Monthly Archives: ஏப்ரல் 2015

கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு

அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கிய சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கும் இச்சந்திப்பு எதிர்வரும் மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா மூத்த பிரஜைகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு

மெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் – பிள்ளைகள் – பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விசித்திரமான கழுதைப்புலிகள்

நடேசன் ஆபிரிக்க காடுகளில் மட்டும் பார்க்கக் கூடிய மிருகம் கழுதைப்புலி. ஆசியாவின் சில பகுதிகளில் முன்பு இருந்தாலும் தற்பொழுது அரிதாகிவிட்டது. உல்லாசப்பயணிகளில் ஏராளமானவர்கள் குருகர் காட்டுக்கு சென்றாலும் சில முக்கியமான மிருகங்களை பார்க்கத் தவறிவிடுவார்கள். பருவகாலம் தப்பினால் அல்லது வழிகாட்டிகள் காண்பிக்கத்தவறினால் முக்கியமாக பார்க்கவேண்டியனவற்றை பார்க்கத்தவறிவிடுவார்கள். இப்படி பல காரணிகள் உள்ளது. மிருகங்களை அவற்றின் உறைவிடங்களில் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

உனையே மயல் கொண்டு

Priya Ramanathan பொதுவாக நான் நாவல்கள் வாசிப்பதில்லை .. ஆனால் , நேற்று எதேச்சையாய் இந்த நாவல் என் கண்ணில் சிக்கியது . இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து australiaவிற்கு புகலிடம் தேடிச் சென்ற ஒரு ஆணின் பார்வையில் , அவனது உடலின்பம் குறித்த சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் விபரிக்கும் “உனையே மயல் கொண்டு ” ! நாவல், … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்

தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் – படைப்பிலக்கியவாதி – பத்திரிகையாளர் – சினிமா வசனகர்த்தா – பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்

முருகபூபதி இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான் இலங்கைக்கு வந்ததும் முதலில் தொலைபேசியில் பேசியவர்களில் டொமினிக்ஜீவாவும் ஒருவர். அவர் நீண்ட காலம் நடத்திய மல்லிகை இதழ் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் 2011 இற்குப்பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன். மல்லிகை நின்றுவிட்டதை அறிந்து அவர்பற்றிய நீண்ட விரிவான கட்டுரையும் எழுதினேன். … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

உலகக் கிரிகட்போட்டி

தொலைக்காட்சியில் கிடைத்த இன்பம் ஸ்ரேடியத்தில் இல்லை. நடேசன் கிரிக்கெட்டின் மெக்கா என சொல்லப்படுவது மெல்பன் கிரிக்கெட் மைதானம். பெயருக்குத் தகுந்தபடி ஸ்ரேடியம். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேரை கொள்ளக்கூடியது. அதனை கூர்ந்து பார்த்தால் பொறியியல் மற்றும் கட்டிடத்துறையின் உன்னதமான வடிவமைப்பு தெரியவரும். மெல்பன் கிரிக்கட் கிளப் அங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஒருவர் அங்கத்தவராக தற்பொழுது கால்நூற்றண்டுகள் காத்திருக்க … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக