மக்கள் சேவையை கவனத்தில் கொள்ளாதஆயுததாரிகள்

xபயணியின் பார்வையில் — 19

முருகபூபதி

மகாத்மாகாந்தி நாதுரம்கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டபொழுதுமுன்னாள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேர்ட்டன்,தமதுஅஞ்சலிக்குறிப்பில் இவ்வாறுசொன்னார்:

“தொடர்ச்சியாகபிரித்தானியவெள்ளையரசைஎதிர்த்துப்போராடியகாந்தியின் உயிருக்கு பிரித்தானியா பாதுகாப்பாக இருந்தது. ஆனால் அவர் எந்தத்தேசத்தின் விடுதலைக்காககுரல்கொடுத்தாரோஅந்தத்தேசத்தின் குடிமகன் ஒருவர்தான் அவரதுஉயிரைப்பறித்தார்.”

yவன்னிப்பிரதேசநிகழ்ச்சிகளைமுடித்துக்கொண்டு,கிளிநொச்சியிலிருந்துஒருகாலைவேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச்சென்றுகொண்டிருந்தபொழுது,எமது இலங்கைமாணவர் கல்விநிதியத்தின் தோற்றம் வளர்ச்சிமற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகயோசித்துக்கொண்டு ஏ9 பாதையில் பயணித்தேன்.எனக்குநினைவுக்குவந்த மூன்றுதமிழ் அன்பர்கள் எமதுநிதியத்திற்குஆதர்சமாகவும் பக்கத்துணையாகவும் விளங்கினார்கள். அவர்களைப்பற்றியும் பதிவுசெய்யவேண்டியதுகாலத்தின் தேவை.

மவுண்ட்பேர்டனின் குறிப்பை இங்குஏன் தெரிவித்தேன் என்பதை இந்தப்பத்தியைவாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

இலங்கைமாணவர் கல்விநிதியம் அவுஸ்திரேலியாவில் தோற்றம் பெற்றகாலத்தில் யாழ்ப்பாணத்தில் காணாமல்போனவர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழக ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி. அவரைகடத்தியவர்கள் மனிதாபிமானஅடிப்படையில் விடுவிக்கவேண்டும் என்றகுரல் பலதிக்கிலிருந்தும் ஒலித்தது. அவுஸ்திரேலியாவில் விக்ரோரியாமாநில இலங்கைத்தமிழ்ச்சங்கமும் கூட்டம் நடத்திகோரிக்கைவிடுத்தது.
இந்தக்கூட்டமும் நிர்ப்பந்தங்களினால்தான் நடத்தப்பட்டது. அச்சமயம் சங்கத்தின் தலைவராக இருந்தசோமசுந்தரம், இங்குவதியும் சட்டத்தரணிரவீந்திரன்,சிவநாதன்,மருத்துவர் பொன். சத்தியநாதன் ஆகியோரின் வலியுறுத்தல்களினால் மெல்பனில் வை.டபிள்யூ.சி.ஏ. மண்டபத்தில் கூட்டத்தைஒழுங்குசெய்தார்.

அதனைக்கண்டனக்கூட்டம் என்றுசொல்லிக்கொள்ளதலைவர் விரும்பவில்லை. கந்தசாமியைவிடுவிக்குமாறுகோரிக்கைவிடுக்கும் கூட்டமாகவேதலைவர் சோமசுந்தரம் நடத்தவிரும்பியமைக்குபுலிகளின் அழுத்தமேகாரணம். அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகசிட்னியிலிருந்துகணக்காளர் எஸ்.துரைசிங்கமும் டொக்டர் நடேசனும் வருகைதந்து உரையாற்றினர்.பின்னர் சிட்னியில் துரைசிங்கம் ஒருகண்டனக்கூட்டத்தைநடத்தினார். அதில் டொக்டர் பிரையன் செனவிரத்தின,மற்றும் டொக்டர் இராசநாயகம் சட்டத்தரணிரவீந்திரன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன். சிட்னிக்கூட்டம் நடந்தஅதேநாளில் சிட்னிதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் அன்ரன் பாலசிங்கம் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றையும் பிறிதோர் இடத்தில் நடத்தினர்.
கந்தசாமியைகடத்தியதுயார் என்றவிபரம் புலிகளுக்கும் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் நன்குதெரியும். நாம் கந்தசாமிக்காக கூட்டங்கள் நடத்துவதைபுலிகளின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை. எனினும் மெல்பனிலும் சிட்னியிலும் கூட்டங்கள் மண்டபம் நிறைந்தமக்களுடன் நடந்தேறியது.

