முப்பது வருட போரில் இறந்தவர்களுக்காக இப்படியான சர்வமத பிரார்த்தனையை ஒழுங்கு செய்திருப்பவர்களுக்கு என நன்றிகள். இந்த போர் வேற்று நாடுகளுக்கு எதிராக நடந்தது அல்ல. சொந்த மக்களிடையே ஏற்பட்ட, மிக நீண்டகாலமாக இரத்தம் சிந்திச் செய்த போர். இத்துடன் 1971, 87 நடந்த உயிர்ச்சேதங்களையும் சேர்த்துகொள்ளும் போது மிகவும் துன்பகரமானது .
ஒரு உயிரை இழப்பது கடினமானது ஆனால் இலங்கையில் ஏராளமான உடல் உறுதியான, திறமையான இளைஞர்களை இழந்திருக்கிறோம். இது ஏற்பதற்கு மிகவும் கடினமானது.
தனிபட்டமுறையில் 500 மேற்பட்ட நண்பர்களை பல தரப்பிலும் {இன மத வித்தியாசமின்றி இழந்திருக்கிறேன் இதையிட்டு பல நாட்கள் அழுதிருக்கிறேன். இருபத்தைந்து வருடங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் ஏற்பபட்ட இழப்புகளை மறக்கமுடியவில்லை.
எந்த ஒரு இழப்பும் ஆரம்பத்தில் மனச்சோர்வைக் கொடுக்கும். பின்பு கோபமாக மாறும் அதன்பின்பு சோகமாகவும் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதாக அமைகிறது.இப்படியான காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் இந்த மனரீதியாக எம்மை தயார்படுத்தும்.
இந்து மற்றும் புத்த சமயம் சார்ந்த நாட்டில் இருந்து வந்ததால் என்னால் சம்சார என்ற சித்தாந்த்தில் எனது மனம் திருப்தியடைகிறது. மனிதஉயிர் மயிர்கொட்டி புழுபோல் ஒரு இலையில் இருந்து மறு இலைக்கு தாவுவது போன்று உயிர்கள் ஒரு உடலில் இருந்து போகின்றன என அழகான தத்துவக் கோட்பாட்டில் அடைக்கலம் அடைந்து ஆறுதல் அடைகிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்