This was sent to me by a girl who was an LTTE fighter who lost both her legs. She was given away in marriage to a tiger doctor by Mathivathani.
This letter typifies the current attitude and the situation prevailing amongst remnants of LTTE
Sundar
முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில் பந்தாடப்படும் விடயம் ஈழம்.
இன்றைய முகபுத்தகத்தில் தமிழர்களை ஈழ ஆதரவு ரீதியில் இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று அதாவது ஈழம் பற்றி பதிவுகள் இட்டு ஈழபோராட்டம் பற்றிய சாதனைகளை பேசிகொண்டிருப்பது. இவர்கள் கண்டிப்பாக இலங்கை அரசின் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள். இவர்கள் தான் ஈழஆதரவாளர்கள். இவர்கள் தான் இங்கு பெரும்பான்மை.
இரண்டு, யதார்த்தவாதிகள் சாதனைகளை விடுத்து, விட்ட பிழைகள் என்ன, எதனால் நாங்கள் இந்த நிலையில் இப்போது இருக்கிறோம் எவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் அவற்றை திருத்தி கொண்டால் தான் மீண்டும் இதுபோன்ற நிலை எங்களுக்கு வரக்கூடாது என்பதுக்கான இதுபோன்ற உரையாடல் நடத்தும் சிறுபான்மை யதார்த்தவாதிகள். இவர்கள் முதல் பிரிவினரின் பார்வையில் துரோகிகள், அவர்களால் பந்தாடப்படும் அதன் விளைவால் அமைதி காக்கவும் முடிவெடுத்தவர்களும் இதில் அடங்கும்…
ஈழத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரம் வசதி செல்வாக்கு படைத்தவர்கள், வெளிநாடு போகும் வழி தெரிந்தவர்கள் எல்லோரும் அன்று ஈழத்தில் நண்பர்கள் உறவினர்களை போராட விட்டுவிட்டு சுயநலம் கொண்டு தன்னுயிர் காக்க சென்று விட்டார்கள். எங்கள் ஒற்றுமையின்மை இங்குதான் ஆரம்பிக்கின்றது. ஈழ போராட்டத்துக்கு முதல் துரோகமும் இங்கு தான் ஆரம்பிக்கின்றது இவர்களை தவிர்த்து எஞ்சியவர்களினால் உலகமே திரும்பி பார்க்குமளவுக்கு போராட்டம் வளர்க்கபட்டது . இந்த முதல் துரோகத்தை ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழர்களும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் ஆனால் இவர்களில் சிலர் சொல்கிறார்கள் பணம் கொடுத்ததால் தான் போராட்டம் வளர்ந்ததென்பதால் இவர்களும் மாவீரர்கள் போல் சமமாக பேசுகிறார்கள். இப்படி பேசுவது சரியல்ல மாவீரர்களின் , போராளிகளின் தியாகங்களை பணதுடன் ஒப்பிட்டு கொச்சை படுத்துவது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கின்றதல்லவா?. விட்ட பிழைகளை நாங்கள் உணராதவரை நாளை சரியான பாதையை அமைத்து விட முடியாது. எங்களுக்காக போராடி இன்று (இறந்த பெண்ணின் உடையை கிழித்து இச்சையை தீர்துகொள்ளும்) இராணுவத்திடம் பிடிபட்டு அங்கங்களை இழந்தவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என எதோ ஒரு வழியில் எஞ்சியவர்கள் இன்று பரிதாபத்துக்கு உரியவர்களாக இருக்கின்றார்கள். இதில் சில பெண்கள் விபச்சாரம் செய்வதாகவும், சிலர் பிச்சை எடுப்பதாகவும்இ சிலர் இவை முடியாமல் தற்கொலை செய்ததாகவும் நாங்கள் தினம் தினம் அறிகின்றோம் அல்லவா?.
இருந்தும் பயன் இல்லை. இப்படி ஒரு சுயநல இனத்துக்காக போராடியது மிக பெரிய தவறென்று இன்று பலர் தங்கள் வாயால் சொல்ல முன் வந்திருகுமளவுக்கு எங்கள் செயல் அவர்கள் மனதை புண்படுத்தி இருக்கின்றது. இதில் சிலர் எஞ்சி வந்தவர்களை சந்தேக கண்ணோடு பார்கிறார்கள் இவர்கள் எப்படி உயிருடன் தப்பி வந்தார்கள் ஒரு வேளை மற்றவர்களை காட்டி கொடுத்து தப்பி வந்திருப்பார்களோ என சிந்திச்சு இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். போராட்டமும் போராளிகளும் இப்படி தமிழர்கள் மத்தியில் நடை முறையில் இருக்க………… முக புத்தகத்தில் ??????????
