மெல்பனுக்கு வருகைதந்துள்ள இலங்கையின் மூத்த கலை – இலக்கிய திறனாய்வாளர்கள் திரு. கே.எஸ். சிவகுமாரன் மற்றும் திரு. வன்னியகுலம் ஆகியோருடனான கலை – இலக்கிய சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28 – 12- 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மெல்பனில் Wheelers Hill – Jells Park ( Ferntree gully Exit) திறந்த வெளி பூங்காவில் நடைபெறும். இச்சந்திப்பில் இலங்கை தற்கால இலக்கியம் – புகலிட இலக்கியம் மற்றும் திரைப்படம் முதலான தலைப்புகளில் கலந்துரையாடல் இடம்பெறும். இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கலை – இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.
திரு. கே.எஸ். சிவகுமாரன்
இலங்கையில் கடந்த பல தசாப்த காலமாக படைப்பிலக்கியத்துறையிலும் திறனாய்வு – பத்தி எழுத்துகளிலும் திரைப்படம் – இசை – ஓவியம் – நாடகம் முதலான துறைகளிலும் நுற்றுக்கணக்கான கட்டுரைகளையும் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் இலங்கை வானொலியிலும் முன்னணி தினசரிகளான வீரகேசரி The Island, Daily News, Observer ஆகியனவற்றிலும் பொறுப்பான ஆசிரிய பீட பதவிகளில் பணியாற்றியவர். சிறந்த மொழி பெயர்ப்பாளருமான சிவகுமாரன் – இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தணிக்கை அதிகாரியாகவும் பணியாற்றியவர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற அனுபவங்களையும் பதிவு செய்திருப்பவர்.
திரு. வன்னியகுலம்
இலங்கை நவீன தமிழ் இலக்கியத்தில் புனைகதைகளில் பிரதேச மொழிவழக்குகள் தொடர்பாக ஆராய்ந்து கட்டுரைகளும் இலக்கிய விமர்சன நூல்களும் எழுதியிருப்பவர்.
இலங்கை தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியில் தமிழ்நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும் தமிழ்ச்சேவை பணிப்பாளராகவும் வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
மேலதிக விபரங்களுக்கு: முருகபூபதி
letchumananm@gmail.com
தொலைபேசி: 0416 625 766
மறுமொழியொன்றை இடுங்கள்