வரலாற்றை எழுதும் முருகபூபதி.

முருகபூபதியின ‘சொல்ல மறந்த கதை’ நூல் வெளியீட்டடில் நடேசனின் பேச்சு

Murugapoopathy

பழய ஏற்பாடு என்ற வேதாகமம் யுத சமூகத்தின் வரலாறு. அந்த இனம் எவ்வாறு நெருக்கடியான காலகட்டதில் காப்பாற்றப்பட்டார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. மற்ற சமூகங்கள் போல அல்லாது வாழ்வதற்கு இடமற்று பலகாலம் அலைந்து திரிந்தவர்கள.அசிரியர்கள், பபிலோனியர் என பலமான அரசுகளால் அழிக்கப்பட்டவர்கள். மிக குறுகிய காலமே அவர்கள் வரலாற்றில் அரசு உருவாக்கி ஆட்சி செய்தார்கள்.

இவர்களுக்கு மாறாக நான் எகிப்திற்கு சென்றபோது அங்கு 5000 வருடத் தொடர்ச்சியான வரலாறு கற்களில் பொறிக்கப்பட்டிருந்தது. உலகத்தில் 3000 வருடங்கள் தொடர்ச்சியாக அரசாண்ட ஒரே இனம் அவர்கள்தான். அவர்களோடு ஓப்பிடும்போது 200 வருடங்கள் அமரிக்க வரலாறு, 1000 வருடங்கள் மட்டுமே கொண்ட பிரித்தானிய வரலாறு எவ்வளவ குறைவானது என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

யுதர், எகிப்தியர் நமக்கு இருவகையான வரலாற்று உதாரணங்கள். ஒன்று வாழ்வதற்கு நிலமற்று வெவ்வேறு காலத்தில் அடிமையாகி சிதறிய இனம் மற்றது உலகத்திலே மிகவும் வளமான நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள்.
இந்த இரு இனங்களின் வரலாற்றை நம்மால் இன்றும் பார்கக்கூடியதாக இருப்பதற்கு காரணம் அவர்கள் வரலாறுகள் தொடர்சியாக எழுதப்பட்டிருக்கிறது. வரலாறு எழுதப்படாத இனம் அழிந்து விடுகிறது.

ஈழத்து வரலாற்றை படித்து அறிய விரும்பி எனது சிங்கள நண்பர் புத்தகம் ஒன்றைக் கேட்டார் யாழ்ப்பாண வைபமாலை என்னால் தேடி அப்பொழுது எடுக்கப்பட்டது. ஈழத்தவர்கள் என்ற இனத்தின் வரலாறு அறிய நானும் அதை படித்தேன். யாழ்ப்பாண வைபவமலை 40 பக்கங்கள் கொண்டது. உள்ளே சென்றால் ஆரம்ப பகுதி மகாவம்சத்தை பிரதி பண்ணியுள்ளது. அதைவிட கிட்டத்தட்ட 800 வருட ஓட்டை உள்ளது- அதாவது விஜயனது வருகை கிமு 400 வருடத்தில் தொடங்கி அவன் இறந்தபின்பு , குளக்கோட்டனில் கிபி 436 தொடங்குகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தின் உருவாக்கம் மட்டும் ஒழுங்காக உள்ளது.

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த கற்கால மனிதர்களைப் பற்றி எனது நண்பன் இரகுபதி தனது டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ந்தான். அந்த ஆராய்வை செய்வதற்கு அவன்பட்ட துன்பத்தை துடைக்க ராமருக்கு அணில்மாதிரி நானும் உதவினேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இப்படி வழுக்கலான வரலாறு உள்ள சமூகத்தில் இருந்து வந்து எமக்கு அவுஸ்திரேலிய தமிழ்சமூகத்தில் வாழும் நண்பர் முருகபுபதி மிகவும் முக்கியமானவர். அந்தக்காலத்தில் வரலாற்றைப் பாடும் குலப்பாடகர்கள் என்பார்கள். அது போன்றவர்.

யுத இனத்தின் வரலாற்றில் பெரும்பகுதியை எழுதியது மோசஸ். அதிலிருந்து வரலாறு எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
எனக்கு கால் நூற்றாண்டுகளாக முருகபூபதியைத் தெரியும் மெல்பேனில் குளிர் ஐந்து சென்டிகிரேட்டை தொட்டாலும் வெப்பம் 45 சென்றிகிரேட்டை அடைந்தாலும் இல்லை அவரது இரத்தத்தில் குழுக்கோசு 5.5mg ல் இருக்கலாம் சிலவேளையில் 15mg க்கு உயரும்போதும் எழுதுவார்
அவுஸ்திரேலியாவில தமிழ்சமூகத்தின் இருப்பைத் தெருவிக்கும் ஒரே மனிதர் அவர்தான் . இருப்பை மட்டுமல்ல பலர் இல்லாமல் போனதையும் அவரே தெரிவிக்கிறார். சமூகத்தில் இது மிக முக்கியமான கடமை

எனக்கு ஒரு நண்பர்ஆராச்சியில் டாக்டர் பட்டம் பெற்று கன்பராவில் இருக்கிறார். அவர் என்னை அழைத்து அடிக்கடி முருகபூபதியின் தொலைபேசியை கேட்பார். ஏன் தெரியுமா அவரது இறந்த உறவினர்கள் கல்வெட்டு பாவை எழுதுவதற்கு.

அவரால் ஏன் எழுதமுடியாது? டாகடர் பட்டத்தை பெறுவதைவிட கடினமானதா?

ஏன் தொலைபேசி இலக்கத்தை மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்கவேண்டும்?

விடைகளை இலக்கியத்தில் ஊகத்திற்கு விடுவதுபோல் உங்களுக்கு விடுகிறேன்.

முருகபூபதி எனக்கு தந்த கட்டுரைகளை குறித்து பேசவேணடியது எனது கடமை அதில் ஒன்று நள்ளிரவில வந்த தொலைபேசியழைப்பு. விடுதலைப்புலிகள் 78ல் தாங்கள் செய்த கொலை, கொள்ளைகளுக்கு உரிமைகோரி வீரகேசரிக்கு எடுத்த தொலைபேசி பற்றியது அதை வாசித்து தெரிந்து கொள்ளமுடியும். கட்டுரைக்கு வாசகர்களுக்கும் இடையில் நான் நந்தியாக விரும்பவில்லை ஆனால் நான் சென்னையில் இருந்த காலத்தில் மட்டக்கிளப்பு சிறையுடைப்பிற்கு இரண்டு இயக்கங்கள் , மன்னன் சொலமனிடம் பிள்ளைக்கு உரிமை கோரிய தாய்மாராக சண்டை இட்டார்கள் மன்னன் சொலமனால் யார் தாய் என கண்டுபிடிக்கப்பட்டது. கால்நூற்றாண்டுகள் ஆகியும் எனக்கு விடை தெரியவில்லை.
முருகபூபதியின் அயல் வீட்டு சிங்களவர்கள் தாங்கள் வாங்கிய வாகனத்தை மடுமாதாவிடம் காட்டி ஆசி பெற சென்றபோது இயக்கத்தினரிடம் உயிரிழந்த கதை அடுத்தது. மடுமாதாவே அகதியாகி ஊரெல்லாம் அலைந்தது பிற்காலத்தில் நடந்தது. ஆனால் மேரிக்கு இது புதிது அல்ல அவரும் யோசப்பும் பிள்ளையை தூக்கிக் கொண்டு எகிப்தில் ஏரோது(Herod) மன்னன் இறக்கும்வரை அகதியாக திரிந்தவர் (புதிய ஏற்பாடு- மத்தியு)

லிபரேசன் ஒத்திகை என்ற வடமராச்சி படை நடத்தலுக்கு முன்பு மந்திகை வைத்தியசாலையை குண்டுதாக்கி நோயாளிகள் காயமடைந்த கட்டுரை அன்று மந்திகை இன்று காசா (GAZA) வைத்தியசாலை என இந்த அனர்த்தம் தொடர்கிறது.

நிதானம் அற்ற தலைமை ரோகிண விஜயவீரா பற்றியது. ஆனாலும் இந்த கட்டுரை இலங்கையில் சம்மியமூர்த்தி தொண்டமான் தவிர்ந்த சகல இனத்தலைவர்களுக்கும் பொருந்தும்.
வழிகாட்டி மரங்கள் நகர்வதில்லை- இயக்கத்தில் சேர்ந்து சிறைசென்ற இளைஞர் ஒருவரது தாயை பற்றியது. இது எனக்கு மிகவும் பிடித்தது. எமது போர்கால ஆக்கங்கள் பல இனவிரோததை மையாக தோய்த்து எழுதுபவை. தாய்மார் மனைவி மற்றும் பிள்ளைகள் என்பவரது துன்பங்களை பேசுவன சிலவே. அதில் இந்த கட்டுரை தாய்மையின் போராட்ட அம்சத்தை பேசுவதால் முக்கியமாகிறது.

சிட்னியில் வசித்த டாக்டர் கந்தையா- அவுஸ்திரேலிய தமிழர்கள் கோயில்கள் , பாடசாலைகள் என பல புத்தகங்களை வெளியிட்டார். சொல்லப்போனால் அவரது புத்கங்களே இன்னமும் அவுஸ்திரேலிய தமிழர் பற்றிய ஆவணங்களாக அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். ஆனால் அவர் சிலகாலத்தில முன்பு இறந்தபோது அவரை பற்றிய குறிப்பு எழுத எவரும் இருக்கவில்லை. அவரை அதிகம் அறிந்திராத நான் கடைசியில் அவருக்கு அஞ்சலி எழுதினேன்.
சமூகம் சமூகமாக இருப்பதற்கு இப்படியான வரலாற்றை எழுதுபவர்கள் அவசியம். நான் சொல்வேன் எங்களைப்போல் வைத்தியர்கள் , கணக்காளர் , பொறியலாளர் என்பவர்கள் அதிகபட்சம் ஓரிரு வார்த்தைகளாக மட்டும் கல்லறையில் மிஞ்சுவார்கள். ஆனால் சரித்திரம் எழுதிவர்கள் இறந்த பின்பும் வாழ்பவர்கள்.

“வரலாற்றை எழுதும் முருகபூபதி.” மீது ஒரு மறுமொழி

  1. TRUE…MOST TAMILS SHD WRITE A BLOG AT BLOGGER.COM FOR FREE! THIS IS OUR HISTORY!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: