Month: திசெம்பர் 2014
-
2014 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2014 annual report for this blog. Here’s an excerpt: The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 26,000 times in 2014. If it were a concert at Sydney Opera House, it would take about 10 sold-out performances for that many […]
-
காளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடேசன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சமூகத்தின் – நாட்டின் எதிர்காலத்தை திர்மானிப்பது மட்டுமல்ல தனிமனிதர்களின் எதிர்காலத்தையும் வரையறுப்பது. இலங்கைவாழ் தமிழர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு இது தருணமல்ல என்றாலும்; கடந்தகாலத்தை இலகுவில் கடந்து போக முடியாது. மறந்துவிடவும் முடியாது. 77இல் கொழும்புத் தமிழர்கள் மலையகத்தமிழர்கள் நூறு வீதமாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள் அதேவேளையில் வடகிழக்கில் தமிழர்கள் ஈழக்கோரிக்கையை […]
-
மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு
மெல்பனுக்கு வருகைதந்துள்ள இலங்கையின் மூத்த கலை – இலக்கிய திறனாய்வாளர்கள் திரு. கே.எஸ். சிவகுமாரன் மற்றும் திரு. வன்னியகுலம் ஆகியோருடனான கலை – இலக்கிய சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28 – 12- 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மெல்பனில் Wheelers Hill – Jells Park ( Ferntree gully Exit) திறந்த வெளி பூங்காவில் நடைபெறும். இச்சந்திப்பில் இலங்கை தற்கால இலக்கியம் – புகலிட இலக்கியம் மற்றும் திரைப்படம் முதலான […]
-
புதிய உலகின் வாழ்க்கைப் புலத்தில் அசோகனின் வைத்தியசாலை
இந்தியா ருடேயில் அசோகனின் வைத்தியசாலைஅறிமுகம்(Slightly edited version) – முத்து மலைச்செல்வன் கலிங்கத்தை வெற்றி கொண்ட அசோகச்சக்கரவர்த்தியே உலகில் முதலாவது மிருக வைத்தியத்தைத் தொடக்கி வைத்தவர் என்கிறது வரலாறு. பெரும்போரிலே ஈடுபட்ட அசோகச்சக்கரவர்த்திக்கு அந்த நாட்களில் பெரிய சவாலாக இருந்தது, போரில் ஈடுபடுத்திய யானை, குதிரைகளுக்கு ஏற்படும் காயங்கள். இந்தக் காயங்களைக் குணப்படுத்தினால்தான் யானைப்படைகளையும் குதிரைப்படைகளையும் பலமாக வைத்திருக்க முடியும். ஆகவே மிருக வைத்தியத்தை ஆரம்பிப்பதைப்பற்றி அசோகச்சக்கரவர்த்தி சிந்தித்தார். இதுவே பின்னாளில் மிருகவைத்தியத்துறையாக வளர்ந்து உலகம் முழுவதும் […]
-
வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்…?
நடேசன் எக்சோடஸ் 1984 மனிதர்களை அடைத்த நாய்க்கூடுகள் தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன. சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதi இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை […]
-
Catch up with 60 years
Recently a thief sneaked in at midnight to my wife’s car and carried away her purse and few articles I feel the same way am reaching 60 years without anticipation or preparation but not disappointed . If I am looking back, got everything in my life same way such as my university entrance ,my girl […]
-
எங்களைப்போல் எமது உறவினர்
நடேசன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் ஒரு நாள் மதிய உணவின்பின் எமக்கு செய்முறைப் பயிற்சியிருந்தது. பயிற்சியளிக்கும் பேராசிரியர் வரத்தாமதம் ஆகியதால் எம்மிடையே பேசிக் கொண்டிருந்தோம் சில மாணவிகள் மட்டும் தங்களிடையே இரகசியமான குரலில் எதையோ பரிமாறினார்கள் ‘என்ன விடயம்?’ என கேட்டபோது சொல்ல மறுத்ததுடன் மீண்டும சிரித்து ஆவலைத் தூண்டினார்கள். அவர்களை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி விடயத்தை அறிந்தபோது எங்களுக்கும் வெட்கம் வந்தது எனது சகமாணவிகள் அன்று சொல்லிய விடயம் மனத்திரையில் […]
-
எழுத்துச்சித்தர் எஸ்.பொ.
அவுஸ்திரேலியா மரபு இதழில் எழுத்துச்சித்தர் எஸ்.பொ.வின் நனவிடை தோய்தல் மரபு ஆசிரியர் விமல் அரவிந்தன். (அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற நினைவரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை) எஸ்.பொ. என அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து இறுதியில் சிட்னியிலேயே மறைந்துவிட்டவர். ஆனால் – அவர் என்றைக்கும் மறையாத சொத்தை எமக்கு விட்டுச்சென்றுவிட்டார். இங்கு அவருக்கும் எனக்கும் இடையே தோன்றிய நட்பையும் அதற்கும் அப்பால் நீடித்த உறவையும் சாட்சியமாகக்கூறும் ஒரு படைப்பு இலக்கியத்தையே […]
-
நாவல் இலக்கியத்தின் அடிப்படை.
அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த நாவல் இலக்கியம் அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே நாவலுக்கு என்ன நடக்கிறது. நடேசன் பலரும் நாவலை வாசிக்க முடிவதில்லை எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. புதிய மொழி புதிரான கதை எனக் காரணங்கள் இருக்கலாம். ஒரு நாவலை ஒதுக்குவதற்கோ பாராட்டுவதற்கோ நமக்கு நாவலின் கூறுகளைத் தெரிந்திருக்கவேண்டும். மேம்போக்காக நாவல் நன்றாக இல்லை எனச் சொல்லும்போது உங்களுக்கு ஈகோவைத் தடவியதாகவும், நாவல் எழுதியவருக்கு கோபத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியத்தில் […]
-
எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு
அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்த மூத்த படைப்பாளிகள் எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு அவுஸ்திரேலியா – சிட்னியில் அண்மையில் அடுத்தடுத்து மறைந்த ஈழத்தின் மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) காவலூர் ராஜதுரை ஆகியோரின் படைப்பிலக்கிய மதிப்பீட்டு நினைவரங்கு எதிர்வரும் 20 ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மெல்பனில் Preston – Darebin Intercultural Centre இல் நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலரும் சட்டத்தரணியுமான செல்வத்துரை ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை […]