காலத்தால் மறையாத கோகிலாம்பாள்.

picture 17
பயணியின் பார்வையில் 17முருகபூபதி

பலஆண்டுகளுக்குமுன்னர் வெளியான சிவாஜிகணேசன் நடித்த தூக்குத்தூக்கிபடத்தில் வரும் வசனம் கொண்டுவந்தால் தந்தை,கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர்கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி,உயிர்காப்பான் தோழன்.

எல்லாம் சரி அது என்ன கொலையும்செய்வாள் பத்தினி ? என்றுஅம்மாவிடம் கேட்டேன். மனைவிகொலைசெய்வாளா?

ம்மாஅதற்குபதில்சொல்லாமல் வீரகேசரிபத்திரிகையில் ஒருசெய்தியை காண்பித்தார்.
அப்பொழுதுஎனக்கு12 வயதிருக்கும். நான் பத்திரிகைகளும் கல்கியும் படிக்கத்தொடங்கியகாலம். அன்றுநான் படித்தசெய்திநடந்த இடத்தைப்பார்ப்பதற்குசுமார் ஐம்பதுவருடங்கள் காத்திருந்தேன்.

உருத்திரபுரம்என்றவுடன் எங்கள் ஈழத்துதமிழ்சமூகத்தின் மூத்ததலைமுறையினருக்குஉடனடியாகஞாபகத்திற்குவருவதுஉருத்திரபுரம் கோகிலாம்பாள்தான்.
அந்தக்கொலைச்சம்பவம் நடந்துஅரைநூற்றாண்டுகாலமாகிவிட்டது. ஆனாலும் கோகிலாம்பாள் இன்றும் பேசப்படுகிறாள். எழுதப்படுகிறாள்.

அவுஸ்திரேலியாவில் மேடையேறியநண்பர் மாவைநித்தியானந்தனின் கொழும்புமெயில் இசைநிகழ்ச்சியிலும் கோகிலாம்பாள் ஒருபேசுபொருள்.
காங்கேசன்துறையிலிருந்துகொழும்புநோக்கிபுறப்படும் இரவுநேரதபால் ரயில் பயணம் சுவாரஸ்யமானது.அனுபவித்தவர்களுக்குப்புரியும். பயணிகள் பலதும் பத்தும் பேசிசிரித்துகும்மாளமிட்டுவருவார்கள். ஊர்வம்புபேசுவார்கள்.முதியவர்கள் கோகிலாம்பாள் சம்பந்தப்பட்டஅந்தக்கொலைச்சம்பவம் பற்றிவிஸ்தாரமாககலந்துரையாடுவார்கள். அந்தக்காட்சியும் குறிப்பிட்டகொழும்புமெயில் இசைநிகழ்ச்சியில் சொல்லப்படும்.எல்லாம்அநுராதபுரம் வரையில்தான். உரையாடிமுடிக்கும்போதுகொட்டாவிவரும். ஆசனங்களில் காலைநீட்டிநிமிர்த்திஉறங்கிவருவார்கள்.
அநுராதபுரத்தில் ஏறும் சிங்களப்பயணிகள் “நெகிட்டனவா..நெகிட்டனவா”என்றுதட்டி எழுப்பிஅமருவார்கள். தங்கள் ஆழ்ந்தஉறக்கத்தைகளைத்துவிட்டார்களே இந்தபெரும்பான்மை இனத்தவர் என்றுதமிழர்கள் மனதுக்குள் கறுவிக்கொள்வார்கள்.

இந்தப்பயணஅனுபவம் பெற்றிருந்தஎங்கள் சிரித்திரன் இதழ் ஆசிரியர் சிவஞானசுந்தரம் ஒருசமயம் மகுடிகேள்விபதிலில் இவ்வாறுஎழுதியிருந்தார்.

கேள்வி: தமிழர்களைதட்டிஎழுப்பியபெரியோர் யார்?
பதில்: அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச்சகோதரர்கள்.
2011 இல் வெளிவந்தவீரகேசரிஆசிரியபீடத்தைச்சேர்ந்ததிருமதிஅன்னலட்சுமி இராஜதுரைஎழுதியுள்ளநினைவுப்பெருவெளிஎன்றநூலிலும் பிரான்ஸில் வதியும் புஷ்பராணி 2012 இல் எழுதியுள்ளஅகாலம்நூலிலும் அந்தக்கோகிலாம்பாள் இடம்பெறுகிறாள். மீண்டும் 2013 இல் எனது இந்தப்பதிவிலும் இடம்பெறுகிறாள்.

