கமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து…..

பிள்ளை தீட்டு

“பிள்ளைத்தீட்டு” கதையில் ஜமீல் என்பவன் தனக்கு இலங்கை ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷ செய்தியை மனைவி ஆயிஷாவிடம் பகிர்கிறான். அவள் இங்கு நாம் சுகமாக இருக்க எதுக்கு சண்டை பிடிக்கனும் என்கிறாள். இயக்கத்தவர்கள் ஒரு நாளில் எல்லாவற்றையும் பிடுங்கி வெளியே துரத்தியதை மறந்துவிட்டாயா நான் சேரபோகிறேன் என்கிறான். அப்படின்னா என்ன கொண்டுபோய் நாகலிங்கண்னே வீட்டில் விட்டுட்டு போங்க நானும் பிள்ளையும் நீங்க வரும்வரை அங்கே இருக்கோம் என்கிறாள். நாகலிங்கண்னே பெயர் கேட்டவுடன் ஜமீல் சோர்வுடன் அமர்ந்து பின்னோக்கி பார்க்கிறான்.

ஜமீலும் நாகலிங்கமும் வியாபார நண்பர்கள். இனக்கலவர காலகட்டங்களிலும் இருவரின் நட்பும் தொடர்கிறது. நிறைமாத கர்பிணியான ஆயிஷாவை நாகலிங்கம் பொறுப்பில் விட்டு கொழும்பு செல்கிறான் அவசரவேலையாக.

அவன் சென்றபின் ஆயிஷாவுக்கு பிரசவ வலி எடுக்க நாகலிங்கமும் அவன் மனைவியும் ஆஸ்பத்திரி சேர்த்து ஆண் குழந்தை பெறுகிறாள். நாகலிங்கம் மனைவி செல்வராணி அருகிருந்து எல்லாம் செய்கிறாள். யாழ்ப்பாணத்தில் இருக்கிற முஸ்லீம்கள் அனைவரையும் இயக்கம் வெளியேற்றுகிறது என்ற தகவலை நாகலிங்கம் சொல்ல அதிர்ச்சியடையும் செல்வராணி அதுகள் எங்கே போகும் பிறப்புறுப்பில் கத்தி வச்ச பிள்ளை அசைய கூட முடியாது என்று பதறுகிறாள்.

நான் கார் கொண்டு பின்பக்கமாக வருகிறேன். நம் வீட்டுக்கு கூட்டி போவோம் இங்கிருக்க வேண்டா வர்றியாமா என்று ஆயிஷாவை கேட்க நீங்களும் அண்ணணும் எங்க கூப்பிட்டாலும் வருகிறேன் என்கிறாள்.

கார் கொண்டுவர காரில் கூட ஏற சிரமப்படும் ஆயிஷாவை தூக்கி காரில் படுக்கவைக்க நாகலிங்கம் கை பிசுபிசுப்பாகிறது. பிள்ளைத்தீட்டு என்று கைகளை கழுவிக்கொண்டு காரை ஒருவாறு மறைத்து சுற்றி வீட்டையடைகிறார். என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் எனறு ஆயிஷா மருகுகிறாள்.

பத்திய சமையல் கொடுத்து செல்வராணி கவனித்துகொள்ள இயக்கத்துக்கு அக்கம்பக்கம் மூலம் செய்தி கசிகிறது.

இயக்கத்தில் இருந்து வந்த ஆட்கள் நாகலிங்கத்திடம் அவரை வெளியேற்ற வேண்டும் என சொல்ல இந்த பிள்ளைக்கு பிறப்பு வாசலில் கத்தி வச்சிருக்கு எழுந்து நிற்க கூட முடியாது என்று சொல்லும் போதும் முடியாது வெளியேற்றியே ஆகவேண்டும் இயக்கத்தின் கட்டளை என்கிறார்கள்.

ஆர்மிகாரனை விட கொடுமையா இருக்கு என்று செல்வராணி முணுமுணுக்க ஆயிஷாவை சோதனையிட வேண்டும் ஐநூறு ரூபாய் பணமும் மாற்று துணி மட்டும் தான் எடுத்து செல்ல வேண்டும் நகை எதுவும் கொண்டு போக கூடாது என்று ஆயிஷாவை சோதனையிட இயக்கத்தின் பெண் உறுப்பினர்கள் நெருங்க பிள்ளை பெற்று வந்திருக்கா தீட்டு தான் வழியுது சோதனை செய்யுங்கோ என செல்வராணி எரிச்சலுடன் சொல்ல சரி கிளம்புங்கோ என்கிறார் ஆயிஷாவிடம்.

என்னை நம்பி விட்டிருக்கான் நானே பத்திரமா சேர்த்துடுறேன் என வியாபாரத்துக்கு எடுத்து செல்லும் லாரியில் சாக்கு விரித்து அதன்மேல் துணி விரித்து ஒரளவு பாதுகாப்பாக ஆயிஷாவையும் குழந்தையையும் படுக்க வைக்கிறார்கள் நாகலிங்கமும் செல்வராணியும்.

ஆயிஷாவின் தந்தை வீடு மதவாச்சியில் தெரியுமாதலால் அங்கு செல்கிறார் நாகலிங்கம். லாரியை கண்டதும் ஓடிவரும் ஜமீல் அண்ணே என்று கதறுகிறான்.உன்ற ஆயிஷாவும் பிள்ளையும் பத்திரமா வந்திருக்காக என்று சொல்ல ஆயிஷா என்று கத்திகொண்டே ஜமீல் லாரி பின்பக்கம் ஏறுகிறான்.

நாகலிங்கம் நான் போகவேண்டும் இந்தா லாரி சாவி பிடி இனி லாரி உன்னுது தான் என சொல்ல அண்ணே இது இல்லாம எப்படி நீங்க வியாபாரம் செய்ய என கேட்க எனக்கு ஊரில் வீடு இருக்கு உனக்கு வீடு வாசல் இல்லை உன் பிள்ளைக்கு என்ற பரிசா இருக்கட்டும் என விடைபெறுகிறார்.

ஆயிஷா என்னங்க யோசனை ஆர்மி போவ தான் போறீகளா என கேட்க இல்லை என்கிறான்.

கலவையான உணர்வை கொடுத்து கலங்கவும் யோசிக்கவும் வைத்த கதை.

இலங்கை தமிழ் நடையில் “மலேசியன் ஏர்லைன் 370” – சிறுகதை தொகுப்பு – ஆசிரியர் நடேசன்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.