இப்போதும் ஈழத்தில் இருக்கும் தமிழனுக்கும் புலம்பெயர்ந்து சென்ற தமிழனுக்கும் வாதம் நடக்கின்றது , இதில் ஈழத்தில் இருக்கும் நண்பன் தனது உண்மை முகம் பெயர் மறைத்து அரசியல் பேசுகிறான் பாதுகாப்புக்காக ஆனால். ஈழத்தில் இருக்கும் நண்பனிடம் புலம் பெயர்ந்த நண்பன் கேட்கின்றான் உன் உண்மையான பெயர்,படம் போட்டு வாதிடலாமே இவ்வளவு பயமா உனக்கு புலிகள் பிறந்த மண்ணில் தானே நீயும் பிறந்தாய் எங்கிருந்து வந்தது உனக்கு பயம். நீ வீரனா? உண்மை தமிழனா? நீ ஒரு கோழை….இப்படியாக பலர் அந்த குழுவில் சேர்ந்து சிறிது தயக்கம் கூட இன்றி கேட்கிறார்கள் அன்று எதுக்காக அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள் என்பதை மறந்து…..
ஈழத்தில் உள்ள மக்கள் எவற்றை எல்லாம் இழக்ககூடாதோ அவற்றை எல்லாம் இழந்துவிட்டார்கள் இவர்கள் இழப்பை புலம்பெயர்ந்து இருப்பவர்கள் குடியுரிமையாக்கி கொண்டார்கள்.
இன்று இறுதி யுத்தத்தில் கைகள்,கால்கள், சகோதரர்கள்,பெற்றவர்கள்இ பிள்ளைகள், உறவுகள்இ சொத்து,நிலம், வீடு என எல்லாவற்றையும் இழந்து எப்படியான நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்? இவர்கள் மனநிலை எப்படி இருக்கும். இது பற்றி யாருக்கு என்ன கவலை? அடுத்த யுத்தம் எப்போது வெடிக்கும்? இதுதான் அவர்களின் இப்போதைய கவலை. அப்படி ஒரு யுத்தம் ஈழத்தில் வெடிக்கனும் என ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
எதுக்காக போராடவா??????
குளிர்காயவா??????????
அண்மையில் ஒரு குழுவில் ஒருவர் பதிவொன்றை இட்டார். இந்த செய்தி போலியானதும் கூட ஈழத்தில் எங்கோ காட்டு பகுதியில் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்பது போல அந்த பதிவின் பின்னூட்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொட்டிய வார்த்தைகளை தாங்க முடியவில்லை உண்மையா, உண்மையா அப்படி ஒரு சந்தோசம்.. ஆனால் அதில் யாரும் சிந்தித்து பார்த்தது போலவே தெரியவில்லை இது சாத்தியமா? இப்போது ஈழ மக்கள் இருக்கும் மனநிலையில் எப்படி இது சாத்தியமாகும் புலம்பெயர்ந்த தமிழர்களா சென்று போராட போகிறார்கள் அது எந்தளவுக்கு சாத்தியம்??? இப்போது ஈழத்தில் குற்றுயிராக இருக்கும் மக்கள் மத்தியில் இன்னொரு போராட்டம் வெடித்தால் அந்த மக்கள் நிலை என்ன? சிந்திக்க யாரும் இல்லை…இப்படியாக நாங்கள் செய்த சாதனைகள் வெற்றிகள் இது பற்றி பேசி பேசியே காலத்தை விரயமாக்குவதோடு
இதுதான் வீரம் இதுதான் நாட்டு பற்று என்பதுபோல குழு அமைத்து பேசிபேசியே காலம் கடத்தி மனதை சமாதனபடுத்தி சந்தோசம் காண்பதில் என்ன லாபம்?
