அகாலம் நூலுக்கான முன்னுரையை எழுதித்தருமாறு ஷோபாசக்தி கேட்டபோது அந்தப் புத்தகத்தை படித்தபின் எழுதியதை அனுப்பியிருந்தேன். ஆனால், அது ஒரு அறிமுகக் குறிப்பாக இருக்கிறது என இன்னொரு நண்பரும் கருதியதால் பிறிதொரு கட்டுரையை எழுதினேன். ஒன்றை முன்னுரையாக எடுத்துக்கொண்டு மற்றதை புத்தகம் வந்த பின்னர் மதிப்புரையாகப் பயன்படுத்தலாம் எனக் கருதினேன். ஆனால் இரண்டையும் படித்த ஷோபாசக்தி அவற்றை மிகச் சிறப்பாக எடிற் பண்ணி ஒன்றாக இணைத்திருந்தார். “நீங்கள் அனுப்பிவைத்த இரண்டு முன்னுரைகளையும் சற்றே எடிட் செய்து (குறிப்பாக புத்தகத்திலிருந்து நீங்கள் காட்டிய மேற்கோள்களை) ஒரு முன்னுரையாகச் செய்திருக்கின்றேன். ஒரு தடவை படித்து சரியோ திருத்தமோ சொல்லிவிடுங்கள்.“ -என்று எனக்கும் அறிவித்தார். பின்னரே புத்தகத்தில் அதை இணைத்தார். நானும் அதை ஏற்றிருந்தேன். ஆனால், என்னுடைய புளொக்கில் மடடும் தனித்தனியாக எழுதப்பட்ட அந்த உரைகள் உள்ளன. மற்றும்படி வேறு எங்கும் அவை இல்லை. அகாலத்தில் வந்துள்ள முன்னுரை தொடர்பாக நீங்கள் கேட்டபோது இப்படி விரிவாக நான் சொல்லவில்லை என்பதால்“ இரண்டையும் சேர்த்து“ ஷோபாசக்தி பிரசுரித்து விட்டார் என்ற விதமாகப் பதிவாகியுள்ளது. அதாவது ‘நான் எழுதிய முன்னுரையையும் மதிப்புரையையும் ஒன்றாக சேர்த்து ஷோபாசக்தி பிரசுரித்ததால் நீண்டுவிட்டது ” என தேனியில் வந்துள்ளது. இரண்டையும் “எடிற்பண்ணி இணைத்தார்“ என வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காது எனக் கருதுகிறேன். நன்றி.
மறுமொழியொன்றை இடுங்கள்