இந்தக்கூட்டங்களில் கடத்தப்பட்டுகாணாமல்போனகந்தசாமியின் சகோதரரும் கலந்துகொண்டுஉரையாற்றினார்.

இதுநாள்வரையில் கந்தசாமிமாத்திரமல்லஅவரைப்போன்றுதமிழர் நலன்கருதி அளப்பரியதொண்டாற்றியபலர் இயக்கங்களினால் கடத்தப்பட்டுமறைந்துவிட்டார்கள்.
அமரர் கந்தசாமிஅவர்களினால் எமது கல்வி நிதியத்திற்கு மிகப்பெரிய ஆதரவுகிட்டியது. அவரதுதமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்ததையடுத்து சிட்னிதமிழர் மனிதஉரிமைக்கழகத்தின் சேமிப்பிலிருந்த 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் டொலர்கள் எமது இலங்கைமாணவர் கல்விநிதியத்திற்குகிடைத்தது. எமதுநிதியம் குறிப்பிட்டதொகையுடன் மேலும் ஐந்தாயிரம் அவுஸ்திரேலியன் டொலர்களையும் சேர்த்துமொத்தம் 30 ஆயிரம் வெள்ளிகளைவங்கியில் நிரந்தரவைப்பிலிட்டு அதிலிருந்துகிடைக்கும் வட்டிப்பணத்தைநிதியத்தின் நிருவாகச்செலவுக்கு எடுத்துவருகிறது.
இந்தநிதியைஎமக்குவழங்கியசிட்னிதமிழர் மனிதஉரிமைக்கழகஅமைப்பினைச்சேர்ந்தஅன்பர்கள் துரைசிங்கம் அவர்களுக்குவழங்கியவாக்குறுதிக்குஅமைய இன்றுவரையில் குறிப்பிட்டதொகைவங்கியில் நிரந்தரவைப்பிலிருக்கிறது.

எமதுகல்விநிதியத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டங்களில் அமரர் கந்தசாமியினதும் அமரர் இராசநாயகத்தினதும் படங்கள் உறுப்பினர்களின் அஞ்சலிக்காக தொடர்ந்து வைக்கப்படுகிறது.
கல்விநிதியம் ஆரம்பிக்கப்பட்டதும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கண்காணிப்பாளர்களாகஎழுத்தாளர்களும் ஆசிரியர்களுமானதெணியான்,கோகிலாமகேந்திரன் ஆகியோர். இயங்கினார்கள். திருகோணமலைமாவட்டத்தில் பல்மருத்துவர் ஞானசேகரன் இயங்கினார்.

கிழக்கில் சுனாமிகடற்கோள் அநர்த்தம் நேர்ந்தபொழுதுபாதிக்கப்பட்ட இடங்களைபார்க்கச்சென்றேன். அச்சமயம் கிழக்குபல்கலைக்கழகதுணைவேந்தராகபணியாற்றியபேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களின் வேண்டுகோளைஏற்றுசுனாமியினால் பெரிதும் பாதிக்கப்பட்டபலகிழக்குபல்கலைக்கழகமாணவர்களுக்கும் நிதியம் உதவமுன்வந்தது. துணைவேந்தர் நிதியம் ஊடாகதொடர்ந்துஉதவினோம்.

இலங்கை – .இந்தியஒப்பந்தத்தையடுத்துநடந்தவடக்கு- கிழக்குமாகாணசபைத்தேர்தலைபுலிகள் புறக்கணித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் தேர்தலில் வென்றது. அதனால் வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார்.
தமிழினத்திற்குவிடிவுவந்துவிட்டது எனநம்பினோம்.
புலிகள்,எதிரிக்குஎதிரிநண்பன் என்றவாக்கைநிரூபிக்கும் விதமாகபிரேமதாஸவிடம் சென்றார்கள்.
வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்தவேளையில் திருகோணமலையில் எங்கள் நிதியத்தின் திருகோணமலைக்கண்காணிப்பாளர் பல்மருத்துவர் ஞானசேகரன் கடத்தப்பட்டுகாணாமல்போனார்.

வீரகேசரியில் பணியாற்றியகாலம் தொடக்கம் ஞானசேகரனைஎனக்குநன்குதெரியும். மிகவும் எளிமையானவர். ஒருபிரம்மச்சாரி. மருத்துவராக இருந்தபோதிலும் காலிலேரப்பர் சிலிப்பர்கள் அணிந்துநடமாடியவாறுபாதிக்கப்பட்;ட மக்களுக்குசேவையாற்றியவர். திருகோணமலையில் நடந்த இராணுவத்தாக்குதல் சம்பவம் ஒன்றில் படுகாயம் அடைந்தஒருதமிழ்ச்சிறுமியின் படத்தைவீரகேசரியில் வெளியிடச்செய்துஅச்சிறுமிக்கு சிலவெளிநாட்டுதூதரகங்கள் ஊடாகஉதவிபெற்றுக்கொடுத்தவர்.

திருகோணமலையில் நடந்தமனிதஉரிமைமீறல் சம்பவங்களைவெளியுலகிற்குகாண்பிப்பதில் முன்னின்று உழைத்தவர்.

திருகோணமலைமாவட்டத்தில் போரில் பாதிக்கப்பட்டமாணவர்களுக்காக நாம் அனுப்பியவங்கிக்காசோலையைஅவர் வங்கியில் வைப்பிலிட்டிருக்கிறார். அதன் பிறகுஅவரைக்காணவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கவேண்டும் என்றுநம்பகமாகத்தெரிந்தது. உடனடியாகநான் வீரகேசரிக்குதொடர்புகொண்டுதொலைபேசி இலக்கம் பெற்றுமுதலiமைச்சர் வரதராஜப்பெருமாளுடையஅலுவலகத்திற்குதொடர்புகொண்டேன். அப்பொழுதுஎன்னுடன் இருந்தவர் பல்மருத்துவரின் நீண்டகாலநண்பர் தற்பொழுதுஅவுஸ்திரேலியாகன்பராவில் வதியும் பல்மருத்துவர் ரவீந்திரராஜா.முதல்வருடன் பேச இயலவில்லை. அவர் அலுவலகத்தில் இல்லை என்றதகவல் கிடைத்தது.பின்னர் முதல்வருக்குஒருகடிதம் அனுப்பினேன்.
இன்றுவரையில்ஞானிஎன்றுஎம்மால்அன்போடுஅழைக்கப்பட்டஞானசேகரனைகாணமுடியவில்லை அதுபோன்றுகிழக்குபல்கலைக்கழகதுணைவேந்தர் ரவீந்திரநாத் பணியிலிருந்தகாலத்திலேயேகடத்தப்பட்டுகாணாமல்போனார்.
அப்பொழுதுகிழக்குகருணாமற்றும் பிள்ளையான் என்றசந்திரகாந்தன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

