அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம்.
இங்கு வந்த சிறிது காலத்தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் ? யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா? பணம், உறவுகள் எனபனவற்றிலும் பார்க்க எனது நினைவுகளே முக்கியம் என நினைத்துப் பார்க்க வைத்த ஒரு படம் ஸ்ரில் அலிஸ்.
ஓய்வாக இருந்த தருணத்தில் சாதாரணமாக தொலைக்காட்சியில் பார்த்த படம் என்னை பல நாட்களாக மனத்தில் கவ்விக் பிடித்துகொண்டிருக்கிறது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மொழியை கற்றிக்கு பேராசிரியராக இருந்த பெண் ஐம்பது வயதில் தனது நினைவவுகளை இழப்பதும என்பபதே இதன்கருவாகும்.
இந்த (Alzheimer disease ) இந்த அல்சைமர் என்ற மறதிநோய் பாரம்பரை அலகுகளால் ஏற்படுவது. போரசிரியரின் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் இருகிறார்கள் இந்த நோய் அவர்களுக்கு இருப்பதன் சாத்தியங்கள் உள்ளதால் அவர்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலை.
பிள்ளைகளின் பரம்பரை அலகை சோதித்தபோது மகனுக்கு அந்த பரம்பரை அலகு இல்லை ஆனால் ஒரு மகள் அந்த சோதனையை செயய மறுக்கிறாள் அனா என்ற மற்ற பெண்ணுக்கு உள்ளது ஆனால் அனா வேறு விந்தை செய்ற்கையாக ஏற்றி இரட்டைப்பிள்ளைகளை கர்பந்தரிக்கிறாள்.
ஜுலியன் மோர் அலக்ஸ்,அலெக்ஸ் பால்வின் நடித்த படம். இந்தப்படத்தில் ஜுலியன்மோர் ஒஸ்கார் பரிசு பெற்றார்.
லுசா ஜெனிவா என்ற நரம்பியலாளரால் எழுதப்பட்ட இந்த நாவல் மிகவும் பிரசித்தியானது.
நாவலைப் படமாக்குவது என்பது மிகவும் கடினமான விடயம்.அதை மிகவும் அழகாக செய்திருப்பதாக சொல்கிறார்கள் நாவலைத் தேடிப்படிக்க விரும்புகிறேன் .
ஆல்சைமர் பற்றி வாழும்சுவடுகளில் ஒரு கட்டுரையும் அதேபோல் மலேசியா ஏர்லைன் 70ல் ஒரு சிறுகதையும் உளளது..
மருத்துவ விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவர சிறுகதைகள் நாவல்கள் உதவும் ஆனால் அதை எப்படி கலைப்படைப்பாக்கவேண்டும் என்பதற்கு இந்த ஸ்ரில் அலிஸ் உதாரணம்.
எலிசெபத் ஏன் அழுதாள்
முதுமையின் எல்லை
மறுமொழியொன்றை இடுங்கள்