Monthly Archives: பிப்ரவரி 2016

நல்லதைக் கூறும் குத்துப்பாடல்

லண்டனில் வாழும் எனது நண்பன் டாக்டர் சாம் ஜெபகுமார் (ரஞ்ஜித்சிங்) உருவாக்கப்பட்ட குத்துப்பாடல் இதை கேட்பதுடன் மறறவர்களுடன் பகிரவும். Advertisements

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அசோகனின் வைத்தியசாலை

Ponniah Karunaharamoorthy உலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

ஸ்ரில் அலிஸ் (Still Alice)

அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது 50 டாலர் ஒற்றை நோட்டுடன் வந்தேன். மனத்தில் இருந்த நினைவுகளாக கல்வியை பயன்படுத்தமுடியும் என நம்பிக்கையிருந்தது. அவை எனக்கு மொழியால் அறிந்த விடயங்கள். ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கலாம். இங்கு வந்த சிறிது காலத்தில் எனது மூளை தொழிலைச் செயற்படும் ஆற்றலை மறந்திருந்தால் எப்படி இருக்கும் ? யாராவது அப்படி நினைத்துப் பார்கிறோமா? … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

என் பர்மிய நாட்கள் -1

நடேசன் இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா. பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி வருடக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி அங் சான் சூ கி யும் நினைவுக்கு வருவார். தற்போது ராக்கின் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வந்து வங்காளக்கடலிலும், … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்

கண்காட்சியும் கவிதா நிகழ்வும் இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

அகில உலக மகளிர்தினத்தை முன்னிட்டு எமது அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கிய கலைச்சங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி ( 06-03-2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு முதலான அமர்வுகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு

நடேசன் இலங்கை சுதந்திரமடைந்த 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கையர்களாகிய நாம் தமிழர்கள், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் என்ற எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் நமது தாய்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அதிர்வுகளும் எல்லோரையும் இன, மத பாகுபாடு இன்றி பாதிக்கிறது என்பதுதான் வரலாற்றில் படித்த உண்மை. இயற்கையின் பேரழிவு 2004 இல் நடந்த சுனாமி. அது தெற்கு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்