எமதுகல்விநிதியம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடகாலத்தில் நாம் இழந்துநிற்கும் மூவர்: கே.கந்தசாமி,ஞானசேகரன்,ரவீந்திரநாத். இவர்கள் மூவரும் தமிழ்மக்களின் நலன்களுக்காகவாழ்ந்தவர்கள். தங்களின் கல்விப்புலமைகளையும் தொழில்சார் அனுபவங்களையும்ஆதாரமாகக்கொண்டுஅந்நியநாடுகளுக்குபுலம்பெயர்ந்துசென்றுசுகமாகவாழ்ந்திருக்கமுடியும்.ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டமக்கள் பக்கமே நின்றார்கள். எந்தத் தமிழ் மக்களின் நலன்களுக்காகஅவர்கள் வாழ்ந்தார்களோ,அந்தத்தமிழ் மக்களின் விடுதலைக்காகஆயுதம் தரித்த இயக்கங்களினாலேயே கடத்தப்பட்டு காணாமல்போனார்கள்.
அவர்கள்சிங்களபேரினவாதிகளினாலோசிங்களஆயுதப்படையினராலோ கடத்தப்படவில்லை. கொல்லப்படவில்லை.

மகாத்மாகாந்திகொல்லப்பட்டபோதுமவுண்ட்பேர்ட்டன் சொன்னவார்த்தைகள்தான் எனதுநினைவுக்குவருகிறது.

1987 இற்குப்பின்னர்,யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளுக்குநாள் காணாமல் போகின்றவர்களின் எண்ணிக்கைஅதிகரித்தது. அதனால் எமதுகல்விநிதியத்தின் பணிகளும் அதிகரித்தது. வடமராட்சிப்பிரதேசத்திலும் வலிகாமம் பிரதேசத்திலும் எமதுநிதியுதவியைபெற்றுக்கொண்டிருந்தமாணவர்களைகண்காணித்துக்கொண்டிருந்தஎழுத்தாளர்கள் தெணியான் மற்றும் கோகிலாமகேந்திரன் ஆகியோரினால் ஒருநிறுவனமாகசெயற்படுவதற்குஏற்ற சூழல் இல்லாதமையினால் நாம் மாற்றுயோசனைக்குவந்தோம். அப்பொழுதுஎமதுநிதியத்தின் தலைவராக இருந்தவர் சட்டத்தரணிதிருமதிநிவேதனாஅச்சுதன். அவர் யாழ். மாவட்டஎம்.பி.யாகமுன்னர் தெரிவுசெய்யப்பட்டபிரபலசட்டத்தரணிஎன்.ஸ்ரீகாந்தாவின் புதல்வி.
கொழும்புசட்டக்கல்லூரியில் குமாரசாமிவிநோதன், அஷ்ரப் ஆகியோருடன் ஸ்ரீகாந்தாசட்டம்பயிலும் காலத்திலேயேநன்கறிவேன்.

‘பூரணி’ காலாண்டிதழ் அறிமுகஅரங்கு1972 இல் சட்டக்கல்லூரிதமிழ் மன்றத்தில் நடந்தபோதுவிநோதன் அதற்குதலைமைதாங்கினார். அந்தக்கூட்டத்தில் அவர்கள் மூவரையும் சந்தித்துஉரையாடியிருக்கிறேன். பின்னாளில் இவர்கள் மூவரும் சட்டத்தரணிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் மக்களிடம் பிரசித்தம் அடைந்தனர்.

யாழ்.மாவட்டத்தில் இயங்கியசிறுவர் அபிவிருத்திநிலையத்தைசட்டத்தரணி ஸ்ரீகாந்தா,தமதுபுதல்விநிவேதனாஊடாகஎமக்குஅறிமுகப்படுத்தினார். அந்தஅமைப்பின் தலைவர் யாழ்.மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம். இவரும் எனக்குநன்குஅறிமுகமானவரே. 1986 இறுதியில் எமது இலங்கைமுற்போக்குஎழுத்தாளர் சங்கம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடத்தியமாநாட்டின்பொழுதுஎமக்குபக்கபலமாக இருந்தகலை, இலக்கியரசிகர்.கடந்தசிலஆண்டுகளாகயாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்திநிலையம் ஊடாகவேயாழ். குடாநாட்டில் போரில் பாதிக்கப்பட்டநூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு எமதுகல்விநிதியம் உதவிவருகிறது.

