Monthly Archives: திசெம்பர் 2013

எகிப்திய வரலாறு: பெண்ணரசி

எகிப்து 13 நடேசன் ஜோவான் என்ற பெண் ஆணாக வேடமிட்டு மத்தியகாலத்தில் (1100AD) கத்தோலிக்க பாப்பரசராக இரண்டு வருடங்கள் பதவி வகித்தார். அவர் குதிரையில் செல்லும் போது பிரசவம் நடந்து பெண்ணென்ற விடயம் பகிரங்கமானது. ஜோவான் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்;. பெண்களைப் பொறுத்தவரை தற்காலத்தில் நிலைமை எவ்வளவு மாற்றம் நடந்துள்ளது என்பது நாடுகளுக்கு நாடுகள் … Continue reading

Posted in Uncategorized

மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்

எகிப்து – 12 நடேசன் அந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் … Continue reading

Posted in Uncategorized

மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.

எக்சோடஸ் 4 நடேசன் இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன். அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் … Continue reading

Posted in Uncategorized

வாசிப்பு அனுபவம்:

முருகபூபதி நாங்கள் பிறக்கிறோம். இறக்கிறோம். இரண்டும் எப்பொழுது நிகழும் என்பதோ பிறந்த வேளையே அல்லது இறந்தபின்போ எதுவும் தெரியாது. மற்றவர்களின் குழந்தை பிறந்ததை பார்த்ததும் அட நாங்களும் பிறந்தபொழுது இப்படித்தானே இருந்திருப்போம் என நினைப்போம். அத்துடன் குழந்தைப்பருவமும் நினைவுக்கு வந்துவிடும். ஒருவர் இறந்தால் அவரை ஃபியூனரல் பாலரில் அல்லது மயானத்தில் பிரேதப்பெட்டியினுள் பார்த்தால் நாம் என்ன … Continue reading

Posted in Uncategorized

இளங்கீரன் நினைவுகள்

திரும்பிப்பார்க்கின்றேன் 19 இலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன் முருகபூபதி இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் … Continue reading

Posted in Uncategorized

மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பான அனுபவப்பகிர்வு நிகழ்வு மெல்பனில் வேர்மண் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி – படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள், ஆவூரான் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை, பாடும்மீன் … Continue reading

Posted in Uncategorized

மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு

அவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அடுத்தவாரம் (07-12-2013) மெல்பனில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Appreciation

Dear Friend, I read your comment on the book written by com. Pushparani. Based on my opinion, your report was well written. It is very brave of Pushparani to allow her experience in the war to be published. Unfortunately, women … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக