Month: திசெம்பர் 2016
-
The Multi Faceted Tamil Writer
Arjunan Puveendran Last (2015) year, the Australian Tamil community lost Arun Vijayarani, who was a well-regarded Tamil writer and community worker. As a humble woman, she preferred to remain out of the limelight. However, the celebration of her life since her passing has served as an ideal to many in the Tamil community of a […]
-
தனித்துவம் மிக்க சோ
அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ நாடகத்தில் – திரைப்படத்தில் – இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது முருகபூபதி ” நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்.” என்று 35 வயதுள்ள அவர், நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர், சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில் […]
-
வெம்பல்
இருபத்தைந்து வருடங்களின் பின்பாக யாழ்ப்பாணம் செல்ல முடிந்ததற்கு ரோஜாவிற்குப் போர் முடிந்தது மட்டுமல்ல. பலகாரணங்கள். வேறு எவைகளாக இருக்கும்? காரணங்களை அவள் மனத்தில் உருவகித்துப் பார்த்தாள். சில வருடங்கள் முன்பாக கணவன் இறந்தது பெரிய வெற்றிடத்தை வாழ்வில் உருவாக்கியது. அது மட்டுமா? இவ்வளவு காலமும் மகனும் மகளும் குழந்தைகள் எனப் பொத்திப் பொத்தி பொக்கிசமாக வளர்த்தபின் பெரியவர்களாக கிழமைக்கும் மாதத்திற்கும் ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கிறார்கள். அவர்களைப் பிழைசொல்லமுடியாது. இறகுகள் முளைத்த பின்பு புதிதான வாழ்க்கையை […]
-
கதைகதையாம் காரணமாம்.9. / சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை. /
அ.ராமசாமி வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப்படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்துவிட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான். கைக்குள் இருப்பதாக நினைத்தால் மூன்று தடவை ஆள்காட்டிவிரலால் மணலைக்கோரி எடுக்கும்போது திரி வெளியே வந்துவிட்டாலும் வெற்றிதான். […]