முன்னாள் போராளி அந்தோனிதாசன்
கான்ஸ் சர்வதேசத்திரைப்படவிழாவில் தங்கப்பனை விருது பெற்ற தீபன் திரைப்படக் கதாநாயகன் அந்தோனிதாசன் முன்னாள் புலிகள் இயக்கப்போராளி.
நண்பர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் அவர் ஷோபா சக்தி.
அவரது முதல் நாவலாகிய கொரில்லா இயக்கத்தில் ரொக்கி ராஜ் இருந்த காலத்தை கற்பனை கலந்து எழுதியது. பெருமளவு வாசகர்களிடம் வரவேற்புப் பெற்றது. தற்போது பாரிஸ் நகரில் புகலிம் பெற்று வாழ்பவர். ரெஸ்ரூரண்டுகள், சுப்பமார்கட்டில் வேலை செய்பவர். இந்த விடயத்தை அவர் சொல்லும்போது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் சுருக்கமாக பகிர்ந்தார்.
அவரது வேறான அடையாளங்கள் மாடிப்படிகள் அற்ற தட்டுகளாக உள்ள தொடர்மாடிக் கட்டிடமாகத் தெரிந்தது. அது அடிமனத்தில் உள்ளவற்றை மறைப்பதற்கான வழியாக இருக்கலாம்.
அவருடனான நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்து….
ஏன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தீர்கள்…?
பதினாறுவயது பருவத்தில் மற்ற இயக்கங்களுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் மட்டுமே தொடர்ந்து போராடக் கூடியவர்களாக தெரிந்தார்கள். புலிகளின் சமத்துவம், சோசலிசத் தமிழீழம் என்ற விடயங்கள் என்னைக் கவர்ந்தன.
பிரபாகரன் எப்படிப்பட்ட தலைவர்;…?
பிரபாகரனை ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருமுறையே பார்த்தேன். தனது 17 வயதில் தமிழர்களின்; சுதந்திரத்திற்காக போராடியவர். ஆனால் தமது நோக்கத்தை அடைவதற்காக வன்முறையை பாதையாக்கியதுடன் சகிப்புத்தன்மையற்றவராகவும் இருந்தார். நாட்கள் செல்ல சுதந்திரப்போராட்டத் தலைவர் என்பதற்குப் பதிலாக இராணுவ இயக்கத்தின் தலைவராக இராணுவப் போர்த் தந்திரங்களை ஈவிரக்கமின்றி பாவித்தார். இறுதிப் போரில் தமிழர்களின் சுதந்திரத்திற்கு போராடுவதாக சொல்லிக் கொண்டு மக்களை பணயக் கைதிகளாக்கினார். இதனால் தலைவராக மதிப்பதற்கான தகமையை இழந்துவிட்டார்.
விடுதலைப்புலிளை விட்டும் இலங்கையை விட்டும் வெளியேறினீர்கள். அந்த முடிவு துன்பகரமானதா?
விடுதலைப்புலிகளில் இருந்து விலகியபோது தவறான பாதையில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு சுதந்திரம் கிடைத்ததாக நிம்மதியாக மூச்சுவிடமுடிந்தது. நான் எனது நாட்டை கைவிட்டு ஓட நினைக்கவில்லை. ஆனால் இந்திய இராணுவத்தின் பிரவேசத்தில் உக்கிரமான சண்டையில் எனது நாட்டு மக்கள் கொலைசெய்யப்படும்போது நான் நாட்டைவிட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனது நாட்டை விட்டு வெளியேறிய நாள் எனது வாழ்வில் இருளான நாளே.
எப்படி பிரான்ஸ் வந்தடைந்தீர்கள்;?
தனிமையாக. ஹொங்கொங் ஊடாக தாய்லாந்து வந்து அகதியாக அங்கு மூன்றரையாண்டுகள் கழித்தேன். தாய்லாந்தில் அகதியாக ஏற்கவில்லை. வேலைக்கான அனுமதியும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் முயற்சி செய்து 1993 இல் பிரான்ஸ் வந்தடைந்தேன்.
ஏன் இந்தியாவிற்கு செல்லவில்லை?
அது இந்தியா விடுதலைப்புலிகளுடன் போரிட்டுக்கொண்டிருந்த காலம் என்பதால் இந்தியாவுக்கு வரத்தயங்கினேன். மேலும் இந்தியா இலங்கை அகதிகளை குற்றவாளிகளாக அக்காலத்தில் நடத்தினார்கள்.
உங்கள் முதற்படம் ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட்டது? என்ன நடந்தது?
செங்கடல் எனது முதலாவது படம். நான் திரைக்கதை வசனம் எழுதுவதற்காக அதில் சேர்ந்தேன் அத்துடன் கௌரவ நடிகராகவும் தோன்றினேன். இந்திய – இலங்கை அரசாங்கங்கள் மீதான விமர்சனம் இருப்பதாகக் கருதி தணிக்கை சபை செங்கடல் திரைப்படத்தை தடைசெய்திருந்தது. அதன் இயக்குநர் லீனா மணிமேகலையின் தொடர்ச்சியான விடாமுயற்சியாலும் சட்ட நடவடிக்கைகளாலும் தடை உத்தரவு நீக்கப்பட்டு திரையிட அனுமதி கிடைத்தது. இந்தியாவில் நடந்த 42 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தமிழ்ப்படம் செங்கடலே.
பிரான்சில் உங்களது தற்போதைய நிலை என்ன? குடிவரவாளனில் மிகவும் கடினமானது எது?
நான் ஒரு அரசியல் அகதி. இந்த நாட்டில் இனப்பாகுபாடு உள்ளது. ஆனாலும் வாழ்வில் பாதுகாப்பு உண்டு. நான் அரசியல் பற்றுள்ளவனாக இருந்தும் எனக்கு அரசியல் உரிமை கிடையாது. இதுவரையும் வாக்களித்ததும் இல்லை. இது ஏற்கக்கூடியது அல்ல.
எப்படி வாழ்வுக்கான வருமானம் தேடுகிறீர்கள்…?
நான் முழுநேர எழுத்தாளன். ஆனாலும் வாழ்வாதாரத்திற்கு பகுதி நேரமாக ரெஸ்ரூரண்ட் மற்றும் சுப்பர் மார்கட்டில் வேலை செய்கிறேன். இந்தப்படத்தில் கிடைத்த வேதனம் முடிந்ததும் மீண்டும் வேலைக்குச் செல்வேன்.
எப்படி தீபன் படத்தில் நடிக்க தெரிவானீர்கள்?
தீபன் படத்தின் உரையாடல்கள்; எழுதிய பின்பு இயக்குநர் துயஉஙரநள யுரனயைசன மற்றும் உதவி இயக்குநர்கள் இலங்கை, இந்தியா, ஐரோப்பா கனடா என நடிகர் நடிகைகளை தேடினர்கள். பிரான்சில் படித்து பாண்டிச்சேரியில் வாழும் எனது நண்பனாகிய நாடக இயக்குநர் குமரன் வளவன் மூலமாக என்னை அறிந்தார்கள். இதுவே நான் இந்தப்படத்தில் அறிமுகமான வழி. சிறுவயதில நடித்து எழுதிய நாடக அனுபவம் இப்படத்தில் கைகொடுத்தது. ஆனால் இயக்குநரின் கற்பனை உருவாக்கமே தீபன் என்ற பாத்திரம். எப்பொழுதும் இயக்குநர் காட்சிகளை எங்களுடன் கலந்தாலோசித்தமையால் எங்களால் மேலும் மேன்மைப் படுத்த முடிந்தது. இதன்மூலம் எனது படம் என்ற மனநிலைக்கு என்னால் வர முடிந்தது.
உங்கள் வாழ்க்கைக்கும் தீபன் பத்திரத்திற்கும் ஒற்றுமை உள்ளதா?