இன்றைய தமிழனின் மனநிலை தான்,தனது குடும்பம் பாதுகாப்போடு இருக்கவேண்டும் ஆனால் அடுத்தவன் போராடி ஈழம் மலரவேண்டும்…. !!!
இப்படியான மனநிலைகளை நீங்கள் இன்றைய முகபுத்தகத்தில் பரவலாக காணலாம். என்னால் வெற்றி பெறமுடியவில்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும் நான் என்னென்ன பிழைகள் செய்தேன் எதனால் நான் தோற்றுபோனேன் என்பதை அராய்ந்து பிழைகளை திருத்தி கொண்டால் தானே நான் வெற்றி பெற முடியும் அதை விடுத்து நான் செய்த சில சாதனைகள்இ வெற்றிகளை திரும்ப திரும்ப நினைத்து பேசி பெருமிதமடைந்துகொண்டிருந்தால் என் தோல்வி வெற்றியடையுமா? பிழைகளை பற்றி நான் நினைப்பது தவறுகளை பேசி விவாதித்து கேள்விகள் கேட்டு தெளிவது துரோகமென நான் நினைத்தால் வெற்றி சாத்தியமா? இதுதான் இன்றைய முகபுத்தகத்தில் ஈழ அரசியல், மறுவாழ்வளிக்க பட்ட புலிகள் நடு வீதியில் அநாதரவாக இருக்க வாழ வழி இன்றி நலிந்து நிற்க பழைய புலிகளின் புகழ் பாடிகொண்டே இருக்கின்றார்கள் சிலர் இதன் பயன் என்ன என கேட்பவன் துரோகி. இங்கு ஈழமும் இவர்களால் போலிமுகம் கொண்டு நிஜமென நம்ப நடிக்கின்றது ……..
இனி இதுதான் ஈழ போராட்டமோ?
…………………
………………………………………………………………………………
தாயகம் மீட்டிட உரிமையை காத்திட
பெரும் கடமை கொண்டவர்
சுயநல செல்வாக்கு வசதியால்
தன்னுயிர் காத்திட புலம் விட்டு ஓடினர்
இவர்கள் அன்றைய துரோகிகளாகினர்
தொடங்கிய யுத்தத்தை முடித்திட எண்ணி
பூக்களும் ஆயுதம் ஏந்தின
ஈழகவிஞரோ ஓடியவர் தனை
கோழையென வசை பாடியே
எஞ்சியவர் மூளையை சலவை செய்தனர்
இறுதியில் அரும்புகள் கைகளிலும்
உயிர்கொல்லி ஆயுதம் திணித்தது
பணங்களை அள்ளி வீசியே
வன்னியில் இருந்தவர் யுத்தம் வளர்த்தனர்
யுத்தத் தீயினை காரணம் சொல்லியே
குடியுரிமை பெற்று குளிர் காய்ந்தனர் பலர்
பொருளாதார அரசியல் மலிந்த உலகினில்
பல நாடுகள் துணையுடன் ஈழத்தை அழித்திட
போர் என்ற பெயரில் பெரும் சூழ்ச்சி நடந்தது
ஆணிவேரற ஈழ மரமும் சாய்ந்தது அதில்
விதைகள் விழுதுகளென எண்ணி
அரும்புகள் முதல் சருகுகள் வரை
ஆயிரமாயிரம் சனம் துடிதுடித்தழித்தனர்
எஞ்சிய குற்றுயிர் உறவுகளில்
அங்கங்கள் இழந்தவரில் ஆயிரம் பிஞ்சுகள்
இப்படியானது ஈழவரலாறு
இருந்தும்
இன்னொரு போர் மூண்டிடாதா என
ஓநாய்கள் அழுகின்றது எஞ்சிய மக்களையும்
கொண்றிட சந்தர்ப்பவாதிகள் சூழ்சிகள் தொடருது
நாடு கடந்து நின்றே வீரம் பேசி நிக்குது
காசு கொடுத்தது வீரம் என பேசி நிக்குது
இவர்கள் இன்றைய வீரர்கள்
மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள்
வாழ்க்கை வீதியில் நிக்குது
எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என
எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே
பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில்
இவர்களை ஒதுக்கியே வைக்குது
அன்றைய போராளிகள்
இன்றைய துரோகிகள் என்கிறது
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா…..!!!
மறுமொழியொன்றை இடுங்கள்