அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு
அவுஸ்திரேலியாவில் பலவருடங்களாக இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (26 ஆம் திகதி) சனிக்கிழமை மெல்பனில் மல்கிரேவ் Neighborhood House மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
சங்கத்தின் துணைத்தலைவர் திரு. லெ.முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் , உலகெங்கும் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான திருமதி அருண். விஜயராணியை நினைவுகூர்ந்தும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2015-2016 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் புதிய நடப்பாண்டுக்கான ( 2016 -2017) புதிய நிருவாகிகள் தெரிவு, கிடைக்கப்பெற்ற பரிந்துரைப்படிவங்களின் (Nominations) அடிப்படையில் நடைபெற்றது.
புதிய நிருவாகிகள் தெரிவு, அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் திரு. யாழ். பாஸ்கர் முன்னிலையில் இடம்பெற்றது.
புதிய நிருவாகிகள்:
காப்பாளர்: திரு. கலைவளன் சிசு. நாகேந்திரன்.
தலைவர்: திரு. லெ.முருகபூபதி
துணைத்தலைவர்கள்: திரு. சங்கர சுப்பிரமணியன், பேராசிரியர் ஆசி. கந்தராஜா.
செயலாளர்: டொக்டர் நடேசன்.
துணைச்செயலாளர்: திரு. ஏ.ஆர். திருச்செந்தூரன்.
நிதிச்செயலாளர்: திரு. தெய்வீகன் பஞ்சலிங்கம்.
துணை நிதிச்செயலாளர்: திரு. எஸ். அறவேந்தன்.
இதழாசிரியர்: திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்.
செயற்குழுவினர்:
திருமதி சகுந்தலா கணநாதன், கலாநிதி ஆர். ஶ்ரீகாந்தன், திருவாளர்கள் செல்வபாண்டியன், முகுந்தராஜ், சுந்தரேசன், ஜெயபிரசாத், கலாநிதி செய்யத் ஷெரிப்தீன்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்