Monthly Archives: மே 2014

மெல்பனில் கலை இலக்கிய விழா 2014

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை கலை – இலக்கிய விழாவாக நடத்தப்படவிருப்பதாக சங்கத்தின் செயற்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி (26-07-2014) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மெல்பனில் St.Benedicts College மண்டபத்தில் (Mountain Highway , BORONIA , Victoria) தொடங்கும் கலை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வலி சுமக்கும் நூலக நினைவுகள்

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்

கருணாகரனின் ஒரு பயணியின் போர்காலக் குறிப்புகள்- ஈழத்தமிழர் எதிர்காலத்தை இறந்தகாலமாக்காமல் இருப்பதற்கு தொடர்ந்து மறுவாசிப்பு செயயவேண்டியது நூல் நடேசன் கவிஞர்கள் காலம் காலமாக ஒரு மொழியின் சொந்தக்காரர்கள். அதாவது நிலத்தினை பயிர்செய்யும் விவசாயிபோல். ஒவ்வொரு சமூகத்திலும் மொழியை அவர்கள் உடமையாக வைத்திருப்பதால் அந்த மொழியை பாவிக்கும் சமூகம் அவர்களை நம்பி காலம் காலமாக இருக்கிறது. மற்றவர்கள் … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்

படித்தோம் சொல்கிறோம் முருகபூபதி இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவடைந்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல் சமீபகாலத்தில் நான் படித்த சில நாவல்கள் யாவும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட அல்லது அதற்குக்கிட்டவாக வரும் பக்கங்களைக்கொண்டிருந்தன. இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர் சூழலில் அத்தனை பக்கங்களையும் படித்து முடிக்க தேவைப்படுவது நேரமும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த கலைஞன் ஸ்ரீதர் பிச்சையப்பா

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் – உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை – என்று எழுதினார் தொ.மு.சி.ரகுநாதன். ஸ்ரீதர் பிச்சையப்பாவின் மறைவுச்செய்தி கிடைத்தபோது ரகுநாதனின் அந்தக்கூற்றைத்தான் நினைத்துப்பார்த்தேன். இந்த நினைப்பு ஸ்ரீதரை புதுமைப்பித்தனுடன் ஒப்பிடும் முயற்சியல்ல. ஸ்ரீதர் மட்டுமல்ல பல கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்க்கையும் சோகநாடகமாகத்தான் அரங்கேறியுள்ளன. பட்டியலிட்டால் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உல்லாசம் பிரயாணிகளைக் கவரும் பிஜித் தீவுகள்

நடேசன் ஹாஜி முகம்மது என்ற இஸ்லாமிய வாகன சாரதி ‘பிஜித்தீவில் வாழும் இந்திய மக்களிடம்இந்து – முஸ்லீம் தொடர்பாக எதுவித மதப்பாகுபாடும் இல்லை’ என்றார் அவுஸ்திரேலியாவில் இருந்து சென்ற எங்களையும் அவர் இந்தியர்களாக கணித்ததால் அந்தவார்த்தையைக் கூறினார். “அப்படியென்றால் புலம்பெயர்ந்த இந்தியர்களான உங்களிடம் இருந்து மதசகிப்புத்தன்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” – என்றேன். எங்கு சென்றாலும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வெள்ளிவிழா (1989 – 2014)

06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174) இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்றநாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு தேவை என்ற கி.வா.ஜகந்நாதன்

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி தமிழில் புதுக்கவிதை இலக்கியம் அறிமுகமான காலப்பகுதியில் அதனை வன்மையாக எதிர்த்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி ரகுநாதன். மற்றவர் கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன். புதுக்கவிதை விடயத்தில் இவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. இலக்கியக்கோட்பாடுகள் குறித்தும் நிரம்பவும் வேறுபட்டவர்கள். ரகுநாதன் ஒரு கம்யூனிஸவாதி. கி.வா.ஜகந்நாதன் ஆத்மீகவாதி. ஜகந்நாதன் எப்பொழுதும் நெற்றியில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கல்விக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய முகம்மது சமீம்.

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி மெல்பனில் நடந்த தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்று உரையாற்றிவிட்டு வீடு திரும்பியிருந்தவேளையில் கொழும்பிலிருந்து நண்பரும் யாத்ரா இதழின் ஆசிரியருமான அஷ்ரப் சிகாப்தீனிடமிருந்து அவசர தகவல் வந்திருந்தது. முகம்மது சமீம் காலமாகிவிட்டார் அவரைப்பற்றிய கட்டுரையொன்றை தாமதமின்றி எழுதி அனுப்புமாறு அவர் கேட்டிருந்தார். எனக்கு அந்தச்செய்தி மிகுந்த மனச்சோர்வையளித்தது. அந்தச்சோர்வுக்கு முக்கிய காரணம் — … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக