பொன் விளையும் பூமி.

House
பிற்க்காலத்தில் மண்டேலா வாழ்ந்த வீடு

Boy
சுவற்றோக் குழந்தை
எங்கள் தமிழ் வழக்கத்தில் பொன் விளையும் பூமி என்ற நாங்கள் கேள்விப்பட்டது நெல் விளையும் வயலைத்தான். ஆனால் உண்மையாக பொன் விளைந்தது மட்டுமல்ல பாதையோரத்தில் குவிக்கப்பட்ட மண்குவியல் தங்கத்துகளை தன்னகத்தே கொண்டு தங்க நிறத்தில் காட்சியளிக்கும் ஒரே நகரம் ஜோகன்ஸ்பேக். அந்த மண்ணில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் அங்காங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருக்கிறது.

Apparthied era shop (2)
பொன் மண்

நாங்கள் போய் இறங்கிய விமான நிலயம் ஆபிரிக்கா காங்கிரஸ் தலைவரில் ஒருவராகிய ஒலிவர் தம்புவின் பெயரால் உள்ளது. இறங்கியதும்; நாங்கள் சென்ற ஹோட்டேலுக்கு அழைத்து செல்லப்பட்டபோது அந்த ஹொட்டேல் சாதரணமாகத் நான் சென்ற நாட்டில் உள்ள ஹோட்டேல்போல்த் தோன்றவில்லை அந்த இடத்தில காசினோ உணவுக்கடைகள் அதைவிட பறவைகள் வைத்திருந்த சரணாலயம் அமைந்திருந்தது. ஆனால் இவைக்கு செல்வதற்கு வழிகள் ஆயுதம் தாங்கிய காவலர்களால் பாதுகாப்படடிருக்கும். ஜோகன்ஸ்பேக்ல்; வழிப்பறி கொள்ளை என்பன சாதாரணமாக நடப்பதால் இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்கும் உள்ளது.

நகரத்தில் வெள்ளையர் மட்டும் வசித்த பகுதிகளில் இப்பொழுது பணமுடைய கறுப்பு இனத்தவர்கள் முழு ஆபிரிக்க கண்டத்திலும் இருந்து வந்து வசித்தாலும் நிறபேதகாலத்தில் நிலவிய பாதுகாப்பு இனனமும் தொடர்கிறது. ஆனால் தற்பொழுது வர்க்க ரீதியில் வெளியாரகள், உள்ளிருப்பவர்களின் அனுமதியின்று செல்லமுடியாது அதாவது கேட் கோமியுனிட்டி (Gated Community) என்று அமைந்துள்ளது. பணவசதியுள்ளவர்கள் ஏழைகளிடம் பயந்தபடி வாழும் நகரம் ஜோகன்ஸ்பேக

ஜோகன்ஸ்பேக்கில் நான் பயந்த தருணம் இருந்தது. ஒரு கடையின் முன்பு எமது கார் வேறு ஒரு புதிய சாரதிக்காக காத்திருந்தது. அந்த கடையில் இருந்து பணத்தை வங்கிக்கு கொண்டு செல்ல வானில் சிலர் வந்தனர் அப்பொழுது காவலர் ஒருவர் கடைக்கு வெளியே இராணுவ துப்பாக்கியுடன் காத்திருந்தபோது அவர் பயத்துடன் எங்களைப் பார்த்தார் மேலும் காலை மாற்றிபடி தாக்குதலுக்கு தயரானவர்போல் துப்பாக்கியை மேலும் கீழும் அசைப்பது தெரிந்தது. எமது காரை, அந்த மனிதன் காசை கொள்ளையடிக்க வந்தவர்களின் காராக நினைத்து விட்டாரோ என நான் நினைத்து எமது சாரதியிடம் காரே வேறு இடத்திற்கு மாற்றும்படி கூறினேன்.

எங்களை ஒரு இலங்கை நண்பன் வந்து மாலை உணவிற்கு கூட்டி சென்றபோது இரவு ஏழுமணி இருக்கும். இந்தியக்கடை முன்பாக நிறுத்திவிட்டு அந்தப்பகுதியில் அழுக்கான உடையணிந்து புகைத்தபடியே இருந்த ஒரு கறுப்பு இளைஞனிடம் காரைப் பார்க்க சொன்னான். பின்பு நாங்கள் உணவருந்திவிட்டு வந்தபோது எமது மிஞ்சிய உணவை அவனுக்கு கொடுத்தான். எனக்கு அதிசமாக இருந்தது. மிகுதி உணவை வேறு ஒருவனுக்கு கொடுத்ததும் விந்தையாக இருந்தது.

நண்பனின் விளக்கம் இது

‘அவனிடம் சொன்னபடியால் அவன் அந்த காரைப் பாதுகாத்தான். அவனது கூலி இந்த உணவு. இல்லையென்றால் அந்தக்கார் கடத்தப்பட்டோ இல்லை உடைக்கப்பட்டோ இருக்கும்’

அவனுக்கு பக்கத்தில் ஒருவன் மயக்கத்தில் கிடந்தான் போதை வஸ்து அதாவது பெயின்டில் இருந்து மூக்கால் நுகர்வதும் அதில் ஏற்படும் போதை மிகவும் மலிவாக கிடைப்பதால் அதிகமாக பாவிக்கிறார்கள் என்றான் எனது நண்பன்.

வறுமை, போதைவஸ்து, ஏயிட்ஸ் என்பன தற்போதய தென்ஆபிரிக்காவை நிழலாக படர்ந்துள்ளன. அதேவேளையில் பாதையில் அதிக அளவு பென்ஸ்கார்களைப் பார்த்த நாடும் தென்ஆபிரிக்கவே. தென் ஆபிரிக்காவில தயாரிக்கப்பட்ட பென்ஸே முழு ஆபிரிக்க கண்டத்து நாடுகளுக்கும் செல்கிறது.
ஜோகன்ஸ்பேக் வீதிகள் மிகவும் அகலமானவை.ஜெர்மனிக்கு அடுத்ததாக பென்ஸ்காருக்கு ஏற்ற இடம் தென்ஆபிரிக்கா. அமரிக்கா, அவுஸ்திரேலிவை விட பாதைகள் தரமாக இருந்தது. இதற்கு 2010ல் நடந்த உலக உதைப்பந்தாட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்.

தென்னாபிரிக்காவின் மிகப் பெரிய நகரம் ஜோகன்ஸ்பேக் ஒருவிதத்தில் சில நகரங்களின் கூட்டு நகரமாகும். நிறபேத அரசு இருந்தகாலத்தில் கறுப்பர்கள், இந்தியர்கள் இந்த நகரத்தில் வசிக்கமுடியாது. ஆனால் ஜோகன்ஸ்பேக் இவர்கள் இல்லாது இயங்காது எனவே வேலைக்கு வந்து போவதற்றகாக நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் கறுப்பு இனத்தவர்க்காக ஒரு இடத்தை குடியிருப்பு நகரத்தை நிர்மாணிக்க அது பிற்காலத்தில் சுவற்றோவாக மாறியது. இப்படி இந்தியர்களுக்கு ஒரு பகுதி இருந்தது.

ஜோகன்ஸ்பேக் உருவாகிய வரலாறு மிகச் சுவையானது.

முதல் குடியேற்றநகரமான கேப் இரவுணை டச்சுக்காரரிடம் இருந்து பிரித்தானியர்கள் கைப்பறறியதும் 1830 விவசாயிகளிடம் வரி வசூலிக்கத் தொடங்கியபோது சுதந்திர மனப்பான்மை கொண்ட போயர்கள் என்ற ஒல்லாந்தில் இருந்து வந்த விவசாயிகள் தஙகள் குடும்பங்கள் மற்றும் மிருகங்களோடு கேப் மாநிலத்தில் இருந்து ஆபிரிக்காவின் உள்நோக்கி நகரத்தொடங்கினார்கள். உள்நாட்டில் இருந்த பண்டு மொழிபேசும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் இதனால் தங்கள் நிலத்தை இழந்தனர். விவசாயத்தால உருவாகிய பகுதிகளில் தற்செயலாக வைரம்(1867) பின்பு தங்கம்; (1886) இரண்டும் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த பகுதி நகரமாக வளர்சியடைந்தது. தங்கம், வைரம்அதிகளவு இருந்ததால் இது கனப்பொருட்களின் புரட்சி என வர்ணிக்கப்பட்டது. உலகெங்கும் இருந்து பலர் வந்து வைரங்கள் Nதூண்டினார்கள் ஆரம்பத்தில் போயர்கள் ரான்வால், ஓறேன்ஜ் என இரண்டு குடியரசுகளை உருவாக்கி தனிபகுதியாக ஆண்டார்கள்

அப்பொழுது தற்போதய தென்ஆபிரிகாவில் இந்த போயர் குடியரசோடு சில ஆபிரிக்க அரசுகளும் நட்டால் கேப் இரவுண் பகுதிகளை பிரிதானியர் தங்கள் காலனியாக நேரடியாக ஆண்டார்கள் . ஒருவிதத்தில் இந்தியாவை அரசாண்டது போல் நேரடியாக வரிகட்டுபவர்களாகவும் சிற்றரசுகளை மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பணம் வசூலித்தது போன்றது.

19 ம் நூற்றாணடில் நடுப்பகுதியில் இரஸ்சியாவுக்கு எதிராக துருக்கியுடன் சேர்ந்து போர்புரிந்தபோது ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்காக போயர் குடியரசிடம வரிவசூலிக்க முயற்சித்து முழு தெனனாபிரக்காவையும் தனதாக்க முயற்சித்ததால் சூலு தேசத்தவரிடமும் பின்பு போயர்களிடமும் சண்டையிட்டு கைப்பற்றினார்கள். அதன் விளைவாகவே தற்போதய தென் ஆபிரிக்கா தேசம் உருவாகியது,. இந்த போயர் யுத்ததில் ஆரம்பத்தில் தோற்றபோதும் கிட்டதட்ட மூன்று வருடம் நடந்தபோரில் அவுஸ்திரேலியர்களையும் தனது இராணுவத்தில் பயன்படுத்தி போயர்களை தோற்கடித்தார்கள். மோகன்லால் காந்தி தென்னாபிரிக்காவில் இருந்தகாலத்தில் இந்த சண்டையில் காயமடைந்தவர்களைப் பராமரித்திருக்கிறார்.

Appartied era shop (1)

நிறமேதமிருந்த காலத்தில் இருந்த கடை – இப்பொழுதும் அந்த பெயர்ப் பலகையுடன்.
பிரித்தானியர்களே வெள்ளையர் மட்டும் அரசாளும் நிறபேதமான ஆட்சியை உருவாக்கியவர்கள். பிரித்தானிய சாம்பிராச்சியத்தால் உருவாக்கப்பட்ட நிறபேதமான காலனி அரசு மூன்று முக்கிய தூண்களில் தாங்கப்பட்டிருந்தது

1)ஆபிரிக்காவில் காணிகளை வெள்ளையர்கள் மடடுமே வைத்திருப்பது- இதன்மூலம் சுரங்கத்தொழில் விவசாயம் தொடரச்சியாக தங்களது கட்டுப்பாட்டில்வைத்திருத்தல்

2)சுரங்கத்தில் குறைந்த வேதனத்தில் தோழிலாளர் தேவைப்பட்டார்கள்

3)அரசியல் அதிகாரம்

இந்த மூன்றையும் வைத்திருப்பதற்கு நிறபேதம் உதவியாக இருந்தது.

நிறபேத அரசு தென் ஆபிரிக்காவின் அபிவிருத்திக்கு துணைபுரிந்தது. தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை கொடுத்தது. நகர மயமக்கத்திற்கு உதவியது. முக்கியமாக தங்கம், வைரம் போன்றவற்றின் சுரங்கத்திற்கு தொழிலாளிகளை மலிவாக கொடுத்தது உருவாக்கியது அதேநேரத்தில அரச அதிகாரத்தை வெள்ளையரிடம் வைத்திருக்க முடிந்தது.

இரண்டாவது உலகப்போரில் காலனிகள் அழிந்து சுதந்திரமடைந்தபோது 1948 அப்பாதிதைட் (Apartheid)அரசு உருவாகியது இது மேலும் நிறபேதத்தை நவீனமயப்படுத்தியது கல்வி காணி என்பவற்றின் மீது வெள்ளையர்களுக்கு உடமையாக்கியது அதேநேரத்தில் கறுப்பர்பர்களை சமமற்றமுறையில் தென்னாபிரிக்க பொருளாதாரத்தின் ஒருபகுதியாக இணைத்தது

இந்தியர்கள் கலப்பு நிறத்தவர் வெள்ளையர்களிடையே கலப்பு திருமணத்தை தடைசெய்து கறுப்பினத்தவர்கள்களை உயர்கல்விகளில் இருந்து பிரித்து கறுப்பர்கள் வாழும் பத்து பிரதேசங்களை உருவாக்கியது. புதின்மூன்று வீத வீதமான நில பிரதேசங்களை எழுபத்தைந்து வீதமான கறுப்புமக்களை குடியிருத்தி நிரந்தரமான அடிமை நிலையை உருவாக்கவிரும்பியது பத்து முக்கிய கறுப்பினங்களை அவர்களுக்கென தனி இடங்களாபிரித்து அரசாள விரும்பியது.

1912கறுப்பித்தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ வன்முறையற்ற எதிர்பைக் ஆரம்பத்தில் கடைப்படித்தது. கறுப்பு இனமக்கள் தங்களது அடையாள அட்டைகளை எதிர்தது செய்த போராட்டத்தில 1960 சார்பில் சார்ப்வில்என்ற இடத்தில் நிராயுதபாணியான 69 போர் ஆயதப்படையால் கொலை செய்யப்பட்டனர் இதன்பின் வன்முறை தவிர்க்க முடியாததால் ஆபிரிக்க தேசியகாங்கிரஸ் தனக்கு ஒரு ஆயுத அணியை உருவாக்கியது. இதனால் உருவாகிய நிலப்பாட்டில் 1962 நெல்சன் மண்டேலா கைது செய்யப்படடு ஆயுள் தண்டனை பெற்றார்

நான் ஜோகன்ஸ்பேக்கில் செல்ல விரும்பிய இடம் சுவற்ரோ நகரம் (Soweto Township) . பத்திரிகைகளில் 1974 ஜுலையில் சுவற்றோ(Soweto) மாணவர்கள் ஆபிரிக்கானா மொழியில் கல்வியை போதிக்க அப்பதிட் அரசாங்கம் எடுத்த முடிவை எதிர்து செய்த பரட்சியில் நடந்த துப்பாக்கி சூட்டால் இறந்தார்கள்.
SwetoIMG_3510
நாம் சென்ற சுவற்றோ(Soweto) பகுதி தற்பொழுது மிகவும் பெரிய நகரமாக இருக்கிறது. தற்பொழுது கறுப்பின மில்லியனர்கள் அங்கு வாழ்கிறார்கள். அங்குள்ள ஏழைக் குழந்தைகள் படிக்குப் பாடசாலைக்கு சென்று பார்த்தோம்.
Sweto children
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மத்திய அரசாங்கதையும் மற்றும் கேப் இரவுன் இருக்கும் மாநிலத்தை தவிர ஏனைய மாநிலங்களை ஆண்டபோதிலும இன்னமும் வெள்ளையர்கள் கம்பனிகள்வசமே நிலங்கள் மற்றும் செல்வமும் இருக்கிறது. இந்த செல்வத்தை கறுப்பின மக்கள் அடைவது எப்படி என்பது மிகப்பெரிய கேள்வி

சம்பியாவில் முகாபே செய்ததுபோல் நடந்தால் என்ன உருவாகும் என்பதை எமது காரோட்டிய கறுப்பினத்தவரே சொன்னார். தென்னாபிரிக்காவில் வானவில்தேசத்தை கட்டியெழுப்பிய நெல்சன் மண்டேலா இனனமும் வானத்தில் இருந்து தனது கனவு கலையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: