கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம்
ரஸஞானி
விவேகானந்தர் துறவி என்றாலும்,அவர் மனிதன் தனதுஅடையாளத்தைவிட்டுச்செல்வதற்கு மூன்றுஆலோசனைகளைசொல்லியிருக்கிறார்.
மனிதன் பிறக்கிறான்,மறைகிறான். இடையில் அவனிடமிருப்பதுநீண்டஅல்லதுகுறுகியகாலவாழ்க்கை. அந்த இடைவெளியில் அவன் உருப்படியாக மூன்றுவிடயங்களில் ஏதாவதுஒன்றையாவதுசெய்துவிடவேண்டும். இல்லையேல் அவனுக்குப்பிறகுஅவனதுபெயர் சொல்வதற்குஅடையாளமாகஒன்றும் இருக்காது.
இல்லறத்தில் ஈடுபட்டுஒருபிள்ளைக்காவதுபெற்றோராகிவிடவேண்டும். அல்லதுதனதுபெயர் சொல்லஒருவீட்டையாவதுவிட்டுச்செல்லவேண்டும். அல்லதுஒருபுத்தகம் எழுதிவிடவேண்டும்.
நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் நூலைகையிலெடுத்தபொழுது விவேகானந்தர் சொன்னதுதான்எனதுநினைவுக்குவந்தது.
கிருஷ்ணமூர்த்தி ஒன்றல்ல மூன்றுகடமையையும் செய்துவிட்டார். குழந்தைகளின் தந்தையாககுடும்பத்தலைவன்,புகலிடத்தில்உழைத்துவீடு. தற்பொழுதுஒருநூலையும் வாசகர்களுக்குசமர்ப்பித்துவிட்டார்.
நீண்டகாலமாகஅவர் எழுதிவந்தாலும் தற்பொழுதுதான் ஒருநூலைவெளியிடவேண்டும் என்றவிருப்பத்திற்குவந்துள்ளார் என்பதனால் விவேகானந்தரின் கூற்றையும் இங்கு குறிப்பிட்டேன்.
இலங்கையில் தமிழில் பத்திஎழுத்துக்களைபரவலானஅறிமுகத்துக்குவிட்டவர் திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன். அவர் தாம் படித்ததமிழ் ஆங்கிலநூல்கள்மற்றும் பிறமொழிப்படைப்பு மொழிபெயர்ப்புகள்,தரமானதிரைப்படங்கள்,நாடகங்கள் பற்றியெல்லாம் நயப்புரையாகதிறனாய்வுசெய்பவர்.
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் கிருஷ்ணமூர்த்தியும்,தனதுவாசிப்புஅனுபவங்களையும் ரசித்ததிரைப்படங்களையும் தன்னால் மறக்கமுடியாதசம்பவங்களையும் இந்தநூலில் பதிவுசெய்துள்ளார்.
இந்நூலைப்படிக்கும்பொழுது,அவரதுபார்வையும் ரசனையும் துலக்கமாகிறது. தனதுகருத்துக்களைஅழுத்தாமல் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவும் பாணியைஅவர் தமதுபத்திஎழுத்துக்களில் கையாளுகிறார்.
தொலைந்துபோனநாட்கள்,சிந்தனைக்குச்சில,எனதுநூலகம்,மறைந்தும் மறையாதோர்,சினிமா,சிறுகதை,நேர்காணல் முதலானதலைப்புகளில் தமதுகலை, இலக்கிய,சமூகம் சார்ந்சிந்தனைகளைகதம்பமாலையாககோர்த்துள்ளார்.
இலங்கையிலிருந்தகாலத்தில் அவ்வப்போது இதழ்களில் புனைபெயர்களில் எழுதிவந்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அக,புறகாரணங்களேஅதற்குக்காரணம் என்றும் சொல்கிறார். புனைபெயர்களில் படைப்பாளிகள் எழுதுவதுவழக்கம்.புதுமைப்பித்தன்,சுஜாதா,வாலி,ஆகியோருக்கு இயற்பெயர் வேறு. ஆனால் அவர்கள் புனைபெயர்களில்தான் பிரபலமானார்கள்.
இலங்கையில் கிருஷ்ணமூர்த்திதொடர்ந்துவாழ்ந்திருப்பாரேயானால் சிலவேளைஅவர் முன்னர் தமக்குத்தாமே சூட்டிக்கொண்டபுனைபெயர்களில்ஏதாவதுஒன்றில் பிரபலமாகியிருக்கவும் கூடும். அதுஅவர் எழுதியவற்றைபொருத்தும் அமையும்.
ஆனால் விதிவசத்தால் ஐரோப்பியநாடுகளெல்லாம் சுற்றியலைந்துவிட்டு இந்த கடல் சூழ்ந்தகண்டத்துக்குள் வந்தபின்னர்,அவரதுவாசிப்புத்தாகம் குன்றாமல் குடத்துள் இட்டதீபமாகவேசுடர்விட்டிருக்கிறது.
சிலவருடங்களுக்குமுன்னர் தங்குதடையின்றிதொடர்ச்சியாகசுமார் 14 ஆண்டுகள் மெல்பனில் வெளியானஉதயம்இருமொழிமாத இதழ் அவரதுஆற்றலை இனம் கண்டுஊக்குவித்திருக்கிறது.
உதயம் இதழில் அவருக்குஎழுதுவதற்குவாய்ப்பளித்ஆசிரியபீடத்துக்கு இந்தநூலில் அவர் நன்றியும் தெரிவிக்கின்றார். இங்குஅவர் அக- புறகாரணிகள் எதுவும் இன்றிகிருஷ்ணமூர்த்தி என்றபெயரிலேயேஎழுதிவந்தவர். அவருக்குகேலிச்சித்திரம் வரையும் ஆற்றலும் உண்டு. ஆனால் அவர் அந்தத்துறையில் தன்னைவளர்த்துக்கொள்ளவிரும்பவில்லைப்போல் தெரிகிறது.
உலகில் எவரும் எங்குவாழத்தலைப்பட்டாலும் பெற்றவர்களையும் பிறந்தபொன்னாட்டையும் மறக்கமாட்டார்கள். இவர் இலங்கையில் தமதுபூர்வீகவடபிரதேச ஊரான இடைக்காடுகிராமத்தைமறக்காமல்,அவ்வூர் சனசமூகநிலையங்களுக்குதமதுமறுவளம்நூலைசமர்ப்பணம் செய்துள்ளார்.
உதயம்,திண்ணை,பதிவுகள்,யுகமாயினி,மல்லிகை,குமுதம் காம்,யாழ்மணம்,வீரகேசரி,ஜீவநதி,எதுவரை,அக்கினிக்குஞ்சு,அவுஸ்திரேலியாதமிழ் முரசு,தேனி, இடைக்காடு இணையம் முதலானவற்றில் வெளியானபத்திஎழுத்துக்களுடனும் சிட்னியிலிருந்துஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியதமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனவானொலியில் ஒலிபரப்பானஆக்கங்களுடனும் மறுவளம்நூலைதொகுத்திருக்கிறார்.
ஊரிலேபுழக்கத்தில் உள்ளஒருசொல் மறுவளம். மறுவளமாகப்பாருங்கள்…மறுவளமாகயோசியுங்கள்…என்றெல்லாம் யாழ்ப்பாணத்துதமிழ் மக்கள் பேசுவதைக்கேட்டிருக்கின்றேன்.
(பிரதேசதமிழ் மொழிவழக்குகள் பற்றிக்கூட நாம் விரிவாகஉரையாடலாம் -எழுதலாம்) எனவேகிருஷ்ணமூர்த்தியின் மறுவளம்என்றநூலின் தலைப்புஉள்ளடக்கத்தைஎமக்குஅடையாளம் காட்டுகிறது.
நூலின் முதலாவது இரண்டாவதுஆக்கங்கள் மனதைஉருக்குகின்றன. போரின் கொடூரத்தை,சித்திரவதைக்கொடுமைகளை எதிர்பாராத இழப்புகளைமரணிக்கும் வரையில் தொடரும் துன்பியல் நினைவுகளைகிருஷ்ணமூர்த்திசித்திரித்துள்ளார்.
படிக்கும்பொழுதுமனம் பதைபதைக்கிறது.
அவர் தெய்வாதீனமாகஉயிர் தப்பியசம்பவம் ஒருசிறுகதை போன்றுமரணம்எனக்குமிகஅருகில்என்றதலைப்பில் பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்துவந்தவாழ்க்கைப்போராட்டத்திலிருந்துதப்பிச்செல்லஅந்நியம் புறப்படுவதற்காககொழும்புக்குவந்து ஏஜன்ஸியின் பதிலுக்குகாத்திருந்துஒருவிடுதியில் தங்கியிருந்தவேளையில் ஊர் நண்பர் ஈழநாடுபத்திரிகையுடன் வந்துசொல்லும் செய்தி:- இவருடையஊர்ச்சந்தியில் விமானம் போட்டகுண்டில் இவரதுநண்பர்கள் சிலர் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
அவர்களின் மரணச்சடங்கிற்காக ஊர் திரும்புபவர்,வடமராட்சிலிபரேஷன் ஒப்பரேஷன் தாக்குதல்களினால் அங்குசெல்லமுடியாமல் அகதிகளுடன் அகதியாகஅல்வாய் அம்மன் ஆலயத்தில் தங்குகிறார்.மறுநாள் அங்கிருந்து இடம்பெயர்ந்துசென்றபின்னர்,அந்தஅம்மன் ஆலயமும் குண்டுவீச்சில் தாக்கப்பட்டுபலஉயிர்கள் மடிகின்றனஎன்றதகவலைஅறிகிறார். ஒருவீட்டில் தஞ்சமடைந்தபொழுது இராணுவம் பிடித்துச்செல்கிறது. கண்முன்னேஒருமாணவன் சுட்டுக்கொல்லப்படுகிறான். கைதானவர்களைகாலிமுகாமுக்குஅனுப்பகப்பலில் ஏற்றுகிறார்கள்.
ஒருமனிதனைபோர் எப்படி ஓடஓடவிரட்டுகிறதுஎன்பதைசித்திரிக்கும் இந்தஆக்கத்தின் இறுதிவரிகள்:-
‘வெய்யிலில் நின்றால்தான் நிழலின் அருமைதெரியும். யுத்தக்கொடுமையைஅனுபவித்தால்தான் சமாதானத்திற்கானபெறுமதிதெரியும்.’
ஆளுக்கொருதேதிஎன்ற இரண்டாவதுஆக்கம் கடல் மார்க்கமாகத்தப்பிச்செல்லமுயன்றதைசித்திரிக்கின்றது. ஏற்கனவே 1983 இல் தந்தையையும் அண்ணனையும் இனவாதசக்திகளிடம் பலி (பறி) கொடுத்துவிட்டுஒருவிடுதலை இயக்கத்தில் இணையும் நண்பன் செண்பன்,“ஆளுக்கொருதேதிவைத்துஆண்டவன்அழைத்தான்…”என்றுபாடிக்கொண்டேகடலில் மூழ்கிவிடுகின்றான்.அவனதுநெஞ்சுறுதிஎம்மைவியக்கவைக்கிறது. இப்படிஎத்தனைகொழுந்துகளை இழந்துவிட்டோம்.
நீந்திதப்பிச்சென்ற இயக்கத்தின் முக்கியஸ்தரிடம், மூழ்கி இறந்தவர்கள் பற்றியதகவலைச்சொல்லிகவலைப்பட்டபொழுது,“ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவர்கள் இறந்ததற்காகவா? அல்லதுநான் உயிர் தப்பிவிட்டேன் என்பதற்காகவா?என்றுஅவர் கேட்கிறார்.
இதுஎப்படி இருக்கிறது?
இவ்வாறுகடந்துபோனபோர்க்காலத்தை, இனியும் போரேவேண்டாம். போருக்குத் தள்ளவேண்டாம் போரைத்திணிக்கவேண்டாம் அதற்கான சூழலைஉருவாக்கவேண்டாம் என்றுஅதிகாரத்தைதூண்டுபவர்களை – அதிகாரத்திலிருப்பவர்களைநோக்கிஅறைந்துசொல்கிறது இந்தப்பத்திஎழுத்துக்கதைகள்.
இவ்வாறுமறுவளம்நூலின் ஒவ்வொருஅத்தியாயத்தையும் பக்கம் பக்கமாகவிவரித்துஎழுதிக்கொண்டேபோகலாம்.
சினிமாபிரியர்களுக்காகவும் கிருஷ்ணமூர்த்திஎழுதுகிறார்
காமராஜ்,பெரியார்,காந்தியின் தந்தை, ஸ்லம்டோக் மில்லியனர்,நான் கடவுள்,தாரோ ஜமீன் பார், பூ ,சுப்பிரமணியபுரம்,தசாவதாரம் முதலானதமிழ் ஆங்கில ஹிந்திப்படங்கள் பற்றியதனதுபார்வைகளையும் குறும்படங்கள் குறித்ததமது ரஸனை அனுபவங்களையும் இந்தநூலில் பதிவுசெய்துள்ளார்.
அரசியல்,சமூகம்,சினிமா, இலக்கியம் உட்படமரணிக்காதநினைவுகளினதும் தொகுப்புத்தான் மறுவளம்.வாசகர்கள் மறுவளம் நூலைபடித்துஏனையவற்றைதெரிந்துகொள்ளட்டும் என்று இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
கிருஷ்ணமூர்த்தி,அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாகவருடந்தோரும் தமிழ்எழுத்தாளர் விழாவைநடத்திவரும் அவுஸ்திரேலியாதமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் ஸ்தாபகஉறுப்பினர் மட்டுமல்ல இச்சங்கத்தின் பணிகளில் செயல் ஊக்கமுள்ளஉறுப்பினருமாவார்.
இந்தஆண்டில் சிட்னியில் நடந்த 13 ஆவதுஎழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டமறுவளம்அண்மையில் இலங்கையில் கிளிநொச்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் மெல்பனிலும் அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
தீவிரதமிழ் வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டியநூல் மறுவளம்.
தமிழ்நாட்டில் தரமானநூல்களைவெளியிடும் கறுப்புபிரதிகள்பதிப்பகம் இதனைநூலாக்கம் செய்திருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை இந்நூல் வெளியீட்டின் ஊடாகதமிழகத்துக்கும் அறிமுகப்படுத்தியிருக்கும் நண்பர் கவிஞர்,ஊடகவியலாளர் கருணாகரன் பாராட்டுக்குரியவர். ஆரோக்கியமான இலக்கியதொடர்பாடலுக்கும் இந்நூல் சான்றுபகருகின்றது.
பிரதிகள் தேவைப்படுவோர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொள்ளலாம்.
மின்னஞ்சல் sellamuthu6@hotmail.com