எனக்கும் தீபனுக்கு ஓற்றுமை உள்ளது. இருவரும் விடுதலைப்புலிகளில் இருந்தோம். பின்பு போலி பாஸ்போட்டில் பிரான்ஸ் வந்தோம். வீதிகள் எங்கும் அகதியாக அலைந்தோம். இந்தப்பாத்திரம் கற்பனையானது அல்ல. ஒவ்வொரு இலங்கைத்தமிழ் அகதியினதும் கதை. பிரச்சினைகள் ஒன்றாக இருந்தபோதும் தீர்வுகள் வேறானவை. நான் நினைக்கிறேன் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியதுபோல் தீபனின் கதையில் ஒரு பகுதி என்னோடு ஒத்திருந்தது. நான் எனது எழுத்துகளுக்கு உரிமையாளன். ஆனால் திரைப்படத்தை பொறுத்தவரை இயக்குநர் துயஉஙரநள யுரனயைசன தலைமை மாலுமி. நான் அவரது கப்பலில் பயணித்து கரை சேர்ந்தேன்.
எழுத்தாளராக உங்கள் உதவி படத்திற்கு கிடைத்துள்ளதா?
சில உரையாடல்களை மொழி பெயர்த்தேன் (தமிழ்ப் பாத்திரங்கள் தமிழ் பேசுகிறார்கள்) சில உரையாடல்களை படப்பிடிப்பின்போது இயக்குநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருத்தினேன.; அது மட்டுமே எனது பங்கு. இலக்கியம் சினிமா நடிப்பு என்பன ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை என்பதால் எனது இலக்கியத் திறமை தீபன் என்ற பாத்திரத்தை மெருகேற்ற உதவியது.
முன்னாள் புலிப்போராளியாக இருந்து தற்பொழுது திரைப்படத்தில் நடிக்க வந்திருக்கிறீர்கள். ஆனால் கதாநாயகனாக நடிப்பதில் இறந்த காலம் பிரச்சினையாக இருந்ததா?
எனக்கு தற்போதைய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்பட நேரம் கிடையாதபோது பழைய காலங்களைப் பற்றி கற்பனை செய்வது மூடத்தனமானது. எனக்கு அதற்கு நேரம் கிடையாது. ஆனால் எனது இயக்குநர்; படப்பிடிப்பின்போது சொன்ன விடயம் ஒன்று மனதில் நிற்கிறது. ‘ அந்தோனி உனக்கு சிரிக்கத் தெரியாது ‘
அடுத்தது என்ன?
எனது நாவலை முடித்துவிட்டேன். அது போரின் பின்னைய காலத்தை பேசுகிறது. ஜுலை மாதத்தில் சென்னையில் வெளிவரும். அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து ஐரேப்பாவிற்கு வரும் அகதிகளின் துன்பங்களை எழுதுவது எனது கனவுத் திட்டமாகும்.
உதாரணமாக பிரான்சின் காலனி நாடான அல்ஜீரியவில் இருந்து வரும் அகதியை விட ஆசியாவில் இருந்து வரும் அகதியின் நிலை துன்பமானதா ?
உண்மையில் அகதிகள் ஒரே துன்பத்தை எதிர்கொண்டாலும் முஸ்லிம் அகதிகள் கண்காணிக்கப்பட்டும் வேற்றுமைப்படுத்தப்படுகிறார்கள்.
பிரான்சில் குடும்பம் உள்ளதா?
நான் இன்னமும் திருமணம் செய்யவில்லை. அதற்கான திட்டமும் இல்லை. கார்ல் மாக்ஸ் சொன்னபடி குடும்பம் ஒரு சிறிய நாடு. அங்கும் நான் அதிகாரத்தை எதிர்க்கிறேன்.
Courtesy Hindustan times
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் நடேசன் – அவுஸ்திரேலியா.)
மறுமொழியொன்றை இடுங்கள்