ஏன்…?அவள் ஒருபெண் என்பதனாலா? அல்லதுஅவள் சம்பந்தப்பட்டகொலைச்சம்பவம் பாலியல் தொடர்புடையதுஎன்பதனாலா? இல்லை…ஒருமர்மநாவலுக்குரிய சூட்சுமங்கள் அதில் விரவிக்கிடப்பதனாலா? அவள் ஒருபிராமண ஆஸ்திகசமூகத்திலிருந்துவந்தபெண் என்பதனாலா? பதிலைஎப்படியும் தேடிக்கொள்ளமுடியும்.
கோகிலாம்பாள் ஆயுள்தண்டனைபெற்றுநன்னடத்தையினால் விடுதலையாகிநெடுந்தீவுதிரும்பிசிலவருடங்களுக்குமுன்னர் காலமாகிவிட்டாள். அவளது கதையைதிரைப்படமாக்குவதற்காகவும் சிலர் அவளைத்தொடர்புகொண்டதாகஅறியக்கிடைத்தது.

உருத்திரபுரம் பிள்ளையார் கோயிலுக்குச்சென்றேன். அங்கிருந்தஐயரிடம் என்னுடன் வந்தஒருவர் கேட்கிறார். அந்தஅம்மாயாரைப்போல இருப்பார்கள்?
கேட்பவர் அந்தக்கொலை நடந்தகாலத்தில் இந்தஉலகத்தில் பிறக்காதவர்.
ஐயர் சொல்கிறார்: கமல்ஹாஸன் நடித்தஅவ்வைசண்முகிபடம் பார்த்தீர்களா? அதில் கமல் பெண்வேடம் தரிப்பார். அந்த அழகியதோற்றம் உள்ளவர்தான் கோகிலாம்பாள்.
அந்தக்கோயிலையும் சுற்றுப்புரத்தில் பசுமையாகவளர்ந்திருக்கும் செடி,கொடி,மரங்களையும் புற்தரைகளையும் பார்க்கின்றேன். அருகேஒருசிறியவீடு. அதுதான் கோகிலாம்பாளும் ஐயரும் வசித்தவீடுஎன்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளமுடியாதுதான்.

மின்சாரவசதி இல்லாதஒருகாலத்தில் அந்தஉருத்திரபுரம் கிராமத்தில் ஆலயவளவில் நடந்தஅந்தச்சம்பவம் உலகத்திற்குதெரியவந்தபோதுபத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டுசுடச்சுடவழக்குசம்பந்தப்பட்டசெய்திகளைவெளியிட்டன. யாழ்ப்பாணத்தில் ஈழநாடுபத்திரிகையின் விற்பனைபெருகியது. கொழும்பில் வீரகேசரிஅலுவலகம் அந்தச்செய்திகளுக்காகநேரத்தையும் பக்கத்தையும் ஒதுக்கியது.
என்னதான் நடந்தது?

கோயில் ஐயரின் போக்குவரத்து தேவைகளுக்காகவந்துபோன ஒருகார்ச்சாரதிவேலுப்பிள்ளை. எப்படியோஐயரின் மனைவிகோகிலாம்பளின் அழகில் மயங்கிவிட்டான். காதல்வசப்பட்டான்.
இந்திரன் கெட்டான் பெண்ணாலே…சந்திரன் கெட்டான் பெண்ணாலேஎன்றுஎவர் அவனுக்குஅப்போதுசொல்லியிருந்தாலும் காமம் கண்களைமறைத்துவிட்டிருக்கவேண்டும்.
கொல்லப்பட்டஐயர்,எருக்கும்பத்துக்குள் புதையுண்டார்.

தீவுப்பகுதியிலிருந்துமகனைப்பார்க்கவந்ததந்தையாரிடம் அதாவதுமாமனாரிடம் கோகிலாம்பாள் “அவர் வெளியூர் போயிருப்பதாக”பொய்சொல்கிறாள்.
அவரும் மகனைக்காணாதுதவிக்கிறார்.

இந்நிலையில்ஒருநாள் கோகிலாம்பாளின் பெண்குழந்தை குழப்படிசெய்யதாய் அடித்துவிடுகிறாள்.
குழந்தை“அப்பா..அப்பா..”என்றுஅழுகிறது.

“ஓமோம்…அப்பா எருக் கும்பத்துக்கை இருந்துதான் வரப்போகிறார்”என்று வாய் தடுமாறி சொல்கிறாள் கோகிலாம்பாள்.

சொற்கள் கொல்லும்…வெல்லும் என்பார்கள்.

அன்றுஅவள் சொன்னசொற்களேஅவளைகுற்றவாளிக்கூண்டில் ஏற்றவைத்துவிட்டன.
கொல்லப்பட்ட ஐயரின் தந்தையிடம் பேத்தி,அம்மா சொன்னதைசொல்லிவிட்டாள். அவர் உஷாரடைந்தார். கோகிலாம்பாளின் கெட்டகாலம் மழை வந்துஅந்த எருக்கும்பத்தை கரைத்துவிட உடல் வெளியே வந்துவிட்டது.

கோகிலாம்பாளும் அவளது காதலன் வேலுப்பிள்ளையும் சம்பவத்தை தெரிந்திருந்து மறைத்த பசுபதியும் கைதானார்கள். பசுபதி அப்ரூவர் ஆனான். வழக்குயாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்குவந்தது.

நீதியரசர் எச்.டபிள்யூ. தம்பையா. குற்றவாளிகளின் சார்பில் முதலில் ஆஜராகவிருந்தவர் ஊர்காவற்றுறைஎம்.பி. சட்டத்தரணிநவரத்தினம். அப்பொழுதுஅவர் ஒருசிரேஷ்ட சட்டத்தரணி. ஆனால் பொம்பிளைஒருத்திசம்பந்தப்பட்டஅந்தவழக்கில் அவர் ஆஜராவதைதந்தைசெல்வநாயகம் விரும்பவில்லை. அச்சமயம் ஜூனியராக இருந்தஅமிர்தலிங்கத்தையேகுற்றவாளிகளுக்காக வாதிடுமாறு கேட்டுக்கொண்டார்.

அவரும் தந்தைசொல் மீறாததனையன்.

ஐயர் வெட்டிக்கொல்லப்பட்டதுசாணம்பூசியவீட்டுத்தரையில். ஆனால் இரத்தம் தரையில் மாத்திரம்தான் என்றுநம்பியதுகுற்றவாளிகளின் விதி. இரசாயணபகுப்பாய்வாளர்கள் கொழும்பிலிருந்துவந்துபார்த்தபோதுதரையில் இரத்தக்கறை இல்லை. சாணம் மறைத்துவிட்டது. ஆனால் கதவுநிலையில் கீழ்ப்புறத்தில் பதிந்துகாய்ந்திருந்த இரத்தத்துளிகள் அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டன.

வேலுப்பிள்ளைக்குமரணதண்டனை. கோகிலாம்பாளுக்கு ஆயுள்தண்டனை. பசுபதிக்குவிடுதலை.
அந்தத்தண்டனைகளின் தீர்ப்புச்செய்தியைஎழுதிஅச்சுக்குகொடுக்கும்பொழுது இரவுஎட்டுமணிக்கும் மேலாகிவிட்டதுஎன்றுதமதுநூலில் குறிப்பிடுகிறார் அன்னலட்சுமி இராஜதுரை. பிறிதொருசந்தர்ப்பத்தில் ஆயுள்கைதியாககோகிலாம்பாளைவெலிக்கடைசிறையில் சந்திக்கின்றார். அங்குமேலதிகாரிகளினதும் சிறைக்கைதிகளினதும் நன்மதிப்பைப்பெற்றவளாகவும் அவள் அங்குதிகழ்ந்திருக்கிறாள். சிங்களமும் பேசுவதற்குபழகினாள்.

அந்தவழக்கில் அமிர்தலிங்கம் தோற்றுப்போனதால் எதிர்க்கட்சியானதமிழ்க்காங்கிரஸ் மேடைகளில் அவரை கோகிலாம்பாள் அமிர்தலிங்கம் என்றுவர்ணிக்கப்பட்டார்.
கோகிலாம்பாள் குறித்துயாழ்.மாவட்டத்தில் ஒருசிந்துப்பாடலும் அறிமுகமாகி பிரபலமானதாக தனதுசிறைக்குறிப்புகள் பற்றியஅகாலம் நூலில் பதிவுசெய்கிறார் புஷ்பராணி.
அந்தசிந்துப்பாடல்:
உருத்திரபுரம் கேசு
உறுதியானகேசு
அழுத்தமாகப் பேப்பர்களைத்
திருத்தமாக நானும் பார்த்துப்
பொருத்தமாகப் பாடிவந்தேன் தெரியுமா..? இது
உருத்திரபுரம் கேசுதானேபுரியுமா..?
மின்சாரவசதி இல்லாதிருந்த அந்த கிராமத்துக் கொலைச்சம்பவம் அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் ஈழமண்ணில் எத்தனைஎத்தனைகொலைகள். எத்தனை எத்தனை புதைகுழிகள். அவையெல்லாம் நூறோடுநூறாக ஆயிரத்தோடுஆயிரமாக மறக்கப்பட்டுவிட்டன.
ஆனால் கோகிலாம்பாள் இன்றும் ஏடுகளில் நினைவுகளில் வாழ்கிறாள்.
கோகிலாம்பாளைதுரோகத்தின் சின்னம் என்பதா…? அல்லதுகாதலின் பரிதாபத்துக்குரியஅடையாளம் எனச்சொல்லவா? எனக்கேட்கிறார் புஷ்பராணி.
இந்தக்கேள்விஅவள் பற்றிய செய்தி அறிந்த எம்மையும் தொடருகிறது.

(பயணங்கள் தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: