Monthly Archives: ஜூன் 2013

மனைவி இருக்கிறாவா…? Is your wife at home?

முருகபூபதி இந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம். அன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்

பயணியின் பார்வையில் 20 முருகபூபதி கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன். திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Rumblings in the temple

By our community reporter Melbourne: In the April 2013 issue of the SAT we did a story ‘Immigration raid at temple in Carrum Downs…’ On Friday 5 April, 2013 immigration officials had visited the Sri Shiva Vishnu temple, Carrum Downs … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 28- இறுதி அத்தியாயம்

பத்து மில்லியன் டாலர் சொத்துக்கு உரிமையாளராகிய பின், இலண்டனில் ஒரு மிருக வைத்தியசாலையில் நியமனம் பெற்றுக்கொண்டு செல்லும்போது ‘எப்பொழுதாவது இங்கிலாந்துக்கு வந்தால் என்னைப் பார்’ எனச் சொல்லி விட்டுத் ஷரன் தனது இண்டனில் வதியும் சிறிய தாயாரின் விலாசம் கொண்ட காகிதத்தை மெல்பேன் விமான நிலயத்தில் வைத்து சுந்தரம்பிள்ளையிடம் கொடுத்தாள். எங்கோ கடலுக்கு அடியில் ஏற்பட்ட … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

அசோகனின் வைத்தியசாலை 27

சுந்தரம்பிள்ளை சிட்னியில் நடக்கவிருக்கும் எலும்பு முறிவு சம்பந்தமான கொன்பரன்ஸ்க்கு செல்வதற்கு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தான். பதினைந்து மிருக வைத்தியர்கள் வேலை செய்யும் வைத்தியசாலையில் ஒருவர், இருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் விடுமுறை கிடைக்கலாம். விண்ணப்பித்த போது விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டால் எதுவித நட்டமும் இல்லை என்ற அலட்சியமான மனநிலை விண்ணப்பிக்கும் போதிருந்தது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை 26

ஜோனின் பிரியாவிடை வைத்தியசாலையில் நடந்த சில மாதங்களின் பின் அவனது வீட்டுக்கு ஒரு காலை நேரத்தில் அவனது உடல் நலத்தை விசாரிப்போம் என நினைத்து சுந்தரம்பிள்ளை சாருலதாவுடன் சென்றான். ஈரலிப்பாக இருந்த காலைப்பொழுது பனிபுகாரின் போர்வையில் இருந்து வெளியேவரத் தாயின் வயிற்றி இருந்து வரத்துடிக்கும் குதிரைக் குட்டிபோல் திமிறியது. கண்ணுக்கெட்டியவரை டன்னினேங் மலையடிவாரத்தில் உள்ள அந்தப் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மக்கள் சேவையை கவனத்தில் கொள்ளாதஆயுததாரிகள்

பயணியின் பார்வையில் — 19 முருகபூபதி மகாத்மாகாந்தி நாதுரம்கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டபொழுதுமுன்னாள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேர்ட்டன்,தமதுஅஞ்சலிக்குறிப்பில் இவ்வாறுசொன்னார்: “தொடர்ச்சியாகபிரித்தானியவெள்ளையரசைஎதிர்த்துப்போராடியகாந்தியின் உயிருக்கு பிரித்தானியா பாதுகாப்பாக இருந்தது. ஆனால் அவர் எந்தத்தேசத்தின் விடுதலைக்காககுரல்கொடுத்தாரோஅந்தத்தேசத்தின் குடிமகன் ஒருவர்தான் அவரதுஉயிரைப்பறித்தார்.” வன்னிப்பிரதேசநிகழ்ச்சிகளைமுடித்துக்கொண்டு,கிளிநொச்சியிலிருந்துஒருகாலைவேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்தபொழுது,எமது இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் தோற்றம் வளர்ச்சிமற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகயோசித்துக்கொண்டு ஏ9 பாதையில் பயணித்தேன்.எனக்குநினைவுக்குவந்த மூன்றுதமிழ் அன்பர்கள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக