Monthly Archives: ஏப்ரல் 2017

மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா2017

<img இலங்கையிலிருந்து ‘ஞானம்’ ஆசிரியர் ஞானசேகரன், எழுத்தாளர் மடுளுகிரியே விஜேரத்தின வருகை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ‘ ஞானம்’ இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன ஆகியோர் வருகை தருகின்றனர். எதிர்வரும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நினைவில் வாழும் விசுவானந்ததேவன்

நடேசன் 77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு செல்லும்போது பலதடவைகள் விசுவானந்ததேவனைக் கண்டிருக்கிறேன். துணிப்பையை தோளில் கொழுவியபடி குறைந்தது இரண்டு நண்பர்களுடன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் புற்களோ அல்லது ஊர்வனவோ நசிந்துவிடாதிருக்கவேண்டும் என்பதுபோல் கால்களை எட்டி எட்டி … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்

நடேசன் ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன. இதுவே சவர்க்காரம் உருவாகிய … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

மெல்பன் வருகை

மெல்பன் கரையில் மோதும் நினைவலைகள் 3 நடேசன் எனது வாழ்வில் அதிக காலம் மெல்பனில் வாழப்போகிறேன் என அக்காலத்தில் நான் எண்ணவில்லை. மனைவியின் சகோதரர்கள் இருவர் இங்கு இருந்தபோதும் மனைவிகூட அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. நாட்டை விட்டு வாழ்வுதேடி ஓடியவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால் என்னையறியாமல் வாழ்வின் பெரும்பகுதி உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றான மெல்பனில் அமைந்துவிட்டது. … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

பூமராங் இணைய இதழ்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ் பூமராங் உங்கள் பார்வைக்கு வருகிறது. http://www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம். சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக