மிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல்

எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன்
சுப்ரபாரதிமணியன்

அசோகனின் வைத்தியசாலை முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர். ” வண்ணாத்தி குளம் ” நாவலில் இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து கிராமநிகழ்வுகளூடே இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக் கொண்டிருந்தது. “ வாழும் சுவடுகள் “ என்ற அவரின் தொகுப்பில் மனிதர்கள், மிருகங்கள் பற்றிய அனுபவ உலகில் விபரங்களும் உறவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்தது. “அசோகனின் வைத்தியசாலை ” என்ற இந்த நாவலை அதன் தொடர்ச்சியாக ஒரு வகையில் காணலாம்.
Book Image
தமிழ்சூழலில் மிருகங்கள் பற்றியப் பதிவுகள் குறைவே. விலங்குகள் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஜெயந்தன் தன் படைப்பில் சிறிய அளவில் தன் மருத்துவமனை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் வீட்டுக் கால்நடைகளை மருத்துவத்திற்கு கொண்டு வருகிறவர்களின் மன இயல்புகள், சமூகம் சார்ந்த் பிரச்சினைகளீன் அலசலாய் அவை அமைந்திருக்கின்றன. அசோகனின் வைத்தியசாலை நாவலில் ஆஸ்திரேலியாவில் பிழைக்கப்போன சூழலில் அங்கு மிருக வைத்திய சாலையில் பணிபுரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமான நாவலாக்கியிருக்கிறார்.

சுந்தரம்பிள்ளை, போர் சூழலிலிருந்து தப்பிக்கவும், வேலை நிமித்தமும் அஸ்திரேலியா போகிறான். மெல்பர்னில் ஒரு வைத்தியசாலையில் வேலைக்குச் சேர்கிறான்.பனை ஓலைப்பையில் சரசரவென உயிர் நண்டு குடைந்தது” போல 6 மாதம் வேலையில்லாமல் சிரமப்பட்டுத்தான் வேலை கிடைக்கிறது.கொலிங்வுட் என்ற பூனையுடன் பேசுகிறான். நாய் கொட்டையடித்துப் பழக வேண்டியிருக்கிறது. காளை விதை சரி செய்ய வந்து போகிறது. மிஷேல், ரிமதி பாத்தூலியஸ் போன்ற கூட வேலை செய்யும் ஆண்களின், பெண்களின் உலகமும் காட்டப்படுகிறது.
நாய்க்குட்டிகள் தத்தெடுப்பும் நடக்கிறது. பிறந்த நாட்கள் நாய்களுக்கென்றும் வந்து போகின்றன. பிறந்த நாள் பரிசும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.பிணவாடை இல்லாத கிரிமட்டோரியம் தென்படுகிறது. கெட்ட வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவது சுலபமாக இருக்கிறது. ஓவர்டைம் வேலையின் சங்கடங்கள் சுந்தரம்பிள்ளைக்கும் இருக்கிறது. டாக்டர் காலோஸ் என்னும் தலைமை வைத்தியரின் பொறுமையை மீறும் அனுபவங்கள் விரிகின்றன.கலிபோர்னியா காட்டுத்தீ அனுபவங்கள், டண்டினோங் மலைத்தொடர் பற்றியும் சொல்லப்படுகின்றன.மெல்போர்ன் நகர உருவாக்கம் சொல்லப்படுகிறது.ஞாயிறு விடுமுறை நாட்கள் கழியும் விதம் சொல்லப்படுகிறது. விசேமான பூனை ஒன்று 9 தரம் செத்து உயி பிழைக்கிறது. நாய்களின் கர்ப்பம் அலசப்படுகிறது. கணவன் மனைவி முரண் நீடித்துக் கொண்டே இருக்கிறது. காலோஸ்ன் முன்னாள் காதலி மஸா பற்றி சொல்லப்படுகிறது.

மூன்றாம் பாகத்தில் புது மானேஜர் வருகிறார்.புது சினேகிதி பெண் கிடைக்கிறாள். மதுவிடுதியும், பிறந்த நாள் கொண்டாட்டமும் சொல்லப்படுகிறது. தமிழ் பாத்திரங்கள் அவ்வப்போது வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறர்கள். புலம் பெயர்ந்த் சூழலில் மாறின சிந்தனைமுறைகள் பற்றிப் பேசப்படுகிறது.வெளிநாட்டுச்சூழல்,உண்மை யதார்த்த்தோடு தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றிச் சொல்லப்படுகிறது. மருத்துவ உலகின் நிர்வாகம், ஆலோசனைகள் நீள்கின்றன.புதிய திணையான பகுதி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.. பூனைகளைக் கருணைக் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் ஜின் தற்கொலை நிகழ்கிறது கணவன்கள் பிரிந்து சென்ற பின் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். விவாகரத்துகள் நிகழ்கின்றன. ஆவி போல் உலவும் ஷாலற் பெண் பைத்தியம் பிடித்து அலைகிறாள். ஆண்டனி கதை விரிகிறது. சிட்னி நகர கான்பரன்சிற்கு போய் அனுபவங்களை விவரிக்கிறான். கணவனை பக்கத்து அறையில் வைத்துக் கொண்டு உடல் உறவு கொள்கிறாள் ஒரு பெண். பெண்ணை மிருகத்தனமாக தாக்கும் அவள் கணவன். அவளின் காயங்கள், கணவனைப் பழி வாங்க அவள் அப்படி நடந்து கொள்கிறாள்.ஷ்ரன் கணவன் மனைவி சண்டை மணவிலக்கும் கொலை வரை செல்கிறது. கொலிங்புட் எனும் பூனை 15 வயது, கருணை கொலை செய்யப்படுகிறது. வழக்கு நீதிமன்றத்திற்குப் போகிறது. கடைசியில் தூக்கு தண்டனை, கருணைக் கொலை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.

மிருகங்களின் வாழ்க்கையில்கூட சேர்ந்து வாழ நேர்ந்த மனிதர்கள் இதில் காணக் கிடைக்கிறார்கள்.மனித இயல்புகளும், மிருக இயல்புகளும் வெளிப்படுகின்றன. மனிதர்கள் மிருக இயல்பை ஏற்றுக் கொண்டு விசித்திரமாகச் செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் மிருக இயபைக் காட்டும் போது ஆறிவு என்பது மறைந்து போகிறது. மிருகங்கள் கூட பல விசயங்களில் மனிதர்களுக்கு ஆறுதலாகவும், முன் உதாரணங்களாகவும் அமைந்து விடுகிறார்கள்.
இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான மனோஜ்தாசின் சில கதைகள் மிருகங்களுடனான மனித உறவுகளை விளக்குவதற்குப் பயன்பட்டதை அவரின் சில சிறுகதைகளை படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.புலியொன்றை வைத்து வளர்த்து வருபவன் சுதந்திரம் என்பது அது காட்டிற்குள் திரிவது என்பதைக் கண்டு கொண்ட ஒருவன் அதை காட்டிற்குள் கொண்டு விடச் செய்கிற முயற்சிகள் தோற்றுப் போவதைக் காண்கிறான். முதலை ஒன்று ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்துகிறது. அது மனித உருவாகவும் ஆகும் இயல்பு கொண்டது. அது ஊருக்குள் வந்து இருக்கும் போது கொல்லப்படுகிற போது அவற்றின் உறவில் ஏற்படும் அதிர்வுகளை இன்னொரு கதை பேசுகிறது. ஆந்தை பற்றிய ஒரு கதையின் சித்தரிப்பில் ஆந்தை மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், கடவுளின் நேரடி பிரதிநிதியாகவும் ஊருக்கு வந்து மக்களை மிரட்டுவதை ஒரு கதையில் சித்தரித்தருக்கிறார். அதை ஜமீந்தார் ஒருவர் சுட்டுக் கொல்லும் போது அந்த ஊர் பயத்துள் மூழ்கிப் போவதை அக் கதையில் சொல்கிறார்.

இதேபோல் அசோகனின் இந்த நாவலில் மிருக இயல்புகளும், விசித்திரங்களும் மனிதர்களை ஆட்டிப் படைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.சமநிலையான சமூகத்தில் மிருகங்களும் மனிதர்களும் இயைந்து உலாவுவதை மிருக வைத்தியசாலை ஒன்றை முன் வைத்து நடேசன் சொல்லிக் கொண்டு போகிறார்.
ஆஸ்திரேலியா மக்கள் சமூகம் ஒருவகையில் அகதி மக்களையும், வேலை தேடி வருபவர்களையும் ஏற்றுக்கொண்டு இயங்க அனுமதிக்கிற சமூகமாகும். வேற்று மனிதர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வையில் விரிந்த அளவிலேயே செயல்படுகிறது. இதில் வரும் ஆஸ்திரேலிய மனிதர்கள் அவ்வாறே இயங்கவும் செய்கிறார்கள். அந்த சமூகத்தில் வாழ நேர்ந்த அனுபவங்களை நடேசன் சொல்லிச் செல்கிறார்.வித்தியாசமான களத்தில் மனித வாழ்வு இதில் புலம் பெயர்ந்த தமிழனின் அனுபவங்களாய் விரிந்திருக்கிறது.

நன்றி ஞானம் மாத சஞ்சிகை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: