரசியல், நிலத்துநீர் மாசுபடல், பாரத்தீனம் என்ற நச்சுககளையின் தாக்கம் என்பன அலசப்படுகிறது. போரின் பின்பாக நடந்த விடயங்கள் அதிலும் இந்திய மீனவர்களது வடபகுதிக் கடலில் நடக்கும் ஆக்கிரமிப்பும் பேசுபொருளாகியுள்ளது. இன்னும் மேலாக சென்று தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் ஒற்றுமையை பேசுவதுடன் மற்றும் விடுதலைப்புலிகள் இஸ்லாமியரை வடமாகாணத்தில் இருந்து விரட்டியதற்கு எதிரான கருத்தும் வைக்கப்படுகிறது. சமூகத்திற்கு தேவையான விடயங்கள் பேசப்படுவதால் எனக்கு உள்ளடக்கம் பிடித்திருந்தது.
அக்கால நா பார்த்தசாரதி அகிலன் போன்றவர்களது இலட்சியவாத நாவல்களை ஒத்திருந்து
இந்த நாவல் கதையோட்டத்தில் இடதுசாரிக்கொள்கைக்கு ஏற்ப ஒரு சமூக இயக்கத்தை வளர்த்து எடுப்பதற்கான கைநூல்போன்று இருந்தது. எந்த சமூக இலட்சியமற்ற தலைமுறையாக வாழும் யாழ்பாண இளைஞர் சமூகத்திற்கு இப்படியான நாவலுக்குத்தேவையிருக்கிறது என யோசிக்க வைப்பது நாவலின் நோக்கம் . இக்கால யததார்த்தப்போக்கில் இது ஒரு சவாலாகும்
சமூககச் சிந்தனை உள்ள எனக்கு இப்படியொருநாவல் மகிழ்வைக்கொடுத்ததாலும் இலக்கியத்தின் குறைகளை பேசாது கடந்து முடியாது
நாவலுக்கு தேவையான உச்சம் இறுதிவரையும் வரவில்லை .அத்துடன் நாவலின் இலட்சிய இடதுசாரியாகவும், புத்திஜீவியாகவும் வந்துபோகும் சபாபதி வரையறைக்குள் வரும் பாத்திரம்( Flat character ) அதாவது இவர் இப்படித்தான் இருப்பார் என எம்மால் தீர்மானிக்க முடியும். பொலிஸ் விசாரணை வந்தாலும் எதுவிதமான முரண்பாடு(conflict) இல்லை
மார்க்சிச சித்தாத்ததைத்திற்கு தார்மீக ஆதாரவாக எழுதப்பட்டிருக்க இந்த நாவலின் காநாயகன் எந்த உணர்ச்சியும் அற்று அழகான மச்சாளைத் தவிர்த்து அழகில் குறைந்த மச்சாளை தெரிவு செய்வதாக காட்டியபோது யதார்த்தம் அழகியல் என்ற இலக்கிய விடயங்கள் கை நழுவிவிடுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்