Monthly Archives: நவம்பர் 2013

கவிஞர் கருணாகரன் கடிதம்.

அகாலம் நூலுக்கான முன்னுரையை எழுதித்தருமாறு ஷோபாசக்தி கேட்டபோது அந்தப் புத்தகத்தை படித்தபின் எழுதியதை அனுப்பியிருந்தேன். ஆனால், அது ஒரு அறிமுகக் குறிப்பாக இருக்கிறது என இன்னொரு நண்பரும் கருதியதால் பிறிதொரு கட்டுரையை எழுதினேன். ஒன்றை முன்னுரையாக எடுத்துக்கொண்டு மற்றதை புத்தகம் வந்த பின்னர் மதிப்புரையாகப் பயன்படுத்தலாம் எனக் கருதினேன். ஆனால் இரண்டையும் படித்த ஷோபாசக்தி அவற்றை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

புஸ்பராணியின் அகாலம்

நடேசன் அகாலம் நூலை படித்து முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பின்பு குளியலறைக்குச் சென்று வந்தபோது ‘ என்ன இந்த அகாலத்தில் லைட்டை போட்டுவிட்டு திரிகிறீங்கள்’ என்றாள் எனது பிரிய மனைவி. அவருக்கு ஏற்கனவே குறைந்தது மூன்று மணிநேரத்து நித்திரை முடிந்திருக்கும். இதுவரை நேரமும் புத்தகம் வாசித்தேன் எனப் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்

நடேசன் (அவுஸ்திரேலியா) தமிழில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளே சர்வதேசத்தன்மையானவை. இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வகையான எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப்படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

மேடையில் உயிர் நீத்த தோழர் வி.பொன்னம்பலம்

திரும்பிப்பார்க்கின்றேன் 16 பனைமரத்துப்பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்….. முருகபூபதி பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால் சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள் – இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர் கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான் கொள்கைப்பற்றாளர் பதவிகளுக்காக சோரம்போகாதவர் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எனது நெஞ்சறையில் மு.கனகராசன் நினைவுகள்

திரும்பிப்பார்க்கின்றேன் முருகபூபதி “உங்களுடைய கையெழுத்து அழகாக இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” – என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான புன்னகை. பல எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது போன்று அழகாக அமையவில்லை என்பது என்னவோ உண்மைதான். வேறு எந்தத் தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத் தொடங்கியவர்களின் வரிசையில் இடம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம்

எகிப்தில் சிலநாட்கள் – 11 நடேசன் மனித இனம் வேட்டையாடுதலில் இருந்து விவசாய சமூகமாக மாறிய காலத்தில் மதுவின் பங்கு தற்காலத்தைவிட மிக முக்கியமானது. இக்காலத்தில் போதைப்பொருளாக மட்டுமே மது அருந்தப்பட்டது. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வலிநிவாரணியாகவும் தூக்கமாத்திரை என்ற மருத்துவப் பதார்த்தமாகவும் அருந்தப்பட்டது. அக்கால மனிதர்கள் சராசரியாக முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்கள் மட்டுமே … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Sri Lankan Demography in Australia

www AusMg com au.pdf

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு

அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெமோரியல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது. உலகெங்கும் போரில் உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக