மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்

Atlas Logoஅண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
செங்கையாழியன்
எதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive – Vermont South, Vic – 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.
புண்ணியாமின்
இந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து மெல்பனுக்கு வருகை தரும் மூத்த படைப்பாளிகள் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம் சாந்திகம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
விஜயன்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் இரண்டு அமர்வுகளில் இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
முதல் அமர்வில் இடம்பெறும் நினைவரங்கில் அமரர் செங்கை ஆழியான் நினைவுரையை எழுத்தாளர் ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார்.புன்னியாமீன் தொடர்பான நினைவுரையை யாழ்ப்பாணம் சாந்திகம் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரனும், கே. விஜயன் பற்றிய நினைவுரையை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரனும் நிகழ்த்துவர்.

இதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில்
” கடந்த கால்நூற்றாண்டுகளில் – ஈழத் தமிழ் இலக்கிய தடங்கள் – இனிவரும் மாற்றங்கள் ” என்னும் தலைப்பில் மூத்த படைப்பாளியும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.
கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: