உல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள்

நடேசன்

ஹாஜி முகம்மது என்ற இஸ்லாமிய வாகன சாரதி ‘பிஜித்தீவில் வாழும் இந்திய மக்களிடம் இந்து – முஸ்லீம் தொடர்பாக எதுவித மதப்பாகுபாடும் இல்லை’ என்றார்

அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எங்களையும் அவர் இந்தியர்களாக கணித்ததால் அந்த வார்த்தையைக் கூறினார்.

“அப்படியென்றால் புலம்பெயர்ந்த இந்தியர்களான உங்களிடம் இருந்து மத சகிப்புத்தன்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” – என்றேன்.

எங்கு சென்றாலும் வாகன சாரதிகளைத் துருவுவது எனது வாடிக்கையான பொழுது போக்கு.

“நான்கூட இந்துப் பெண்ணைத்தான் மணந்தேன். எனது மனைவி இந்துப்பெண்” எனச்சொன்ன அவர் ஒரு வண்ணப்புகைப்படத்தைக் காண்பித்தார்.

அதில் அழகான மூன்று குழந்தைகளும் தலையை போர்த்தியபடி அவரது அழகான மனைவியும் அவருடன் இருந்தனர்.

“நல்லது” என்றதும் எனது மனைவி அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு “நீங்கள் இந்துப் பெண்ணை திருமணம் செய்தால் அந்தப் பெண் ஏன் மதம்மாறி முஸ்லீமாக வேண்டும்? “ என்று மிகவும் அப்பாவித்தனமாக கேட்டார். 

ஹாஜி முகம்மது இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

எனது மனைவி குரானை (சுரா2 அல் –பராக் 221) கேள்விப்படுத்துவது எனக்கு அந்தரமான உணர்வைக் கொடுத்தது.

சில கண நேரம் ஹாஜி முகம்மது மவுனமாக இருந்தார்.

சிறிது நேரத்தின் பின் “அப்பா அம்மா விரும்பியதால் அது நடந்தது. எனக்கு அதிகம் மதநம்பிக்கையில்லை’’ எனச்சொல்லி சிரித்தார்.

நான்கு நாள் விடுமுறையில் நண்பன் குடும்பத்தோடு பிஜித்தீவுக்குச் சென்றோம். எங்களை விமான நிலையத்தில் ஏற்றிச்செல்ல வந்த ஹாஜி முகம்மது நாற்பது வயதும் ஆறு அடி உயரமுமான இந்தியர். அவரிடம் மேலும் பேச்சுக் கொடுத்தபோது. “ தற்போதையஜனாதிபதியான கொமடோ பாணிமராமோ மிகவும் நல்லவர். இரண்டு சமூகத்தையும்இணைக்கப் பாடுபடுகிறர்” எனக்கூறினார். அவர் அப்படிச்சொன்னாலும், அவுஸ்திரேலியாஅரசாங்கம் கொமடோ பாணிமராமோவை அங்கு தேர்தல் நடத்தும்படியும் மற்றும் பத்திரிகை சுதந்திரம் அங்கு இல்லை எனவும் பல விடயங்களில் அந்தத்தீவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

1988 இல் நான் சிட்னி நீயு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோதுஇலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யை சேர்ந்த சிங்கள இளைஞர்களை அக்கால இலங்கை அரசாங்கம் கொலை செய்ததை எதிர்த்து இலங்கைக்கு எதிராக மனிதஉரிமையின் தேவைக்காக ஒரு அமைப்பை உருவாக்கிப் போராடினோம். அக்காலத்தில்பிஜியில் இந்திய சமூகத்தை அதிகமாக கொண்ட தொழிற்கட்சி தலைவர் மகேந்திர சவுத்திரிஅரசாங்கம் அமைத்தவுடன் அப்பொழுது இராணுவ அதிகாரியான கேணல் ரம்புக்கா (Major-General Sitiveni Ligamamada Rabuka) நடத்திய இராணுவப் புரட்சியால் அந்த அரசாங்கம் கலைக்கப்பட்டது. இதனால் ஏராளமான பிஜி இந்தியர்கள் அவுஸ்திரேலியா வந்தனர். அவர்களின் நிலையையும் கவனத்தில் எடுத்து பிஜி மற்றும் இலங்கை அரசுகளை கண்டித்து எதிர்த்தோம். அதனால் பல பிஜி இந்தியர்கள் எங்களுக்கு நண்பர்களானார்கள்.

பிற்காலத்தில் பிஜியில் பல ஆட்சிகள் வந்தாலும் ஊழல் மலிந்து இருந்தது. பின்பு 2000ஆண்டில் கொமடோர் பானிமாரமோ 2000 ஆண்டில் (commodore Frank Bainimarama) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார்

பின்னர் மெல்பனில் உதயம் பத்திரிகையை வெளியிட்டபோது பிஜி நாட்டு செய்திகள்பலவற்றை பிரசுரித்ததுடன் பிஜி அரசியலை கூர்ந்து கவனித்தேன். அப்பொழுது சில பிஜிநாட்டினர் என்னை கொமடோர் பானிமாரமோவை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்வதாகச்சொல்லி என்னை பிஜிக்கு அழைத்தார்கள். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வரவில்லை. கடந்த 2013 வருட இறுதியில் பிஜிக்கு நான்கு நட்கள் போய் வந்தேன்.

பிஜித்தீவுகள் எரிமலையின் குமுறலால் தென் பசிபிக் சமுத்திரத்தில் ஏற்பட்டவை. அங்குகிட்டத்தட்ட 3500 வருடங்களுக்கு முன்பாக மனிதர்கள் குடியேற்றம் உருவாகியதுஎன்கிறார்கள்.

பிஜியில் வாழும் கருப்பினத்தவர்கள் கருமையான மெலனீசியர்கள். ஆரம்பத்தில்ஆபிரிக்காவில் இருந்து அவர்கள் வந்ததாக சொன்னாலும் பிற்காலத்தில் தென்பசுபிக்தீவுகளில் வாழும் பொலினீசிய மக்களது கலப்பும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிஜித்தீவை கைப்பற்றிய பிரித்தானியர்கள் இந்தியர்களைகரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வட இந்திய மாநிலங்களில் இருந்து (பீகார்,  உத்தரபிரதேசம்) வரவழைத்தார்கள். பஞ்சாப் – குஜராத்திலும் இருந்து இந்தியர்கள் பிற்காலத்தில் சென்றார்கள். தமிழர்களும் சென்று இருக்கிறார்கள் என்பதை பெயர்கள், தமிழ்த் தெருக்கூத்துகள் (இந்தி மொழில் நடக்கின்றன) என்பது மூலமும் உணரலாம்.இப்பொழுது இந்திய பிஜீ மக்கள் பேசுவது ஹிந்தி மொழியே.

பிஜித்தீவுகள் அவுஸ்திரேலியாவுக்கு அருகாமையில் இருக்கிறது. அழகிய தீவுகளும், வெண்மணல் கடற்கரைகளும், கண்ணுக்கெட்டியவரை நீல நிறக்கடலும் இருப்பதால்உல்லாசப்பிரயாணத்திற்கு பிரசித்தி பெற்றது.

1980 ,இல் எடுக்கபட்ட புளு லகூன்(Blue Lagoon) என்ற ஹொலிவூட் திரைப்படத்தை அக்காலத்திலே பார்த்தேன். அந்தப்படத்தில் நடிகை புறுக் க்ஷீல்ட்ஸ் (Brooke Shields) பதினாலு வயது சிறுமியாக திறந்த மார்புடன் கடலில் நீந்தித் திரிந்த காட்சி அக்காலத்தில் பலரைப் பையித்தமாக்கியது. அந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் சிறிய பிஜியன் தீவு. அதேபோல் காஸ்ட்எவே (Cast away)யில் டொம் ஹாங்ஸ் ( Tom Hanks) ஆகாய விமான விபத்தில் சிக்கி தீவொன்றில் கரை ஒதுங்கியதாகவும் அந்தத் தீவில் பலவருடம் தனி ஒருவனாகவாழ்வதாகவும் வெளியான திரைப்படம் 2000 இல் எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் பிரபலமானதால் இப்பொழுது காஸ்எவே தீவு என படத்தின் பெயரால் அந்தத் தீவு அழைக்கப்படுகிறது.

இப்படியான வேறு ஒரு தீவொன்றிற்கு நாங்கள் சென்றோம் அங்கு உல்லாசப்பிரயாணிகளை வரவேற்று பிஜியின் கலாச்சார நடனம் ஆடினார்கள். இந்த நடனம் போருக்கு அழைப்பதுபோன்ற நடனம். நான் பயணம் செய்த நாடுகளில் உல்லாசப்பிரயாணிகளை மிக நாகரீகமாக நடத்துபவர்களில் முதலிடம் பிஜி மக்களுக்கே.

ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் வாழும் இந்த தேசம் உல்லாசப்பிரயாணிகளை கவருவதற்கும் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கட்டுமான வசதிகள் கொண்ட ஹோட்டல்கள், வீதிகள், மற்றும் விமானத்தளங்கள்முதலான வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், உல்லாசப்பிரயாணத்தால் ஏற்படும் பாதகங்களான விபச்சாரம் போதை வஸ்து போன்றவற்றைத் தவிர்த்து தனது கலாச்சார விழுமியத்தை தொடரந்து பிஜித்தீவு பாதுகாக்கிறது. திருட்டு வழிப்பறி என்பன அங்கு இல்லை என்றும் கூறமுடியும்.

பிஜியில் நடந்த இராணுவ புரட்சிகளால் பல மத்திய வர்க்க இந்தியர்கள் அவுஸ்திரேலியா, நியூ சிலாந்து, கனடா என போய் விட்டார்கள். எஞ்சியிருக்கும் இந்தியர்கள் விவசாயம்,வர்த்தகம் என்ற இரு துறைகளை தங்கள் பால் வைத்திருப்பதால் தற்போதைய பிஜிஅரசாங்கம் அவர்களை மிகவும் அவதானமாக கையாளுகிறது.

மற்றைய மலனீசிய நாடுகளான வனவாத்து, பப்புவா நியுகினி போல் பிஜி மக்களிடமும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் பல காலமாக இருந்தது.

நான் சந்தித்த பிஜி மக்கள் சகலரும் தற்போதைய ஆட்சியாளரான கொமடோர்பானிமாரமோவை எளிமையான துாய்மையான மனிதரெனப் புகழ்ந்தார்கள்.

ஒரு நாட்டில் ஜனநாயக தேர்தல்,  பத்திரிகை சுதந்திரம் என்பன இருப்பது வரவேற்கக் கூடியது.ஆனால் இப்படியான அரூபமான கருத்துக்களைவிட அமைதியும் சந்தோசமுமான வாழ்க்கையும் முக்கியமானவை . அத்துடன் ஆவுஸ்திரேலிய பத்திரிகை செய்திகளுக்கு மாறாக உண்மை இருக்கிறது என்று நினைத்தபடி அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பினேன்.

நன்றி: மலைகள்.கொம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: