நடேசன்
கூகுள் தனது இணையத்தில் நடத்திய தேடல்களின்படி இந்தியர்கள் மற்றும் இலங்கையினர் செக்ஸ் என்ற வார்தையை அதிகமாகத் தேடியவர்களாக அறிவித்திருந்தது. தற்போதய தொழில்நூட்ப முறைப்படி எந்த மாவட்டத்தில் அல்லது எந்த ஊரில் இருந்து தேடினார்கள் என்பதைக் கண்டுபிடிக்முடியும். இதன்படி கலாச்சாரம் பண்பாட்டால் மறைபொருளாக இருக்கும் இடங்களில் இந்த தேடல் தொடங்குகிறது.
போர்ணோ எனும் நீலப்படங்கள் பெண்களை தரக்குறைவாக காமப் பொருளாக நினைக்கவைப்பதிலும், சில தொகையினர் இதற்கு அடிமையயாகிவிடுகிறர்கள் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
போண் வீடியோ தடை எக்காலத்திலும் உள்ளது ஆனால் தற்பொழுது வீடியோ ஏன் சிடீ இல்லாமல் போனதால தற்போது இணையத்தளங்கள் அதை ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்கிறது அக்காலச் சட்டம் காலாவதியாகிவிட்டது. இதற்கு காரணம் தொழில்நுட்பம் உயருவதே.
எனக்குத் தெரிய இலங்கையில் இப்படியான போண் வீடியோக்களை பறிமுதல் செய்தபின் அதை பொலிசார் வைத்து பொலிஸ் நிலயத்தில் போடுவதை நான் பார்திருக்கிறேன்.
சட்டங்கள் போட்டு தடைசெய்யும் ஒரு குற்றசெயலை மிகவும் சிறிய பகுதியினர் செய்தால் மற்றவர்கள் ஒத்துளைப்புடன் அதை பொலிஸ் நீதித்துறை தடுக்கமுடியும். ஆனால் ஏராளமானவர்கள் செய்யும் ஒருவிடயத்தை எதிர்த்து சட்டத்தைப் போட்டாலும் அதை அமூல் நடத்தமுடியாது.
சட்டத்தை இலகுவாக போடலாம். இலங்கையில் பயங்கரவாத தடைசட்டம் போட்டபோது அதை எத்தனை பேர்மீறினாகள் காரணம் முழு சமுதாயமும் சட்டமீறலை ஆதரித்து. அதேபோல்த்தான் மது புகையிலை எனப் பலர் செய்யும் விடயங்களை சட்டம் போட்டு தடுக்க முதல் பிரசாரம் செய்து சமூகத்தில் விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும். இதன்மூலம் எவ்வளவு பாதகாமான செயலாக உள்ளது என்பதை விளக்கவேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் இலஞ்சம், விபச்சாரம் போன்றவற்றிற்கு எதிராக சட்டம் உளளது அவைகளை சரியாக அமூல் நடத்த முடியவில்லை. மேலும் இந்த போன் விவகாரத்தில் நேரடிய ஒருவர் பாதிபடைவதில்லை, அல்லது பாதிப்பு ஏற்பட பலநாட்கள் செல்லும். உதாரணமாக ஒரு மகன் போன் வீடியோ பார்த்தான் என பொலிஸ் கைது செய்து சிறைவைத்தால் தாய்தந்தையினர் எப்படி நினைப்பார்கள்.
‘ போக்கிலாதவர்களே எத்தனை கொலை கொள்ளை பிடிக்க துப்பில்லை என்னர மகன் ஏதோ பார்தானாம் என் பிடிக்கவாறீர்கள்?’
அரசியல்வாதிகள் மக்களுக்கு தெரிந்த, தங்களுக்கு புரிந்த, தங்களை பாதிக்காத விடயங்களுக்கு எதிராக சட்டம் போடமுயல்வதின்மூலம் தங்கள் பிரபலத்தை கூட்ட முயற்சிக்கலாம். ஆனால் சமூகத்தில் சிந்திபவர்கள் இந்த சட்டத்தால் ஏற்படும் விளைவுகளையும் தூரநோக்கில் பார்த்தே ஆதரிக்கவேண்டும் மேலும் அரசியல்வாதி ஒரு விடயத்தை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கொண்டுவர முனைந்தால் அதனது நோக்கத்தை பார்க்க வேண்டும்.
இந்தியாவில் அவசரமாக பல விடயங்கள் தீர்ப்பதற்கு உள்ளன.
மறுமொழியொன்றை இடுங்கள்