கடந்தசிலவருடங்களில் கொக்குவில் இந்துக்கல்லூரிமண்டபத்திலும் நல்லூர் நாவலர் மண்டபத்திலும் நாம் எமதுமாணவர்களைசந்தித்துஒன்றுகூடல்களையும் நடத்திநிதிக்கொடுப்பனவுகளையும் வழங்கிவருகின்றோம்.

சிறுவர் அபிவிருத்திநிலையத்தின் பணிமனைசுண்டுக்குளிபழையபூங்காவீதியில் அமைந்துள்ளது.
இம்முறைபயணத்தின்பொழுதும் குறிப்பிட்டபணிமனையில் அலுவலர்களுடனும்,கொக்குவில் இந்துக்கல்லூரியில் மாணவர்களுடனும் எனதுபொழுதுகளைசெலவிட்டேன். இந்நிகழ்ச்சிகளைஒழுங்கமைப்புச்செயலாளர் பால.தயானந்தன் ஏற்பாடுசெய்திருந்தார்.
கொக்குவில் இந்துக்கல்லூரிமாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் வரவேற்புரையைநிதியத்தின் உதவிபெறும் யாழ். பல்கலைக்கழகமாணவிசெல்விநிருத்திகாமிகவும் உருக்கமாகநிகழ்த்தினார். பெற்றவர்களை இழந்துள்ள இம்மாணவி எவ்வாறு தனதுகற்றலை தொடர்ந்தார், எவ்வாறுபல்கலைக்கழகத்திலும் நீடிக்கிறார் என்பதைவிபரித்தபொழுதுஅங்கிருந்தபலரின் கண்கள் கலங்கின. போரினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்குஅந்தமாணவிஒருமுன்னுதாரணம். தன்னம்பிக்கை,சுயஆற்றல் என்பனவேஅவரது மூலதனம். எமதுஉதவிபக்கத்துணைமாத்திரமே.
இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழகதகைமைசார் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன்,யாழ். சிறுவர் நலவுரிமைமுன்னேற்றநிறுவனத்தின் பிரதேசசெயலகஅலுவலர் எம். பத்மராஜா ஆகியோரும் உதவிபெறும் மாணவர்கள் சிலரும் உரையாற்றினர். சிலமாணவிகள் பாடினார்கள். ஆடினார்கள். அந்தஒன்றுகூடல் குதூகலமாகவேஅமைந்தது. குறிப்பிட்டநூற்றுக்கணக்கானமாணவர்கள் யாழ். குடாநாட்டில் பலபிரதேசங்களிலும் இருந்துதமதுதாய்மாருடன் வருகைதந்திருந்தமையால் அவர்களுக்கானமதியபோசனவிருந்தும் வழங்கினோம்.

வெவ்வேறுபிரதேசங்களிலிருந்துவருகைதந்திருந்தமாணவர்கள் பரஸ்பரம் உரையாடவும் அவர்களின் தாய்மார் சுகநலன் விசாரித்துதோழிகளாகிக்கொள்வதற்கும் அந்தஒன்றுகூடல் வழிவகுத்தது.

அவர்களிடமிருந்துவிடைபெறும்பொழுது,சிலமாணவர்கள் அருகேவந்து,“ இனிஎப்போதுசேர் வருவீங்க…அடுத்ததடவை வரும் பொழுதுஎமதுமுகம் தெரியாமலேயேஉதவுகின்றஅன்பர்களையும்அழைத்துவாருங்கள்”என்றுசொன்னபோதுபொங்கிவந்த விம்மலைகட்டுப்படுத்திக்கொண்டேன்

யாழ்.மாவட்டபயணத்தைநிறைவுசெய்துகொண்டு,கிழக்கிற்குபுறப்பட்டேன்.
(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: