இரக்கமுள்ளஅன்பர்களுக்குஉருக்கமானவேண்டுகோள்

14012013494அவுஸ்திரேலியாவில் இயங்கும்
இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் 24 ஆவதுஆண்டுப்பொதுக்கூட்டம்

இலங்கையில் நீடித்தபோரினால் பெற்றவர்களை இழந்து,ஏழ்மைநிலையினால் கல்வியைதொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்குஅவுஸ்திரேலியாஉட்படபலநாடுகளிலிருந்தும்அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கைமாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ளஅன்பர்களுக்கு இந்தஅறிக்கையின் ஊடாகஉருக்கமானவேண்டுகோளைமுன்வைக்கின்றது.
அவுஸ்திரேலியாமெல்பனைதலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கைமாணவர் கல்விநிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டுமுதல் பணிகளைமேற்கொண்டுவருகிறது.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியாமாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டஅமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டுநிறுவனம்,இலங்கையில்வடக்கு,கிழக்கு,மாகாணங்களில்யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறைஆகியமாவட்டங்களில் போரினால் தாய்,தந்தைமற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்தஏழைத்தமிழ் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குதொடர்ச்சியாகஉதவிவருகிறது.

முதலாம் வகுப்பிலிருந்துபல்கலைக்கழகபுகுமுகவகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்விபயிலும் மாணவர்கள் பலர் இந்தஉதவித்திட்டத்தினால் நல்லபலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.

கடந்தஆண்டுகளில் இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் உதவியினைப்பெற்றநூற்றுக்கணக்கானமாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குபிரவேசித்துள்ளனர். மேலும் பலமாணவர்கள் தமதுபல்கலைக்கழககல்வியைநிறைவுசெய்து,பட்டமும் பெற்றுதொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.

போரில் தமதுகால் இழந்தசிலமாணவர்களும் இந்நிதியத்தின் ஆதரவுடன் தமதுகல்வியைதொடருகின்றனர். ஒருமாணவருக்குஉதவவிரும்பும் அன்பர் மாதாந்தம் கூ 21 அவுஸ்திரேலியன் வெள்ளிகளைவழங்குவதன் மூலம் ஒருமாணவர்,தனதுகல்வியைநிறைவுசெய்யும் வரையில் உதவமுடியும்.
உதவிபெறும் மாணவரின் பூரணவிபரங்கள் உதவும் அன்பருக்குதரப்படுவதுடன்,மாணவரின் கல்விமுன்னேற்றச்சான்றிதழ் மற்றும் உதவிபெற்றதைஅத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் முதலானவற்றையும் நிதியம் அன்பர்களுக்குஅனுப்பிவைக்கும்.
மாணவருக்குஉதவும் அன்பர்கள் விடுமுறைகாலங்களில் இலங்கைசெல்லும் சந்தர்ப்பங்களில்,தாம் உதவும் குறிப்பிட்டமாணவர்களைநேரில் சந்தித்துஉரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கைமாணவர் கல்விநிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டசுனாமிகடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்டமாணவர்களின் கல்விவளர்ச்சிக்கும்,2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் வன்னியில் நடந்தபோரினால் பாதிப்புற்றுஅகதிமுகாம்களில் தஞ்சமடைந்தமாணவர்களுக்கும் உதவிவழங்கியிருப்பதுடன்,முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டநூற்றுக்கணக்கானமாணவர்களின் கல்விநலன்களைகவனித்து,அவர்களைவிடுவித்துக.பொ.தசாதாரணதரம் மற்றும் உயர்தரவகுப்புபரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைமேற்கொண்டதுஎன்பதும் குறிப்பிடத்தகுந்தது.
நிதியத்தின் 24 ஆவதுஆண்டுப்பொதுக்கூட்டமும் தகவல் அமர்வும் மெல்பனில்,
வேர்மன்ட் சவுத் சமூகஇல்லத்தில் எதிர்வரும் 19-10-2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்

Vermont South Community House – Karobran Drive,
Vermont South, Victoria 3133, Australi
மாணவர்களுக்குஉதவவிரும்பும் அன்பர்கள் கல்விநிதியத்தின் மின்னஞ்சலிலும்தொடர்புகொள்ளலாம்.
E.Mail: kalvi.nithiyam@yahoo.com Web: http://www.csefund.org

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: