அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு முதலான அமர்வுகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – பெண்ணியச்சிந்தனையாளர்கள் மற்றும் அன்பர்களின் வரவை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி – தமிழினி சிவகாமி ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும் இடம்பெறும்.
எமது சங்கம் முதல்தடவையாக நடத்தவிருக்கும் அகில உலக மகளிர் தின விழாவில் கலந்துகொள்ளவிரும்புவோர் மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
மகளிர் தின விழா தொடர்பாளர் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா (துணைச்செயலாளர்) 0404 70 37 69
பேராசிரியர் ஆசி. கந்தராஜா (தலைவர்) (02) 9838 4378
டொக்டர் நடேசன் (செயலாளர்) 0452 63 19 54
லெ.முருகபூபதி ( துணைத்தலைவர் ) 04166 25 766
மறுமொழியொன்றை இடுங்கள்