கல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம்

Nadesan's Photos 26214012013494
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.

அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம்இ இலங்கையில் வடக்குஇகிழக்குஇமாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறது.
முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்துஇ பட்டமும் பெற்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். போரில் தமது கால் இழந்த சில மாணவர்களும் இந்நிதியத்தின் ஆதரவுடன் தமது கல்வியை தொடருகின்றனர்.

ஒரு மாணவருக்கு உதவ விரும்பும் அன்பர் மாதாந்தம் கூ 21 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்குவதன் மூலம் ஒரு மாணவர், தனது கல்வியை நிறைவு செய்யும் வரையில் உதவமுடியும்.

உதவி பெறும் மாணவரின் பூரணவிபரங்கள் உதவும் அன்பருக்கு தரப்படுவதுடன்இ மாணவரின் கல்வி முன்னேற்றச்சான்றிதழ் மற்றும் உதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் முதலானவற்றையும் நிதியம் அன்பர்களுக்கு அனுப்பிவைக்கும்.

மாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறை காலங்களில் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில்,தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடைமுறையினால் பல உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளையும் கவனித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி நலன்களை கவனித்து,அவர்களை விடுவித்து க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் தகவல் அமர்வும் மெல்பனில்இ
வேர்மன்ட் சவுத் சமூக இல்லத்தில் எதிர்வரும் 19-10-2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்

Vermont South Community House – Karobran Drive,
Vermont South, Victoria 3133, Australia

மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் கல்வி நிதியத்தின் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். நிதியத்தின் பணிகளை இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

E.Mail: kalvi.nithiyam@yahoo.com Web: http://www.csefund.org

“கல்வி நிதியத்தின் பொதுக்கூட்டம்” அதற்கு 3 மறுமொழிகள்

 1. I really didn’t understand. Going by the photo if it is helping the girl in any way that is a very worthwhile cause and we all should join hands. 

  ________________________________

  • Dear MR Wanigasekara
   This organisation helping orphan children for their education more than 20 years. Mr Murugapoopathy is the pivotal force for this organisation.I am really sorry the press release only in Tami.Girl on the photo from my home town(Eluvaitivu) also receiving help through this organisation
   kind regards
   Noel Nadesan

 2. Dear Mr Nadesan,
  It really doesn’t matter; anybody needing help immaterial of cast creed andNationality needs to be helped and I will myself send some money to help this girl if the whareabouts are indicated.
  The issue is that we have to forget about the past and surge forward as a Nation. As a Nation we have to take care of everybody, immaterial of their Geogrophical location, and help the deserving. Of course there are selfish villans who are interested only in furtherense of their personal interests but that doesn’t mean we should kill each other and continue in this madness. Really we should join hands and make this a developed country where everybody can live happily. (this is in very short)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: