>
பாரிசில் இறந்த அப்பாவி மக்களின் இறப்பை நினைவு கூருகிறேன்.
அதேவேளையில் எதிர்காலத்தையும் எண்ணி அஞ்சவேண்டியுள்ளது. காரணம் நமக்கு பல பாடங்கள் தெரிந்திருக்கிறது.
இடதுசாரிகளின் வர்க்கப்போராட்டத்தில் நூறு வருடங்களுக்கு முன்பாகவே பயங்கரவாதத்தை எதிர்த்தவர் லியோன் ரோக்ஸி (Leon Trotsky))
இவர் மூன்று காரணங்களைக் கூறினார்.
1. ஏற்கனவே துன்பப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும்.
2. வன்முறையையும் அடக்குமுறையையும் ஆளும் வர்க்கத்திடம் மேலும் மேலும் எதிர்பார்க்கவேண்டிவரும்.
3. எல்லாவற்றிலும் முக்கியமாக மக்கள் மத்தியில் தனிமனிதர்களின் செயல்கள் வரவேற்புபெற்று புகழப்படும்போது மொத்தமான அரசியல் போராட்டம் பின்தங்கிவிடும். பயங்கரவாத செயல் முடிந்தபின்பு மீண்டும் அதிகாரமும் வன்முறையும் தொடர்ச்சியாக இருக்கும்.
ஆனால் லியோன் ராஸ்கி இடதுசாரி பயங்கரவாதததிலும் மூர்க்கத்தனமான மதபயங்கரவாதத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்.அவர் நினைத்திருக்கலாம் சிலுவை யுத்தங்கயோடு மதங்களின் ஆதிக்கம்முடிந்து விட்டது என்று. மீண்டும் அது தலைதூக்கியுள்ளது. ஆனால் அதை மேற்குலம் எப்படி எதிர்கொள்கிறது என்பதே கேள்விக்குறி. . பெண்களை குழந்தைகளை தங்களது பயங்கரவாத வழிகளுக்கு பாவிப்பார்கள். பயங்கரவாதிகளை சாதாரண மக்களில் இருந்து வடிகட்டவேணடும் மேலும் தற்பொழுது அமைதியான நாடுகளில் இந்த நோய் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இங்கு இஸ்லாமிய மார்க்க வாதிகள் அமைதியை பேணுவதற்கும் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? அது எப்படி ,? மாட்டின் லூதரோ மகாத்மாவோ வருவார்களா?
மிகவும் அசாதாரணமான காலத்தில் வாழ்கிறோம்.
மறுமொழியொன்றை இடுங்கள்