நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு

நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வு13-12-2014
சனிக்கிழமை மாலை 4.00 மணி

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் – நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை – தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெறும்.

மெல்பனில் எதிர்வரும் 13-12-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு Mulgrave
Neighbourhood House ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170) சமூக மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள். கலந்துகொள்ளும் இலக்கிய ஆர்வலர்களும் தமது நாவல் இலக்கிய வாசிப்பு அனுபவங்கள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: நடேசன் (தலைவர்) 0411 606 767 | ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்) 0415 405 361

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: