மாதம்: ஜூலை 2015
-
உயிர்க்கொல்லிப் பாம்பு (சிறுகதை)
நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து…
-
கண்ணாடிச் சட்டத்துள் காட்சியாகிய அப்துல் கலாமின் காசோலை
” இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் ” என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன் முருகபூபதி கடல் அலைகள், பொன்மணல், புனிதயாத்திரிகர்களின் நம்பிக்கை, இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு, இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ… என் அன்னையே… உன் ஆதரவுக்கரங்கள் என் வேதனையை மென்மையாய் அகற்றின உன் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு வலிமை தந்தன. அதைக்கொண்டே நான் இந்த உலகை அச்சமின்றி எதிர்கொண்டேன் என் அன்னையே……
-
ஜெயமோகனின் முதற்கனல் – எனது பார்வை.
நடேசன். ஜெயமோகனின் முதற்கனலை படித்து முடித்து அதைப் பற்றிய எனது பார்வையை எழுத நினைத்தபோது என்னளவில் அறிந்த ஒரு சிறிய வரலாறும் நினைவுக்கு வந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்கழியில் எனது அறுபதாவது பிறந்த தினத்தின்போது எனது மனைவியும் நண்பர் முருகபூபதி மற்றும் எனது உறவினரான சிறிஸ்கந்தராஜாவும் ஒழுங்குசெய்த நிகழ்ச்சிக்கு பல நண்பர்கள் வந்து பல பரிசுப்பொருட்கள் தந்தார்கள். சேர்ட்டுகள் குடிவகைகள் எல்லாம் கொடுத்தார்கள். நண்பர் இளங்கோவும் டொக்டர் ஐமன் ஹாசனும் எனக்கு புத்தகங்களை பரிசளித்தனர்.…
-
அயற்சியை அந்நியப்படுத்திய ஆளுமை ஜெயமோகன்
முருகபூபதி (அண்மையில் கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய இயல்விருதினைப் பெற்றுக்கொண்ட படைப்பிலக்கியவாதி ஜெயமோகனுக்கு கனடா காலம் இதழ் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற கட்டுரை.) தமிழ் இலக்கியப்பரப்பில் சமகாலத்தில் என்னை பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் படைப்பாளி திரு. ஜெயமோகன் அவர்கள்தான் எனச் சொல்வதன் மூலம் ஜெயமோகன் வழிபாட்டில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றேன் எனச்சொல்லமுடியாது. வாசிப்பு அனுபவம் காலத்துக்குக்காலம் மாறிக்கொண்டிருப்பது. ஒரு காலத்தில் ஒரே இரவில் சிவகாமியின் சபதம் படித்தவர்தான் ஜெயமோகன். அவருக்கு ஆரம்பத்தில் ஆதர்சமாக இருந்த சுந்தரராமசாமி தமது…
-
ஐயா எலக்சன் கேட்கிறார்.
ஐயா எலக்சன் கேட்கிறார். நடேசன் ஐயா எலக்சன் கேட்கிறார். மாவை நித்தியானந்தனின் நாடகத்தின் பெயர். பல தடைவ மெல்பேனில மேடையேறியது. தேர்தலே நாடகமாக தமிழர் மத்தியில் ஒவ்வொரு முறையும் அரங்கேறுகிறது. மக்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் வெட்டியள்ளிக்கொண்டு வருவாவார்கள் என ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் சமீபத்தில் உருத்திரகுமாரன் கதை என இலங்கைத் தமிழரை படிமமாக்கினேன். ஐந்து வருட கோமாவின் பின்பும் விடுதலைப்புலிகள் இருப்பதாக விடாது மறுத்து ஆயுதப்போராட்டதிற்கு தயாராகதக இருக்கும் கால் ஊனமான போராளி கடைசியில்…
-
நன்னம்பிக்கை முனையில் பூத்திருக்கும் புரட்டியா
நடேசன் மெல்பனைவிட்டு வேறுநாடு ஒன்றிற்கு சென்ற பின்பும் மெல்பனை நினைவு படுத்திய ஒரு நகரம்; தென்னாபிரிக்காவில் உள்ள கேப் ரவுண். ஒரே மாதிரியான பருவகாலங்கள். அகலமான வீதிகள் துறைமுகப் பிரதேசம் உயர்ந்த கட்டிடங்கள் சிறிது தூரம் சென்றால் மலைக்குன்றுகள் அதைச்சுற்றி கண்ணுக் கெட்டியதூரம் புல்வெளிகள் அப்பால் கரடுமுரடான கடற்கரையோரம் என விரிந்து செல்வதுபோல் தோன்றியது. செழிப்பான அழகில் மெல்பன் விருந்திற்கு வந்த அழகியாகத் தெரியும். ஆனால் கேப் ரவுண் அதே பெண்ணை உல்லாசப் பிரயாணத்தில் பார்த்ததுபோல் தோன்றும்.…
-
மொழியும் நாங்களும்.
நடேசன் இரண்டு வருடங்கள் முன்பாக ஸ்பானிய வகுப்பில் சேர்ந்து ஸ்பானிய மொழியை படித்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படித்தபின் ஸ்பானிஸ் மொழி தெரிந்துவிட்டது என்ற எண்ணத்தில் வகுப்பை நிறுத்தினேன். அதற்கு வீண் செலவு என்ற கருத்து வீட்டில் இருந்ததும் ஒரு காரணம். ஆனால் இந்த அறிவை வைத்து ஸ்பானிய படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற முடிவுடன் வகுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தற்போது இரண்டு வருடங்களில் ஸ்பானிஸ் மொழி எதுவும் என்னிடம் மிஞ்சியிருப்பதாக தெரியவில்லை ….? இலங்கையில்…
-
உருத்திரகுமாரனின் கதை (சிறுகதை)
விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டவர்கள் 1990 பின்னால் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்களே. அப்படிப்பட்ட விடுதலைப்பலி ஒருவர் சித்திரைவதை செய்யப்பட்ட சிறிய குறிப்பிலிருந்து எழுதப்பட்ட சிறுகதை சித்திரவதை செய்தவர் யார் என விரும்பினால் எனது ஈமெயிலில் தொடர்பு கொளளவும் அவரது பிறந்த தினத்தையொட்டி வெளிவருகிறது.uthayam@gmail.com.au நடேசன் லொக்கா மெருணா உம்ப இத்தின் திரஸ்தவாதி நொவே யக்கோ ( தலைவர் இறந்துவிட்டார். இனிமேல் நீ பயங்கரவாதியல்ல.) ‘உம்ப பொறுக்காறயா ‘ (நீ பொய்யன்)’ ‘ வேசிக்க புத்தா உம்பவ எதாம மருவாநம் பிரஸ்ன இவரவெலா…
-
தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேன் -நடேசன் நேர்காணல்
கருணாகரன் ————————————— இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் எழுத்தாளர் நடேசன். அங்கே 13 ஆண்டுகள் உதயம் என்ற பத்திரிகையை நண்பர்களோடு இணைந்து சவால்களின் மத்தியில் வெளியிட்டார். தமிழ்ப்பொது மனப்பாங்குக்கு மாற்றாக – யதார்த்தமாகச் சிந்திக்கும் நடேசன், மனித உரிமையாளராக – அவுஸ்ரேலியாவில் குடியேற முற்பட்ட இலங்கை அகதிகளின் உரிமைகளுக்காக உழைத்தவர். போருக்குப் பிந்திய இலங்கையில் அமைதிப் பணிகளிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இலக்கியத்தில் வண்ணாத்திகுளம், உனையே மயல்கொண்டு, அசோகனின்…