Monthly Archives: ஜனவரி 2014

ஜனவரி 31 – நடிகர் நாகேஷ் நினைவு தினம்

இயக்குநர்களின் ஆளுகைக்கு உட்படாமல் தனது சுயஆற்றலை வெளிப்படுத்திய கலைஞர் நாகேஷ் முருகபூபதி ‘தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனத்தில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலாநோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

நம்பிக்கை

வாழ்வை எழுதுதல் முருகபூபதி சக மனிதர்களிடத்தில் ஒருவருக்கு நம்பிக்கை குறையும்பொழுது அவர் புதிய நம்பிக்கையைத்தேடிச்செல்வது இயல்பு. நானறிந்தமட்டில் இவ்வாறு நம்பிக்கை இழந்த பல பெண்கள் பெண்ணிலைவாதிகளாகவும் – விரக்தியின் விளிம்புக்குச்சென்று மன அழுத்த நோயாளிகளாகவும் – மதம் மாறியவர்களாகவும் பொதுநலப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுவிடயத்தில் ஆண்கள் சற்றுவித்தியாசமானவர்கள். ஒரு பஸ் இல்லையென்றால் மற்றுமொரு பஸ்ஸில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா

எகிப்தில் சிலநாட்கள் 14 நடேசன் நைல் மீதான மத்திய அரசர்கள் காலத்துக்கவிதை புவியில் இருந்து வந்து எகிப்தை எங்களுக்களித்தாயே. உன்னை வணங்குகிறேன். இரண்டு நாட்டையும் ஒன்றிணைத்து தானியக் களஞ்சியங்களை நிறைத்தாயே வறியவர்கள் வயிற்றை நிரப்பிய நீ வாழ்க. நைல் நதியில் அதிகாலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக யன்னலைத் திறந்தபோது உச்சி வானம் வெளிர்நீல நிறமாக மேகக் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்

வெள்ளையானை நொயல் நடேசன் தமிழ்நாட்டு நாவல்களின் கருப்பொருள்கள் எழுத்தாளனால் தன்னை சுற்றிய நிகழ்கால புறச்சூழலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. அது குறைபாடானது அல்ல. ஆனாலும் ஒரு எழுத்தாளன் தான் சார்ந்த சாதி, பின்பற்றும் கருத்தியற்கோட்பாடு, தனது பிரதேசம் எனத் தன்னைச் சுற்றி இலச்சுமணனின் கோடு போல் போட்டு விட்டு, சீதையைப்போல் அல்லாது, மீறாது நல்ல பிள்ளைகளாக உள்ளிருந்து … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை

நடேசன் இலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்லுணர்வு (சிறுகதை)

நடேசன் குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்